"பார்டர் ரோடு".. தமிழ்நாட்டில் முதல்முறையாக வருது 10 வழி சாலை! எங்கேன்னு கேட்டால்! ஆடிப்போய்டுவீங்க
சென்னை: மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை இணைக்கும் 10 வழி சென்னை அவுட்டர் சாலையின் பணிகள் இரண்டு கட்டமாக நிறைவடைந்து ஜனவரியில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் திறக்கப்படும் முதல் 10 வழியாக சாலையாக இது மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காட்டுப்பள்ளி துறை முகத்தை மனதில் வைத்து இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, கிண்டி கத்திப்பாரா - மணலி இடையே 100 அடி சாலை, இருளியூர் - புழல் இடையே சென்னை புறவழிச்சாலை, வண்டலூர் - மீஞ்சூர் இடையே சென்னை புறவழிச்சாலை உட்பட பல முக்கிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், சரக்கு லாரிகள் முதல் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த சாலைகள் 24 மணி நேரமும் டிராஃபிக்கில் சிக்கி தவித்து வருகின்றன. இதற்கு தீர்வு காணவே தற்போது 10 வழி சாலை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
எப்படி அமைக்க முடிவு: இதன்படி மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்படும்.
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், இந்த சாலைகள் வழியாக பயணிக்கும் பயணிகள் கடுமையான டிராபிக் ஜாமை எதிர்கொள்கின்றனர். இங்கே போக்குவரத்துச் சுமையைக் குறைக்க, குறிப்பாக சரக்கு வாகனங்கள் எளிதாக இந்த சாலையில் செல்ல மாமல்லபுரம் - மீஞ்சூர் இடையே பெரிய வெளிவட்டச் சாலை அமைக்க, அரசு முன்மொழிந்தது.
இருப்பினும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் அரசு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இறுதியில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது, இத்திட்டம் புத்துயிர் பெற்று, சென்னை பார்டர் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி வரை நீட்டிக்கப்பட்டு, 196 அடி அகலத்தில் சாலை அமைக்கப்பட உள்ளது. மாமல்லபுரத்தில் துவங்கி எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகம் வரை 132 கி.மீ.க்கு 2 கட்டங்களாக சாலை அமைக்கப்படும்.
இத்திட்டத்தை விரைந்து முடிக்க எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி, எல் அண்ட் டி உள்ளிட்ட தனியார் துறைமுக நிறுவனங்கள் தமிழக அரசை வலியுறுத்தின. இந்த சாலை முடிந்தவுடன் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த கோரிக்கைகளுக்கு பதிலளித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஈ.வி. வேலு மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட உயர் அதிகாரிகள் குழுவினர் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். முதல் கட்டமாக, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) மூலம் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகத்திற்கு ₹2,673 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து 2 கட்டப் பணிகள் நடைபெறும்.
இந்த சாலையின் முதல் கட்டம் ஜனவரி மாதம் திறக்கப்படும். கட்டுமானப் பணிகளை தாமதமின்றி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க அமைச்சர் உதயநிதி உத்தரவிட்டுள்ளார். இதனால் 24 மணி நேரமும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications