வாகன ஓட்டிகளுக்கு.. பெரிய ஸ்வீட் நியூஸ்.. இனி சுங்கச்சாவடிகளே கிடையாது.. திமுகவின் அசத்தல் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

2024 லோக்சபா தேர்தலுக்காக திமுக சார்பாக தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

No More toll gates in National Highway DMK announced in Lok Sabha election manifesto

நாடு முழுவதும் பெண்களுக்கு மாதம் ரூ.1,0000 நிதி உதவி

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

பெட்ரோல் விலை ரூ.75-க்கு விற்பனை செய்யப்படும்

நாடு முழுவதும் மாணவர்கள் கடன்கள் ரத்து செய்யப்படும்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500க்கு குறைக்கப்படும்

கவர்னர் பதவி ஒழிக்கப்படும் வரை, மாநிலத்திற்கு ஒரு கவர்னரை மாநில முதல்வரின் ஒப்புதலோடு நியமிக்க வேண்டும். ஆளுநர்களுக்கு குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கும் பிரிவு 361 திருத்தப்படும்.

பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது

திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்

100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்

இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை

ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படும்

இஸ்லாமியர் நலனுக்கான சச்சார் கமிட்டி அறிக்கை பரிந்துரைகள் தாக்கல் செய்யப்படும்

மாணவர்களுக்கு வட்டியில்லாமல் ரூ.4 லட்சம் கடன் வழங்கப்படும்

சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும்

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மத்திய அரசு தேர்வு

புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்

பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு உடனே அமல்படுத்தப்படும்

இந்தியா முழுவதும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்

நோ டோல்கேட்: இதில் முக்கியமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

வேட்பாளர் லிஸ்ட்: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில்,

No More toll gates in National Highway DMK announced in Lok Sabha election manifesto

1‌ ) வடசென்னை - கலாநிதி வீராசாமி

2 ) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்

3 ) மத்திய சென்னை - தயாநிதி மாறன்

4 ) காஞ்சிபுரம் (தனி) - செல்வம்

5 ) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

6) வேலூர் - கதிர் ஆனந்த்

7 ) தருமபுரி - அ.மணி

8 ) திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை

9 ) சேலம் - செல்வ கணபதி

10 ) கள்ளக்குறிச்சி - மலையரசன்

11 ) நீலகிரி (தனி) - ஆ.ராசா

12 ) பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி

13 ) கோவை - கணபதி ராஜ்குமார்

14 ) தஞ்சாவூர் - ச.முரசொலி

15 ) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி

16 ) தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார்

17 ) ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு

18 ) பெரம்பலூர் - அருண் நேரு

19 ) தேனி - தங்க தமிழ்செல்வன்

20 ) ஈரோடு - பிரகாஷ்

21 ) ஆரணி - தரணி வேந்தன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+