ஹோண்டா சிட்டி, ஹுண்டாய் வெர்னா ஓரம் போனது.. கடும் போட்டியிலும் டாப் இடத்தில் வோக்ஸ்வேகன் விர்டஸ்
காம்பாக்ட் செடான் சந்தை 2024ல் சரிவை எதிர்கொண்டது, ஒட்டுமொத்தமாக, விற்பனை சரிவு இருப்பினும், Volkswagen Virtus இந்த போக்கை மீறி கடந்த வருடத்தை விட சற்று அதிகமாகவே விற்பனை செய்வதோடு, இந்த பிரிவில் உள்ள, ஹுண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி ஆகியவற்றின் விற்பனையைவிட அதிகமாக விற்பனை செய்து வருகிறது. 2024ம் ஆண்டு ஜூலை மாதம் இறுதிக்குள் வோக்ஸ்வேகன் 11,572 விர்டஸை விற்றுள்ளது. இதே காலத்தில், கடந்த வருடம் 11,395 யூனிட் விர்டஸ் விற்பனையாகியிருந்தது. அப்படிப் பார்த்தால், விற்பனையில் சிறிது அதிகரிப்புதான் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதே பிரிவிலுள்ள வேறு எந்த செடானும் வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. நெகட்டிவாக போய்க்கொண்டுள்ளது.

ஹூண்டாய் வெர்னா தனது விற்பனையில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது. 2023 ஜனவரி முதல் ஜூலை வரை வெர்னா 19,344 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 11,364 யூனிட்களாக கடுமையாக சரிந்தது. இந்த சரிவு இருந்தபோதிலும், காம்பேக்ட் செடான் பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. விர்டஸ் சொகுசான அனுபவத்தை வழங்குகிறது. ஆனால் அதை ஒப்பிட்டால் வெர்னா உயரமான வாடிக்கையாளர்களுக்கு சொகுசு அனுபவத்தை வழங்கவில்லை என்பது இதற்கு ஒரு காரணம். விர்டஸ் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம் என்பதால் பெரிய வேகத் தடைகளிலும் எளிதாக ஏறி இறங்கும். வெர்னா மற்றும் ஹோண்டா இங்குதான் வீக்.

போட்டியாளர்களின் விற்பனையில் சரிவு
ஹோண்டா சிட்டியும் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. 2023 இல் 13,122 யூனிட்களை விற்றதில் இருந்து 2024 இல் வெறும் 7,117 யூனிட்களாக மாறியது. இந்தச் சரிவு காம்பாக்ட் செடான் பிரிவில் உள்ள வீழ்ச்சியான போக்கை பிரதிபலிக்கிறது. ஸ்கோடாவின் ஸ்லாவியாவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்த விற்பனையைக் கண்டது, ஆனால் நீண்ட காலம் இந்திய சந்தையில் கோலோச்சிய ஹோண்டா சிட்டியை விட, ஸ்லாவியாதான் அதிகமாக விற்று வருகிறது.

இதற்கு காரணம், வோக்ஸ்வேகன் குரூப்பை சேர்ந்த ஸ்லாவியாவின் கிரவுண்ட் கிளியரன்சும் அதிகம் என்பதுதான் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள். 2024 ஜூலை நிலவரப்படி, ஸ்கோடா ஸ்லாவியா 8,443 யூனிட்களை விற்றது. இந்த பிரிவு விற்பனையில் ஸ்லாவியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
மாருதி சியாஸ் போராட்டம்
மாருதி சியாஸ் இந்த பிரிவின் விற்பனை தரவரிசையில் கடைசி இடத்தில் உள்ளது. அதன் விற்பனை 2023 இல் 7,193 யூனிட்களில் இருந்து 2024 இல் வெறும் 4,206 யூனிட்டுகளாகக் குறைந்தது. அப்கிரேட் செய்யாமல் சியாஸை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மாருதி நடத்தி வருவது இதற்கு காரணம். மாருதி சிறிய வகை எஸ்யூவி கார்களில்தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. இருப்பினும் காலை நீட்டி சொகுசாக பயணிக்கனும், மைலேஜ் கிடைக்கனும், ஆனால் விலையும் குறைவாக இருக்கனும் என நினைக்கும் வாடிக்கையாளர்கள் சியாஸை நாடுகிறார்கள்.
காம்பாக்ட் மற்றும் சப்-காம்பாக்ட் எஸ்யூவிகளின் போட்டி அதிகரித்து வருவது செடான் விற்பனையை பாதித்துள்ளது. மக்கள் இப்போதெல்லாம், ஸ்விப்ட், ஐ20 போன்ற ஹேட்ச்பேக்குகள் மற்றும் செடான் கார்களை விட்டு விலகி, எஸ்யூவிகளை நோக்கி நகர்வதால், அவற்றின் விற்பனை அதிகரித்து வருவதை மாதாந்திர தரவுகள் காட்டுகின்றன. ஆனாலும், வோக்ஸ்வேகன் விர்சஸ் தனி நபராக செடான் மார்க்கெட்டில் தனித்து தெரிகிறது.
ஜெர்மனி வாகனங்களுக்கே உரித்தான டிரைவரை ஃபோகஸ் செய்த என்ஜின் பவர், ஸ்டீரிங் ஃபீட் ஃபேக் உள்ளிட்ட சிறப்பான ஹேண்டிலிங் மற்றும் உயரமும், நீளமும் அதிகம், உலகளவில் கிராஷ், டெஸ்டில் ஸ்லாவியா போலவே, வெர்சஸ், ஃபைவ் ஸ்டார்களை வாங்கியது என்பதாலும், இந்த செடான் மார்க்கெட்டில், மன்னனாக விளங்கி வருகிறது விர்சஸ். ஆனால், ADAS போன்ற நவீன தொழில்நுட்பங்களை விரைவாக வோக்ஸ்வேகன் இந்த காருக்கு கொண்டுவராவிட்டால் விற்பனை சரிய வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள் சந்தை நிபுணர்கள்.
ஏனெனில் 4 சிலிண்டர் கொண்ட சிட்டி, வெர்னாவுடன் ஒப்பிட்டால், 4 சிலிண்டர் கொண்ட விர்சஸ் விலை அதிகம். 3 சிலிண்டர் கொண்ட விர்சஸ்தான் ஏறத்தாழ பிற போட்டியாளர்களின் விலைக்கு ஈடாக உள்ளது. இப்படி விலை அதிகமாக இருப்பினும் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டால் அடாஸ் போன்ற பிற வசதிகள் குறைவாகும்.
| மாதிரி | விற்பனை YTD ஜூலை 2024 | விற்பனை YTD ஜூலை 2023 |
|---|---|---|
| Volkswagen Virtus | 11,572 வாகனங்கள் | 11,395 வாகனங்கள் |
| ஹூண்டாய் வெர்னா | 11,365 வாகனங்கள் | 19,344 வாகனங்கள் |
| ஸ்கோடா ஸ்லாவியா | 8,443 வாகனங்கள் | 10,835 வாகனங்கள் |
| ஹோண்டா சிட்டி | 7,117 வாகனங்கள் | 13,122 வாகனங்கள் |
| மாருதி சியாஸ் | 4,206 வாகனங்கள் | 7,193 வாகனங்கள் |
காம்பாக்ட் செடான் பிரிவு மற்ற வாகன வகைகளில் இருந்து அதிக அழுத்தத்தை எதிர்கொள்கிறது. முன்பு ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களை விரும்பி வாங்குபவர்களிடையே எஸ்யூவி வாகனங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.

காம்பாக்ட் செடான்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது, ஏனெனில் அவை வளர்ந்து வரும் SUV சந்தையுடன் தொடர்ந்து போட்டியிடுகின்றன. டிரைவிங் எக்ஸ்பீரியன்சை விரும்புபவர்கள் மட்டுமே செடானை தேடுகிறார்கள். பார்க்க பெரிதாக தெரிய வேண்டும், மேடு பள்ளங்களில் பயமின்றி ஏறி இறங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எஸ்யூவியை நோக்கி ஓடுகிறார்கள். ஹேட்ச்பேக்கை உயரம் கூட்டி எஸ்யூவி என்று அழைத்தாலும் அதையும் வாங்க ரெடியாக இருக்கிறார்கள். இப்படி ஒரு சந்தையிலும் வெர்சஸ் தனது நம்பர்களை பாதுகாத்து வருகிறது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய்












Click it and Unblock the Notifications