ஆகா.. டாடா கொடுத்த சர்ப்ரைஸ்! சர்ரென குறைந்த இவி கார்களின் விலை! இனி எல்லாரும் இதைத்தான் வாங்குவாங்க
சென்னை: Tata Motors இன் துணை நிறுவனமான Tata Passenger Electric Mobility (TPEM) அதன் Nexon.ev மற்றும் Tiago.ev ஆகியவற்றின் விலைகளை குறைத்துள்ளது. இதன் மூலம் இவி வாகனங்களின் விலை எதிர்பார்க்காத அளவிற்கு குறைந்துள்ளது.
Nexon.ev விலைகள் ₹ 1.2 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளன, Tiago.ev விலைகள் ₹ 70,000 வரை குறைக்கப்பட்டுள்ளன. Nexon.ev MR (நடுத்தர வீச்சு)க்கான புதிய விலைகள் ₹ 14.49 லட்சத்திலும், Nexon.ev LR (நீண்ட தூரம்) 16.99 லட்சத்திலும், Tiago.ev இன் புதிய விலை ₹ 7.99 லட்சத்திலும் தொடங்குகிறது

பேட்டரி செலவு: பேட்டரி செலவை குறைத்ததன் மூலம் காரின் விலை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். விலைக் குறைப்பு பற்றி விளக்கம் அளித்த டாடா நிறுவனம், ஒரு EV-யின் ஒட்டுமொத்த செலவில் பேட்டரியின் விலை கணிசமான பங்கைக் கொண்டுள்ளது. சமீப காலமாக பேட்டரி செல்களின் விலை குறைந்துள்ளது. இதனால் கார் உற்பத்தி விலையும் குறைந்துள்ளது.
இதனால் கார்களின் விலை குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக EVகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், EV களை நாடு முழுவதும் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களுக்கு வசதியாக விலையை குறைத்துள்ளோம், என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவி சார்ஜிங்: உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாய்ண்ட் அமைக்கப்பட உள்ளது.
சாலை ஓரம் அரசு நிலத்தில் தமிழ்நாடு முழுக்க 100 இடங்களில் சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இந்த சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இங்கே மின்சாரம் வழங்கப்பட்டு அதில் சார்ஜிங் பாய்ண்ட் இயங்கும்.
வரும் காலங்களில் மக்கள் பயன்பாட்டை பொறுத்து இந்த சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதை மனதில் வைத்தே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டாங்கேட்கோ) ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மின்சார வாகனங்களுக்கு (இ-வாகனங்கள்) மாறுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. சென்னை மத்திய விநியோக வட்டம் மயிலாப்பூரில், டி. நகர், எழும்பூர், அண்ணாசாலை ஆகிய இடங்களில் அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் ஆடியோ காட்சிகள் ரோட் ஷோ நடைபெற்றது.
வியாழக்கிழமை நடைபெற்ற 'கோ எலக்ட்ரிக் பிரசாரம்' நிறைவு விழாவில் மின்வாரிய அதிகாரிகள், இ-வாகனங்களைப் பயன்படுத்துவதால் மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமின்றி பெட்ரோல், டீசல் வாங்கும் செலவையும் மிச்சப்படுத்துவது குறித்து விரிவாக மக்களுக்கு விளக்கினர்.












Click it and Unblock the Notifications