2 சக்கர வாகனங்களுக்கும்.. இனி ஃபாஸ்டேக் சுங்கக் கட்டணம்? மத்திய அரசு பரிசீலனை? உண்மை என்ன?
சென்னை: ஜூன் 26, 2025 அன்று முதல் இந்தியாவில் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதாக பரவலான விவாதங்கள் எழுந்துள்ளன. இணையத்திலும் இது தொடர்பாக செய்திகள் உலவிய வண்ணம் உள்ளன. ஆனால் இது தொடர்பாக அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை.. இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் பொய்யானது.. அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
சுங்கக் கட்டணம்: இரு சக்கர வாகனங்களுக்கு கட்டாயமா?
சுங்க கட்டணம் தொடர்பாக அரசாங்கம் புதிய முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வந்தன. இதில் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஏற்கனவே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்தால், போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன.

சவால்கள்
இரு சக்கர வாகன ஓட்டிகள் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும். கிராமப்புறங்களில் உள்ளவர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி இல்லாதவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், இரு சக்கர வாகனங்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு இது கூடுதல் செலவாக இருக்கும். அதே நேரத்தில் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் எனவும், புதிய மாடல்கள் அறிமுகமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டண விகிதங்கள்
இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டால், கட்டண விகிதங்கள் நான்கு சக்கர வாகனங்களை விட குறைவாகவே இருக்கும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படலாம். 2025 ஆம் ஆண்டில் இது நடைமுறைக்கு வந்தால், இரு சக்கர வாகன உபயோகிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
முடிவு எடுக்கப்பட்டுவிட்டதா?
ஆனால் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுவரை வதந்திகள் மட்டுமே பரவி வருகின்றன. உண்மை இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், இரு சக்கர வாகன ஓட்டிகள் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது ஒருபுறம் அவர்களுக்கு சுமையாக இருந்தாலும், மறுபுறம் அரசாங்கத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இந்த வருவாய் சாலைகளை மேம்படுத்தவும், பராமரிக்கவும் பயன்படும். இது இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்.
இழப்பு
தினசரி நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் திட்டத்தை அரசாங்கம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் 2025 ஆகஸ்ட் 15 முதல் தொடங்க உள்ளது. இந்த வருடாந்திர பாஸின் விலை ரூ.3,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில், பயனர்கள் 200 முறை சுங்கச்சாவடியை கடக்கலாம் அல்லது ஒரு வருடம் வரை பாஸை பயன்படுத்தலாம். இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரை இந்த பாஸ் செல்லுபடியாகும்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) கூற்றுப்படி, இந்த திட்டம் வழக்கமாக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களின் ஆண்டு சுங்க கட்டணச் செலவை 70% வரை குறைக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.7,000 வரை சேமிக்க முடியும். இதனால் சுங்க சாவடிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும் நிலையில்தான் ஜூன் 26, 2025 அன்று முதல் இந்தியாவில் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதாக பரவலான விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால் இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் பொய்யானது.. அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications