சொல்லியடித்த டாடா.. முடிவுக்கு வந்த மாருதியின் 40 ஆண்டு கால ஆதிக்கம்.. சபாஷ்! சரியான போட்டிதான்
மும்பை: இந்தியாவில் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கார் சந்தையில் போட்டியும் அதிகரித்துவிட்டது. இதற்கிடையே கடந்த 40 ஆண்டுகளாக மாருதி நிறுவனத்தின் வசம் இருந்த சாதனையை இப்போது முதல்முறையாக டாடா தட்டி தூக்கியுள்ளது. இது ஆட்டோமொபைல் துறையின் ஒரு மகத்தான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
நம் நாட்டில் என்ன தான் ஏகப்பட்ட கார் நிறுவனங்கள் இருந்தாலும் மாருதி நிறுவனத்திற்கு இருக்கும் செல்வாக்கே தனி. நிச்சயம் நீங்களோ அல்லது உங்களைச் சுற்றி பலர் மாருதி காரை வைத்திருப்பார்கள். அந்தளவுக்கு மாருதியின் செல்வாக்கு இருந்தது.

அப்படி டாப் இடத்தில் இருந்த மாருதியை அசால்டாக தட்டி தூக்கியிருக்கிறது டாடா.. 40 ஆண்டுகள் இந்திய கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மாருதி இப்போது மிகப் பெரிய சறுக்கலைச் சந்தித்திருக்கிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
டாடா மோட்டர்ஸ்:
இந்தியாவில் டாடா குழுமத்தின் கீழ் இல்லாத பொருட்களே இல்லை என்று நாம் சொல்லலாம்.. உப்பு முதல் விமானம் வரை எல்லாமே டாடா குழுமத்தின் வசம் இருக்கிறது. அப்படி ஆட்மொபைல் துறையில் டாடாவின் நிறுவனமாக இருப்பது தான் டாடா மோட்டர்ஸ்.. டாடா மோட்டார்ஸின் முதல் கார் டாடா சியரா.. இது 1991இல் அறிமுகப்படுத்தப்பட்டது, பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
இருப்பினும் டாடா என்றாலே உள்நாட்டுத் தயாரிப்பிற்குத் தான் முக்கியத்துவம் தருவார்கள். அப்படி முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் காரா 1998ம் ஆண்டு இண்டிகா அறிமுகப்படுத்தப்பட்டது. அது தாறுமாறான ஹிட் அடித்தது. இதனால் ஆட்டொமொபைல் சந்தையை டாடா மொத்தமாகப் புரட்டிப்போடும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஏமாற்றமே மிஞ்சியது. டாடா மோட்டர்ஸ் அடுத்து வெளியிட்ட எந்தவொரு காரும் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

டாடா பஞ்ச்:
இதனால் சுமார் 20 ஆண்டுகளாகவே திணறி வந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காத டாடா குழுமம் தொடர்ந்து இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து வந்தது. பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு கடந்த 2019ல் டாடா குழுமம் டாடா ஹாரியர் என்ற மிட் ரேஞ்ச் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது. அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த காருக்கு பிறகே டாடா மோட்டர்ஸுக்கு நல்ல காலம் பிறந்தது என சொல்லலாம்.
ஆனால், இதை விட பெரிய வெற்றி என்பது 2021ல் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா பஞ்ச் மூலம் கிடைத்தது. சந்தைக்குக் கொண்டு வரப்பட்டது முதலே டாடா பஞ்ச் கார் தாறுமாறான ஹிட் சப்-காம்பாக்ட் எஸ்யுவி காரான பஞ்ச், வெளியாகும் போதே பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எல்கடிரிக் கார் என மூன்று வெர்ஷனில் வெளியானது. இந்தியச் சாலைகளுக்கு மிக ஏற்றதாகவும் பயணிகளுக்குச் சவுகரியமாகவும் இருந்ததால் இதன் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்தது

புதிய சாதனை:
இந்தச் சூழலில் தான் கடந்தாண்டு இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான கார் என்ற சாதனையை டாடா பஞ்ச் தனது வசமாக்கியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாகவே இந்த சாதனை மாருதி சுசுகி வசம் இருந்த நிலையில், அதை டாடா தட்டி தூக்கியிருக்கிறது. கடந்தாண்டு மட்டும் சுமார் 2.02 லட்சம் டாடா பஞ்ச் கார்கள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான கார் மாடலை தயாரிப்பவர் என்ற சாதனை டாடா வசம் சென்றுள்ளது.
அடுத்து 2 முதல் 4 இடங்களை மாருதி தன்வசமே வைத்திருக்கிறது. 1.91 லட்சம் யூனிட் விற்பனையுடன் மாருதி வேகன்ஆர் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், சுஸுகி எர்டிகா (1.90 லட்சம் யூனிட்கள்), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (1.88 லட்சம் யூனிட்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஹூண்டாய் க்ரெட்டா (1.86 லட்சம் யூனிட்கள்) அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
இந்தியாவில் கடந்த காலங்களில் அதிகம் விற்பனையான கார் மாடல்கள்.
1985 முதல் 2004 வரை- மாருதி சுசுகி 800
2005 முதல் 2017 வரை - மாருதி சுசுகி ஆல்டோ
2018- மாருதி சுஸுகி டிசையர்
2019- மாருதி சுஸுகி ஆல்டோ
2020- மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
2021, 2022- மாருதி சுஸுகி வேகன்ஆர்
2023- மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்

சபாஷ் சரியான போட்டி
இப்படி 40 ஆண்டுகளாக ஆட்டொமொபைல் சந்தையில் மாருதி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இப்போது டாடா பஞ்ச் அதை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. டாடா பஞ்சின் பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 6.13 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. அதேபோல டாடா பஞ்சின் சிஎன்ஜி வேரியண்ட் விலை ரூ. 7.22 லட்சத்தில் இருந்தும் டாடா பஞ்சின் இவி வேரியண்ட் விலை ரூ. 9.99 லட்சத்தில் இருந்தும் தொடங்குகிறது. இவை அனைத்தும் ex-showroom விலையாகும். வரி மாநிலத்தை பொறுத்து மாறுபடும்.
டாடா பஞ்ச் இப்போது முதலிடத்தை பிடித்துள்ளது மகத்தான சாதனையாக பார்க்கப்படுகிறது. இது இந்திய ஆட்டமொபைல் சந்தை மெல்ல மிகப் பெரிய மாற்றத்தை நோக்கிச் செல்வதையே காட்டுகிறது. ஆட்டொமொபைல் துறையின் எதிர்காலமாகக் கருதப்படும் மின்சார கார் சந்தையில் டாடா ஏற்கனவே கவனம் செலுத்தத் தொடங்கிவிட்ட நிலையில் வரும் காலத்தில் போட்டி மேலும் கடுமையாகும் என்றே தெரிகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications