புதிய அரசு பஸ்களின் நிறத்தை.. பச்சை, மஞ்சள், சிவப்பு என்று மாற்றிய தவெக அரசு.. ஷாக்கடிக்கும் காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு புதிதாக வாங்கும் நகர பேருந்துகளுக்கு பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற மூன்று வண்ணங்கள் அடிக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிதாக வாங்கப்படும் புறநகர் பேருந்துகளின் நிறத்தை மாற்ற தமிழகப் போக்குவரத்துத் துறை அதிரடியாக முடிவு செய்துள்ளது. முன்னதாக இந்தப் பேருந்துகளுக்கு மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் பூசப்பட்டிருந்த நிலையில், அது சர்ச்சையானது.

automobile

கலர் தொடர்பான ரசனையே இல்லாமல் அடிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. ஏனென்றால் திமுக ஆட்சியில் லைட் நீளம், சிவப்பு, பர்பில் என்று நிறைய வண்ணங்களில் நல்ல பேருந்துகள் வாங்கப்பட்டன.

இப்படிப்பட்ட நிலையில் விஜய் ஆட்சியில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறத்தை போலவே மஞ்சள் - சிவப்பு நிறத்தில் பேருந்துகள் விடப்பட்டதால்.. பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது புதிய பேருந்துகளுக்கு பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று நிறங்கள் கொண்ட கலர் ஸ்கீமை அரசு இறுதி செய்துள்ளது.

சர்ச்சையின் பின்னணி என்ன?

தவெக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, போக்குவரத்துத் துறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்காக சில புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மினி பேருந்துகள் மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசுப் பேருந்துகளுக்கு அடர் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் பூசப்பட்டது.

இந்த கலர் ஸ்கீம் அப்படியே ஆளுங்கட்சியான தவெகவின் கட்சி கொடியின் நிறத்தைப் போலவே இருப்பதாக சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பார்க்கவும் அவ்வளவு ஈர்ப்பாக இல்லை.

பொதுமக்களின் வரிப்பணத்தில் வாங்கப்படும் அரசுப் பேருந்துகளுக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் கொடி நிறத்தைப் பூசுவது சரியல்ல என்றும், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் எப்போதும் அரசியல் சாராத பொதுவான நிறத்திலேயே இருக்க வேண்டும் என்றும் பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் அரசுப் பேருந்துகளின் நிறத்தை மாற்றுவது வெளியூர்ப் பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இணையத்தில் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

1,614 புதிய பேருந்துகள் மற்றும் நிற மாற்றம்

இதையடுத்து தற்போது வாங்கப்படும் புதிய பேருந்துகளின் நிறம் மாற்றப்பட்டு உள்ளது. ஜெர்மனியின் கே.எஃப்.டபிள்யூ வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் பல்வேறு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்காக மொத்தம் 1,614 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இந்தப் பேருந்துகள் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் புறநகர் பேருந்துகளாகப் பயன்படுத்தப்பட உள்ளன.

முன்னதாகத் திட்டமிடப்பட்ட மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திற்கு எழுந்த தொடர் விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தற்போது பேருந்துகளின் நிறத்தில் மாற்றம் செய்துள்ளனர். அதன்படி, இனி தயாரிக்கப்படும் புதிய புறநகர் பேருந்துகளில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களுடன் பச்சை நிறமும் சேர்க்கப்பட்டு, மூன்று வண்ணக் கலவையில் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய நிற மாற்றத்தின் மூலம், கட்சி கொடி சாயல் என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முயற்சித்துள்ளது.

புதிய நிறக் கலவையுடன் கூடிய இந்த நவீன புறநகர் பேருந்துகளின் கூண்டு கட்டும் பணிகள், புதுக்கோட்டை மாவட்டம் விரலிமலையில் உள்ள பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதிய வடிவமைப்பின்படி, பேருந்தின் வெளிப்புறத்தில் பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இருக்கும் . அதோடு பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையிலும் பூசப்பட்டு வருகின்றன. கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைந்தவுடன், இந்தப் பேருந்துகள் படிப்படியாகத் தமிழ்நாட்டின் பல்வேறு கோட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் எனப் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+