சில நாட்களில்.. திறக்கப்படும் சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வேயின் ஒரு பகுதி.. தொடங்கிய டெஸ்ட் ரைடு!
சென்னை: சென்னை - பெங்களூர் சாலையில் முடிக்கப்பட்ட இடங்களில் டெஸ்ட் ரைடு நடத்தப்பட்டு வருகிறது. முடிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக டெஸ்ட் ரைடு நடத்தப்படுகிறது.
262-கிமீ நீளமுள்ள பெங்களூர்-சென்னை விரைவுச்சாலை (BCE) முடிவடையும் தருவாயில் உள்ளது. BCE திட்டம் என்று அழைக்கப்படும் சென்னை - பெங்களூர் சாலை அதிகாரப்பூர்வமாக NE-7 என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் பெங்களூரு அருகே ஹோஸ்கோட்டையும், தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு சாலையாகும். இதில் கர்நாடக பகுதி அடுத்த மாதம் அல்லது டிசம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு பகுதியில் 70% பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதம் உள்ள பணிகள் நடக்க உள்ளன. இதனால் கர்நாடக பகுதிகள் மட்டும் முதல் கட்டமாக திறக்கப்பட உள்ளது. தற்போதைய பயண நேரமான ஏழிலிருந்து எட்டு மணி நேரத்துடன் ஒப்பிடும்போது, பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை இந்த புதிய சாலை இரண்டு முதல் இரண்டரை மணி நேரமாகக் குறைக்கும். இந்த அதிவேக நெடுஞ்சாலையானது நகரங்களுக்கு இடையிலான தூரத்தை 80 கி.மீ வரை குறைக்கும். அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 120 கி.மீ.
எந்த ரூட்: பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையை டிசம்பர் 2024 ல் முன் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 17,930 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த விரைவுச் சாலை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்லும். ஹோஸ்கோட், மாலூர், பங்காரப்பேட்டை, கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ், வெங்கடகிரிகோட்டா, பலமனேர், பங்காருபாலம், சித்தூர், ராணிப்பேட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை வழித்தடத்தில் அமைந்துள்ள நகரங்கள்.
இந்த நெடுஞ்சாலை 240 கிமீ தூரத்திற்கு எட்டு வழிச்சாலையாக இருக்கும், மீதமுள்ளவை 22 கிமீ உயரம் கொண்ட உயர்மட்ட 8 வழி சாலையாக இருக்கும். சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை 21 கி.மீ தூரத்திற்கு 4 வழிச்சாலை இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட சாலை, சுமார் ₹5,850 கோடி செலவில் கட்டப்படும். இதன் மூலம் சென்னை துறைமுகத்திற்கு சரக்குகள் தொடர்ந்து வருவதை உறுதி செய்யும்.
நெரலூர் முதல் தருமபுரி வரையிலான 94 கிமீ நீள நெடுஞ்சாலை (NH-844) சுமார் ₹3,870 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. மீன்சுருட்டியிலிருந்து சிதம்பரம் வரை (NH-277) இணைக்கும் 31 கிமீ 2-வழி நெடுஞ்சாலை சுமார் ₹720 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இரண்டு நெடுஞ்சாலைகளும் பிராந்தியத்தில் தொடர்ச்சியான இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
2 மணி நேரம் சாத்தியம் இல்லை: இந்த திட்டப்படி இரண்டு மணி நேரத்தில் பெங்களூர் - சென்னை இடையெய் செல்ல முடியாது. மாறாக கர்நாடகாவின் பெங்களூரு அருகே ஹோஸ்கோட்டையும், தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு சாலையாகும். இந்த இரண்டு பகுதிகளை 2 மணி நேரத்தில் இணைக்கலாம் என்று முதல் கட்ட டெஸ்ட் டிரைவிங் தெரிவிக்கிறது.
சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே டெஸ்ட் டிரைவ் தொடங்க உள்ளது. அடுத்த மாதம் முதல் இதுவரை கட்டப்பட்ட சாலைகளில் முதல் கட்டமாக டெஸ்ட் டிரைவ் தொடங்க உள்ளதாம்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி முக்கியமான சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதன்படி பெங்களூர் மற்றும் சென்னை இடையேயான கிரீன்ஃபீல்ட் காரிடார் மற்றும் பெங்களூரு சாட்டிலைட் டவுன்ஷிப் ரிங் ரோடு (STRR) திட்டம் ஆகிய இரண்டையும் டிசம்பர் 2024 க்குள் திறந்து வைப்பதாக உறுதியளித்து உள்ளார்.
கிரீன்ஃபீல்ட் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்றும் அவர் கூறினார். நேற்று நடந்த கர்நாடக பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டத்தின் பாராட்டு நிகழ்வில் கட்கரி இந்த அறிவிப்பை வெளியிட்டார். ரூ. 17,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் திட்டமிடப்பட்டதை விட ஒரு வருடம் முன்னதாக 2024 டிசம்பருக்குள் முடிக்கப்படும் என்று கூறினார்.
டெஸ்ட் டிரைவ்: சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே டெஸ்ட் டிரைவ் தொடங்க உள்ளது. அடுத்த மாதம் முதல் இதுவரை கட்டப்பட்ட சாலைகளில் முதல் கட்டமாக டெஸ்ட் டிரைவ் தொடங்க உள்ளதாம்.
ஜூன் 2022 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பெங்களூருவின் சுற்றுப்புறங்களை இணைப்பதையும், நகரத்திற்குள் போக்குவரத்தை 30% குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. 2018ல் அறிவிக்கப்பட்ட ரூ.17,930 கோடி மதிப்பிலான பசுமைத் சாலை திட்டம், ஆறு ஆண்டுகளாக வளர்ச்சியில் உள்ளது, மேலும் இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்படும் என கட்கரி தெரிவித்துள்ளார்.
-
20 நாள் பொறுமையா இருந்தா ரூ.70 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்..!! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications