62 லட்சம் ரூபாய் கார்.. ஓனர் கண் முன்னே எரிந்து சாம்பலான.. பிரபல நிறுவனத்தின் இவி கார்.. ஷாக்கிங்
சென்னை: நேற்று சட்டீஸ்கரில் நெடுஞ்சாலையில் சட்டீஸ்கர் டூ டெல்லி சாலையில் சென்று கொண்டிருந்த வால்வோ சி40 ரீசார்ஜ் இவி கார் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தை உரிமையாளர் கேமராவில் படம்பிடித்துள்ளார். இந்த சம்பவத்தில் அவர் காயமின்றி தப்பினார்.
சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் எஸ்யூவி நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் திடீரென தீ பிடித்து சாம்பலாகி உள்ளது. டிரைவர் சீட் பக்கத்தில் தீ மிகவும் தீவிரமாக பிடித்து அதன்பின் காரின் மற்ற பகுதிகளில் தீ பரவி உள்ளது.

தீ விபத்திற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வோல்வோ அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிடவில்லை.
வோல்வோ சி40 ரீசார்ஜ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.61.25 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தப்பட்டது. இது 402 BHP மற்றும் 660 Nm ஐ உருவாக்கும் இரட்டை மின்சார மோட்டார்கள் மூலம் இயக்கப்படுகிறது. இது 78 kWh பேட்டரியைப் பயன்படுத்துகிறது, இது ஒரு முறை சார்ஜ் செய்தால் (WLTP சுழற்சி) அதிகபட்சமாக 530 கிமீ வரம்பை வழங்குகிறது.
சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் இ பைக் எனப்படும் எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை, மகள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் துரைவர்மா மற்றும் அவரது மகள் மோகனப்ரீத்தி ஆகியோர் பலியானார்கள்.
Unbelievable to see an Volvo EV catching fire !
— Prashanth Rangaswamy (@itisprashanth) January 29, 2024
May be hybrid is the real way forward in Indian weather conditions ?
pic.twitter.com/SZvXgZln6V
இரவில் சார்ஜ் போடும் போது பைக் பேட்டரி வெடித்து புகை ஏற்பட்டுள்ளது. இந்த புகையில் மூச்சு முட்டி இருவரும் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
புனே சம்பவம்: இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் புனேவில் ஓலா நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ பைக் திடீரென தீ பிடித்தது. சாலையில் நின்று கொண்டு இருந்த பைக் திடீரென தீ பிடித்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பைக்கில் அப்போது யாரும் இல்லை. பார்க் செய்யப்பட்டு இருந்த பைக் திடீரென வெயிலில் பற்றி எரிந்தது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.
இதற்கு ஓலா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், புனேவில் நடந்த விபத்து குறித்து நாங்கள் அறிந்தோம். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். விபத்துக்கு பின் என்ன காரணம் இருக்கும் என்று விசாரித்து விரைவில் முடிவுகளை அறிவிப்போம். தொடர்ந்து வாடிக்கையாளர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அந்த பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் நன்றாக இருக்கிறார். பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம், இதை மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டு உள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் கார் தீ விபத்து; இந்த நிலையில்தான் சென்னையில் பிரபல இவி நிறுவன கார் ஒன்று தீ பிடித்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. MG நிறுவனத்தின் ZS EV கார் தீ பிடித்து சாம்பலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சாதாரணமாக நிறுத்தப்பட்ட கார் தீ பிடித்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் சரவணகுமார் என்பவர் செய்துள்ள போஸ்டில், ஆறு வாரங்களுக்கு முன்பு நான் 26.61 லட்சத்திற்கு வாங்கிய எனது MG ZS EV கார், நிறுத்தப்பட்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்தது. நான் காரை ஓட்ட கூடவில்லை, வெறுமனே நிறுத்தப்பட்டு இருந்த போது தீ பிடித்தது. இந்த சமபவம் என் குடும்பம் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதிர்ச்சி சம்பவம்; போலீஸாருக்கும், தீயணைப்புக் குழுவினருக்கும் தீயை அணைக்க 30 நிமிடம் ஆனது. எம்ஜி நிறுவனத்தின் தலைமையகத்தை தொடர்பு கொள்ள நான் இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவர்கள் எனது புகார்களை செவி கொடுத்து கேட்கவில்லை. இப்படி கார் தீ பிடித்து சாம்பலானாதான் மூல காரணத்தைக் கண்டறியவோ அல்லது ஒரு தீர்வை வழங்கவோ அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
எனது அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைத்து, மன வேதனையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் இருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை. MG, ஒரு புகழ்பெற்ற பிராண்டாக கருதப்படுகிறது. ஆனால் அப்படிப்பட்ட நிறுவனம் அதன் வாடிக்கையாளரை முற்றிலும் அவமதித்து, இந்தச் சூழலை மிகவும் கவனக்குறைவாகக் கையாள்வதைப் பார்ப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது, என்று கூறியுள்ளார்.
என்ன காரணம்?: சரி இது போன்ற இ கார்கள், பைக்குகள் திடீரென தீ பிடிக்க அல்லது வெடிக்க என்னதான் காரணம் என்று பார்க்கலாம். இ கார்கள் பைக்குகள் வெடிக்க முக்கியமான காரணம் அதன் பேட்டரிதான். போன், லேப்டாப் சில இடங்களில் தீ பிடிக்கும், பவர் பேங்க் வெடிக்கும் அல்லவா? அது போலத்தான் இதுவும். இ கார்கள், பைக்குகள் பொதுவாக லித்தியம் அயான் பேட்டரிகளை பயன்படுத்தும். இதை பொதுவாக இ கார்கள், பைக்குகள் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்.
இதை இந்தியாவில் இறக்குமதி செய்யும் போது நிறுவனங்கள் அதை பெரிதாக சோதனை செய்வது இல்லை. அதோடு பல ஆயிரம் பேட்டரிகள் இறக்குமதி செய்யப்படும் போது சில பேட்டரிகளில் குறைகள் இருப்பதை கண்டுபிடிக்க முடிவது இல்லை. இந்த பேட்டரிகளில் ஏற்படும் பாதிப்பே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் ஆகிறது. ஸ்வீடனை சேர்ந்த RISE Research Institutes என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் இ கார்கள், பைக்குகள் அதிகரிக்க அதிகரிக்க இது போன்ற விபத்துகளும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
சின்ன விபத்து; லித்தியம் அயான் பேட்டரிகளில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டால், வாகனம் விபத்துக்கு உள்ளாகும் போது அதில் டேமேஜ் ஏற்பட்டால் அந்த பேட்டரிகள் வெடிக்கவோ, தீ பிடிக்கவோ வாய்ப்பு உள்ளது. அதேபோல் இதன் வெப்பநிலை அதிகரிப்பது, வோல்டேஜ் அதிகரிப்பது ஆகியவையும் திடீரென இ கார்கள், பைக்குகள் வெடிக்க காரணமாக அமையும். சிறிய அளவிலான விபத்துகள் காரணமாக இ பைக்குகளின் பேட்டரிகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக இ பைக்கில் உள்ள லித்தியம் அயான் பேட்டரி ஏதாவது ஒரு வகையில் சேதம் அடைந்தால், அல்லது வெப்பநிலை உயர்ந்தால் அது உள்ளே இருக்கும் கெமிக்கல்களை வாயுவாக வெளியிடும். இது திடீரென நெருப்பை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் மூலம் இ பைக்குகள் வெடிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல் பேட்டரி பெயிலியர் மூலமாக இ பைக்குகள் வெடிக்கலாம். தயாரிப்பு குறைபாடு, வாகனம் ஓட்டுபவர் பைக் பேட்டரியை தவறாக கையாள்வது, வெப்பநிலை அதிகரிப்பது, குறைந்த குவாலிட்டி பேட்டரிகளை பயன்படுத்துவது ஆகியவை பேட்டரி பெயிலியர் ஆக காரணமாக இருக்கலாம்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications