நடுவர்கள் எங்க பக்கம் இருக்காங்களா.. அர்ஜென்டினா தோல்விக்கு காத்திருக்காங்க.. கொந்தளித்த மெஸ்ஸி!

Subscribe to Oneindia Tamil

நியூ ஜெர்சி: அர்ஜென்டினா அணிக்கு நடுவர்கள் சாதகமாக செயல்படுவதாக தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்முறையாக லியோனல் மெஸ்ஸி பதில் அளித்துள்ளார். இங்கிலாந்து அணியுடன் தோற்றிருந்தால், அர்ஜென்டினா அணியை விமர்சிக்க பலரும் தயாராக இருந்ததாக கூறிய மெஸ்ஸி, மைதானத்தில் எங்களின் திறமையால் மட்டும் வெல்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி தொடர்ச்சியாக அதிரடி வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இருப்பினும் அர்ஜென்டினா அணி கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி பெற்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக எகிப்து அணிக்கு எதிரான போட்டியில் நடுவர்கள் அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Lionel Messi

அதேபோல் கேப் வெர்டே, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளின் போது அர்ஜென்டினா அணி செய்த தவறுகளை நடுவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் மெஸ்ஸியின் பிராண்ட் அந்தஸ்தை ஃபிஃபா பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்று அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக செயல்படுவதாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் அர்ஜென்டினா அணி மீதான சர்ச்சை குறித்து ஜாம்பவான் வீரரான லியோனல் மெஸ்ஸி பதில் அளித்துள்ளார். வழக்கமாக எந்தவொரு போட்டிக்கு முன்பாகவும் மெஸ்ஸி நிதானம் இழக்க மாட்டார். எதிரணியை எதிர்த்து ஆடும் போது கூட அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை என்று அர்ஜென்டினா அணி நேரடியாக கூறும். இம்முறை மெஸ்ஸி நேரடியாகவே ஹேட்டர்களை விமர்சித்துள்ளார்.

மெஸ்ஸி பேசுகையில், யார் என்ன வேண்டுமானாலும் சொல்லி கொள்ளட்டும். நாங்கள் களத்தில் எங்களின் திறமையால் மட்டுமே வெல்கிறோம். எந்தவொரு அணியும் எந்த வெற்றியையும் சும்மா தூக்கி கொடுக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக உலகின் டாப் 2 அணிகளில் ஒன்றாக அர்ஜென்டினா இருந்திருக்கிறது. தொடர்ந்து 2 உலகக்கோப்பைகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறோம்.

அது தற்செயலாக நடக்க வாய்ப்பில்லை. நாங்கள் மட்டும் இங்கிலாந்து அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் தோற்றிருந்தால், எங்களை விமர்சிக்க ஒரு பெரும் கூட்டமே காத்திருந்தது. ஆனால் அவர்களுக்கு அந்த வாய்ப்பை அர்ஜென்டினா கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மெஸ்ஸியின் பேச்சு அர்ஜென்டினா அணி ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+