மொத்த நாடும் திரும்பி பார்க்க போகுது.. தமிழ்நாட்டில் நடக்க போகும் செம சம்பவம்.. எதிர்காலமே மாறும்
சென்னை: டாடா நிறுவனம் தமிழ்நாட்டை அதன் மின்சார கார்கள் மற்றும் மற்ற உயர் ரக கார்களின் தலைமையிடமாக மாற்ற முடிவு செய்துள்ளது. அதாவது லேண்ட் ரோவர், ஜாகுவார் போன்ற உயர் ரக கார்கள் மற்றும் மின்சார கார்களை மொத்தமாக இனி தமிழ்நாட்டில் மட்டும் தயாரிக்க முடிவு செய்துள்ளது டாடா நிறுவனம்.
தமிழ்நாட்டில் ராணிப்பேட்டையில் இந்த வாரம் முதல் லேண்ட் ரோவர், ஜாகுவார் கார்களை உற்பத்தி செய்ய உள்ளனர். இதற்கான மிகப்பெரிய முதலீட்டை கடந்த மாதம் உறுதி செய்த டாடா நிறுவனம் அமைய போகும் புதிய தொழிற்சாலையில் Jaguar மற்றும் Land Rover Car களை உற்பத்தி செய்ய உள்ளதாக அறிவித்து அதற்கான பணிகளில் உள்ளது.

தூத்துக்குடியில் கடந்த மாதம் முதல் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் நடந்து வருகிறது தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி தொழிற்சாலைகளின் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது. அதன்படி தூத்துக்குடியில் பின்வரும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ACME - 52,000 கோடி
பெட்ரோனாஸ் - 34,000 கோடி
செம்பிகார்ப் (இன்று) - 36,238 கோடிகள்
லீப் கிரீன் எனர்ஜி (இன்று)- 22,842 கோடிகள்
என்டிபிசி ஆகியவை முதலீடு செய்துள்ளனர். இந்திய அரசு ஏற்கனவே VOC துறைமுகத்தை ஹைட்ரஜன் சேமிப்பு மையமாக அறிவித்துள்ளது.
வின்பாஸ்ட்: சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடிக்கு செல்ல முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக இந்த முடிவை வின்பாஸ்ட் நிறுவனம் எடுத்துள்ளதாம்.
டெஸ்லாவிற்கு போட்டியாக இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனம்தான் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக செய்திகள் வருகின்றன. வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை தளமாகக் கொண்ட ஒரு வாகன நிறுவனமாகும் இது வியட்நாமின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும்.
அருகருகே வருகின்றன: தூத்துக்குடியில் திங்கள் முதல் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் தொடங்க உள்ளது. இந்த இடத்திற்கு அருகிலேயே தூத்துக்குடி சிப்காட்டில் அமையும் சர்வதேச பர்னிச்சர் பார்க் அமைக்கப்பட உள்ளது.
இப்போது இ வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறது. மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மின்சார வாகனங்களை (EV) தயாரிப்பதில் விரிவடையும் முதல் கார் பிராண்டாகும். உலகின் நம்பர் 1 பிராண்ட் இதுதான். இந்த நிறுவனம்தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதுவும் தூத்துக்குடிக்கு தேடி வந்துள்ளது.
டாடா நிறுவனம்: இது போக டாடா நிறுவனமும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனமும் சென்னைக்கு பதில் ராணிப்பேட்டைக்கு சென்றுள்ளது. 2 மாத இடைவெளியில் தமிழ்நாட்டில் இரண்டு பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன. தமிழ்நாட்டில் முதலீட்டிற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதை பறைசாற்றும் விதமாக தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகின்றன.
டாடா மோட்டார்ஸ் குழுமம் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த 13.3.2024 முகாம் அலுவலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5.000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
என்ன உற்பத்தி: தமிழ்நாட்டில் ராணிப்பேட்டையில் மிகப்பெரிய முதலீட்டை கடந்த மாதம் உறுதி செய்த டாடா நிறுவனம் அமைய போகும் புதிய தொழிற்சாலையில் Jaguar மற்றும் Land Rover Car களை உற்பத்தி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆலையில் மூன்றில் இரண்டு பங்கு Jaguar மற்றும் Land Rover Car களை உற்பத்தி செய்யவும், மீதமுள்ளவை Tata EVக்காகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
717 டாஸ்மாக்கை மூடுறதா சொன்னீங்களே! ஓட்டேரி லிஸ்ட்ல இல்லை? தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வைத்த டிமாண்ட் -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications