புது பைக் வாங்கி இருக்கீங்களா? இந்த 6 டிப்ஸ் முக்கியம்.. இல்லைனா பெரிய பிரச்சினை ஆகிடும்!
சென்னை: பலரும் ஆசையாக பைக் வாங்கும் போதிலும், அதன் பிறகு அதை எப்படிப் பராமரிப்பது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. இதனால் கொஞ்சக் காலத்திலேயே மைலேஜ் குறைவது, தேவையில்லாத பிரச்சினைகள் என வரிசையாகச் சிக்கல் வர ஆரம்பித்துவிடுகிறது. எனவே, புதிய பைக்கில் சில செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளன.
பலரும் ஆசைக்காகப் பெருந்தொகை கொடுத்து பைக்கை வாங்கிவிடுகிறார்கள். அல்லது இஎம்ஐ-இல் போட்டு பைக்கை வாங்கிவிடுகிறார்கள். ஆனால், புது பைக்கை எப்படிப் பராமரிப்பது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. புது பைக்கில் அவர்கள் செய்யும் சில சிறிய தவறுகள், பைக்குகளை மொத்தமாகப் பாதிக்கிறது. புது பைக்கில் நாம் செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம்

புது பைக்
ஷோரூமில் இருந்து பைக்கை எடுத்தவுடன் "நான் முறுக்க முறுக்க என்ன பறக்கப் பறக்க விடுவாயோ" என முறுக்க தோன்றும். ஆனால், தயவு செய்து புது பைக்கை அப்படி மிக அதிகமாக த்ரோட்டில் செய்யாதீர்கள். அந்தந்த கியரில் மிதமான வேகத்திலேயே பைக்கை ஓட்டுங்கள். புது பைக் வாங்கும் போது என்ஜினுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். அப்போது தான் பைக்குகள் நீண்ட காலம் நன்றாக இருக்கும்.
மேலும், புதிய பைக் வாங்கியவுடன் லாங் டிரைவ் போக கால் துடிக்கும்.. ஆனால், அதைக் கண்டிப்பாகத் தவிர்க்கலாம். புதிய என்ஜின் என்பதால் செட் ஆக சில காலம் ஆகும். இதனால் முதல் சில ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதைத் தவிர்க்கவும். முடிந்தவரை நகரங்களுக்குள் ஓட்டவும் குறுகிய பயணத்திற்கும் மட்டுமே பயன்படுத்தவும்.
இதுதான் காரணம்
பொதுவாக புது வண்டியை சில ஆயிரம் கிமீ வரை ஒருவரே ஓட்ட வேண்டும் என்பார்கள். அதில் லாஜிக் இல்லாமல் எல்லாம் இல்லை.. பைக் ஓட்டுவதில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஒருவர் பட்டென கியரை மாற்றுவார்.. ஒருவர் பட்டென வேகத்தைக் கூட்டுவார். புதிய பைக்கில் என்ஜின் உள்ளிட்ட பகுதிகள் புதிதாக இருக்கும். அது செட் ஆக சில காலம் பிடிக்கும். எனவே, ஒரே நபர் ஓட்டினால் தான் சரியாக செட் ஆகும். மாற்றி மாற்றி ஓட்டினால் உள்ளே இருக்கும் பார்ட்டுகள் செட் ஆவதில் சிக்கல் ஏற்படும்.
மைலேஜ்
அதேபோல ஆரம்பத்தில் மைலேஜ் குறைவாகக் கொடுத்தால் பதற வேண்டாம்.. என்னடா பைக் எடுக்கும் போது அதிக மைலேஜ் சொன்னாங்க.. இப்போ கம்மியா இருக்கே எனக் குழம்ப வேண்டாம்.. புது பைக்கில் எப்போதுமே மைலேஜ் குறைவாகவே இருக்கும். பைக் எல்லாம் செட் ஆகி, ஒன்று அல்லது இரண்டு சர்வீஸ்களுக்கு பிறகே மைலேஜ் மேம்படும். எனவே அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
சர்வீஸ் முக்கியம்!
அடுத்து மிக மிக முக்கியமானது பைக்கை சரியான நேரத்தில் சர்வீஸுக்கு விடுவது.. அதுவும் சில அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் சர்வீஸ் செய்யுங்கள். முதல் ஓராண்டுக்கு சர்வீஸ் இலவசமாக இருக்கும் என்பதால் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகும் முடிந்தவரை அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் சர்வீஸ் செய்யலாம். உங்களுக்கு நன்கு தெரிந்த நபர் என்றால் மட்டுமே உள்ளூர் மெக்கானிக்கிடம் வண்டியைத் தரலாம்.
புதிய பைக்காக இருந்தாலும் சரி, பழைய பைக்காக இருந்தாலும் சரி ஓவர்லோட் செய்யாதீர்கள். குறிப்பிட்ட பைக்கில் அதிகபட்சம் இத்தனை கிலோ தான் ஏற்ற முடியும் என்பதைக் குறிப்பிட்டு இருப்பார்கள். சராசரியாக இருவர் செல்ல அது போதுமானதாக இருக்கும். ஆனால், அதை விட்டுவிட்டு ஓவர்லோடு செய்தால் பைக் நிச்சயம் பாதிக்கப்படும். சஸ்பென்ஷன் தொடங்கி பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications