வண்டி ரிஜிஸ்ட்ரேஷனை மொத்தமாக நீக்கிடுவாங்க! கவனமாக இருங்க.. வாகன ஓட்டிகளுக்கு போன எச்சரிக்கை
சென்னை: வாகன ஓட்டிகளுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றி தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
கடந்த சில வாரம் முன் காரைக்குடியில் காசிம் என்பவர் 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர் ஒருவருக்கு தனது KTM என்ற இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுத்த குற்றத்திற்காக போலீஸ் அவர் மீது நடவடிக்கை எடுத்தது. காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தால் sec. 199(A) & 129 MV Act -ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கில் அந்த சிறுவருக்கு இருசக்கர வாகனத்தை இயக்குவதற்காக கொடுத்துள்ள குற்றமானது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இந்நீதிமன்றம் ரூ.26,000/- அபராதமும் மற்றும் 12 மாத காலத்திற்கு இந்த இரு சக்கர வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைக்கவேண்டும் (To be suspended) என்று 02.02.2024ல் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அபராதத் தொகையை காசிம் த-பெ. பிரான்மலை என்பவர் இந்நீதிமன்றத்தில் செலுத்திவிட்டார். எனவே 12 மாத காலத்திற்கு மேற்படி இருசக்கர வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைக்கவேண்டும் எனவும் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199(A)ன் கீழ் உத்தரவிடப்படுகிறது என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
போலீஸ் எச்சரிக்கை: இந்த நிலையில்தான் 18- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளித்தால், அந்த வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைப்போம் என்று தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கையில், 8- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் எண்ணத்தில் உள்ள பெற்றோர்களா நீங்கள்? 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி.
12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்தி வைக்கப்படும். கவனம் தேவை பெற்றோர்களே என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்தி விதி: தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
விதி மீறல்: டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
முக்கியமாக சென்னையில் அதிகம் இப்படி நடக்கிறது. அதோடு சிலர் சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து விதி மீறல் செய்பவர்களை கண்காணிக்க, அவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய வழிமுறை ஒன்றை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது.
புதிய விதி: இந்த நிலையில்தான் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள், வண்ண விளக்குகளை பொருத்தி பேருந்துகளை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் வாகனங்களில் பல வண்ண விளக்குகள் பொறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பல வண்ண ஒளி விளக்குகள் எதிரில் வரும் வாகன ஓட்டுநரின் கவனத்தை சிதறடிப்பதால் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சோதனையின் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications