Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக, அதிமுக அப்படி சொன்னதும்.. உடனே டெல்லி போட்ட பிளான்.. வாகன ஓட்டிகளுக்கு பெரிய சிரமம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடில் மேலும் 20 சுங்கச்சாவடிகளைத் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில்தான் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதிமுக அறிக்கையிலும் இதே விஷயம் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. மொத்தமாக 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Tamil Nadu to get 20 more new toll gates soon Againts the plan of DMK AIADMK promises

பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையில் 6 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன., விக்கிரவாண்டி - நாகை நெடுஞ்சாலையில் 3 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன.

ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. சித்தூர்-தச்சூர் விரைவுச் சாலையில் 3 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 20 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை; சமீபத்தில்தான் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதிமுக அறிக்கையிலும் இதே விஷயம் கூறப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் மத்திய பாஜக அரசு கூடுதல் டோல் கேட் அமைக்க முடிவு செய்துள்ளது.

ஒரே டோல்: இதற்கு இடையில் தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட திட்டமிட்டுள்ளது. இதற்காக FASTags எப்படி அப்டேட் செய்ய வேண்டும். இன்னும் 4 நாட்களில்.. அதாவது பிப்ரவரி 29ல் இதற்கான கால அவகாசம் முடிவிற்கு வருகிறது.

இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை KYC முழுமையடையாத FASTags களை செயல் இழக்க வைக்க முடிவு செய்துள்ளது. இவை பிப்ரவரி 29, 2024 க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்க செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு வாகனத்திற்கு. இனிமேல் ஒரு FasTagகள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் ஒரே பாஸ்ட் டாக்கை ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி பயன்படுத்தப்படும் பழைய பாஸ்ட் டாக்குகள் ஜனவரி 31க்குப் பிறகு செயலிழக்கச் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

எப்படி அப்டேட் செய்வது?: இதற்காக FASTags எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

வங்கியுடன் இணைக்கப்பட்ட FASTag இணையதளத்தைப் பார்வையிடவும். தேவையான பக்கத்தை அணுக, 'FASTag' என்ற சொல்லை கூகுள் செய்யலாம்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்
அங்கே உள்ள "எனது சுயவிவரம்" என்ற பகுதிக்குச் சென்று KYC தாவலைக் கிளிக் செய்யவும்
முகவரிச் சான்று மற்றும் மற்ற விவரங்கள் உள்ளிட்ட தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு அப்டேட் கொடுக்கவும்.
அந்த பகுதியில் நீங்கள் அப்டேட் செய்த KYC காட்டப்படும்.

உங்கள் FASTag நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?

நீங்கள் fastag.ihmcl.com என்ற பிரத்யேக இணையதளத்தில் இதை சோதனை செய்யலாம்:
இணையப் பக்கம் திறக்கும் போது, ​​இணையதளத்தின் வலது மேற்புறத்தில் உள்ள உள்நுழைவை கிளிக் செய்ய வேண்டும்
உள்நுழைய OTP வரக்கூடிய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வழங்க வேண்டும்
உள்நுழைந்த பிறகு, டாஷ்போர்டில் உள்ள சுயவிவரப் பகுதியைக் கிளிக் செய்யவும்
சுயவிவரப் பிரிவில், உங்கள் FASTag இன் KYC நிலை மற்றும் பதிவுச் செயல்பாட்டின் போது சமர்ப்பிக்கப்பட்ட சுயவிவர விவரங்கள் ஆகியவற்றைப் சோதனை செய்யலாம்
உங்கள் FASTag இணைக்கப்பட்ட வங்கியின் இணையதளத்திலும் இதைச் செய்யலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+