தவெக பெண்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம்.. பொன்ராஜ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக கட்சியைச் சேர்ந்த பெண் தொண்டர்களை இழிவாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேட்டியளித்த பெண் தொண்டர்களை இழிவாக விமர்சித்ததாக, அரசியல் விமர்சகரும், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகருமான பொன்ராஜ்க்கு எதிராக, கடந்த மார்ச் 26 ஆம் தேதி தற்போதைய சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்குமார் ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில், மே 12ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், கடலூர் போலீசாரும் வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.

Vijay

இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். பொன்ராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "யூடியூப் சேனல் பேட்டியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மட்டுமே மனுதாரர் பதிலளித்தார். மற்றபடி பெண்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை." எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், "தற்போது அமைச்சர்களாக உள்ள இருவர், தேர்தலுக்கு முன் அளித்த புகார்கள் மீது புதிய அரசு பொறுப்பேற்ற பின், எந்தவித ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் அன்புமணி, "மறைந்த முன்னாள் குடியரசு தலைவரின் செயலாளராக பணியாற்றியவர் இதுபோல பேசியிருக்கக் கூடாது. அவரது பேச்சு ஒட்டுமொத்த பெண்களையும் குறிக்கும் வகையில் பொதுப்படையாகவே உள்ளது. மனுதாரரின் பேச்சு அடங்கிய வீடியோக்கள், இன்னும் இணையதளத்தில் உள்ளன. வழக்கு FIR நிலையில் மட்டுமே உள்ளதால், வழக்கை ரத்து செய்யக் கூடாது" என வாதம் முன் வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், பொன்ராஜின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று, இந்த மனுக்கள் மீது தீர்ப்பளித்த நீதிபதி, பொன்ராஜ் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்து, அவரது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+