Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீக் எண்ட் என்றாலே லாங் டிரைவ் பறக்கும் நபரா நீங்க.. 6 "நறுக்" கார் மாடல்கள்.. கடைசி ஒன்னு முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு வாரமும் வீக் எண்ட் வந்த உடன் லாங் டிரைவ் செல்லும் நபர் நீங்கள் என்றால்.. உங்களுக்கு ஏற்ற கார் நிச்சயம் தேவை.. அடிக்கடி லாங்க டிரைவ் போகும் நபருக்கு பக்காவாக செட் ஆகும் 6 கார் மாடல்கள் என்ன.. அதன் பட்ஜெட், வசதிகள், ப்ளஸ், மைனஸ் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோருக்குக் காரை எடுத்துக் கொண்டு ஜாலியாக ஒரு லாங் டிரைவ் போக வேண்டும் என்பதே ஆசை.. பலரும் வீக் எண்ட் வந்துவிட்டாலே லாங் டிரைவ் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

automobile car

இதுபோல வீக் எண்டில் லாங் டிரைவ் செல்ல விரும்புவோர் சரியான காரை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஜாலியாக செல்லும் லாங் டிரைவ் கூட துயரமான ஒன்றாக மாறும்.. லாங் டிரைவ் செல்வோரின் கார் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.. நீண்ட தூரம் சென்றாலும் களைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும்.. இதுபோல பல வசதிகள் தேவை.. இந்த வசதிகள் எல்லாம் இருக்கும் கார்கள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி பலேனோ: நமது நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார் நிறுவனமான மாருதி சுஸுகியின் கார் மாடல் பலேனோ.. இதில் பல வசதிகள் கொட்டி கிடக்கிறது. இந்திய நிறுவனமாக இருப்பதால் நமது நெடுஞ்சாலைகளுக்கு ஏற்ப காரின் சஸ்பென்ஷனை எப்படி அமைக்க வேண்டும் என்பது அவர்களுக்கு மிகத் தெளிவாகவே தெரிந்து இருக்கிறது. இந்த காரில் அவர்கள் அதை மிகச் சிறப்பாகவே செய்துள்ளார்கள். 1.NA பெட்ரோல் எஞ்சினுடன் வரும் இந்த காரில் நீங்கள் எவ்வளவு தூரம் சென்றாலும் களைப்பே தெரியாது.

ஹோண்டா அமேஸ்: நமது நாட்டில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்று இந்த ஹோண்டா அமேஸ்.. 1.2L NA பெட்ரோல் i-VTEC இன்ஜினைக் கொண்ட இது, ஆட்டோமெடிக் CVT மாடல்களில் இருக்கிறது.. ஆட்டோமெடிக் எல்லாம் கார் ஓட்டும் ஃபீல் தராது.. எனக்கு மேனுவல் கியர் தான் வேண்டும் என்றால் அதற்கும் 5-ஸ்பீடு மேனுவல் ஆப்ஷன் இருக்கிறது.. இதன் ஹைலட்டே இதன் சஸ்பென்ஷன் தான்... கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல இதன் சைஸ் சிறியதாக இருந்தாலும் காரின் பவர் மிரள வைக்கும்.

டாடாவின் அல்ட்ராஸ்: அல்ட்ராஸ் என்பது பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்.. 1.2L பெட்ரோல் மற்றும் 1.5L டீசல் எஞ்சின் என இரண்டு ஆப்ஷனில் வரும் இந்த காரில் சஸ்பென்ஷன் ட்யூனிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.. இதனால் நீண்ட தூரப் பயணத்திற்கு இது பக்காவாக இருக்கும். மேலும், இது டாடா கார் பாதுகாப்பு குறித்து கவலை தேவையில்லை. ஏனென்றால் பாதுகாப்பு ரேட்டிங்கில் பெரியவர்களுக்கு 5 ஸ்டாரும், குழந்தைகளுக்கு 4 ஸ்டாரும் பெற்றுள்ளது. பாதுகாப்பு தான் முக்கியம் என்போர் கண்ணை மூடிக்கொண்டு இந்த காரை வாங்கலாம்.

நெக்ஸான்: இந்த காரை நீங்கள் பொதுவாகவே சாலைகளில் அதிகம் பார்த்து இருக்கலாம்.. நமது நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். இது 1.2லி டர்போ பெட்ரோல் எஞ்சின் அல்லது 1.5லி டீசல் எஞ்சினுடன் வருகிறது. நமது நாட்டின் கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்றவாறு இந்த காரை டிசைன் செய்துள்ளனர். மேலும், லாங் டிரைவ் செல்ல உங்களுக்குத் தேவையான அனைத்தும் இதில் பக்காவாக இருக்கிறது. டாடா கார் என்பதால் வழக்கம் போல பாதுகாப்பில் இது டாப். லாங் டிரைவ். சிட்டிக்குள் ஓட்டுவது என இரண்டிற்கும் ஏற்ற கார்.

மாடல் ஹூண்டாய் i20: பிரீமியம்-ஹேட்ச் காரான இதில் பல கலக்கல் வசதிகள் இருக்கிறது. 1.2L பெட்ரோல் எஞ்சின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர் மாடலாக வரும் இந்த கார் இந்திய நெடுஞ்சாலைகளில் பக்காவாக இருக்கும். முந்தைய ஹூண்டாய் கார்களில் சஸ்பென்ஷன் ஒரு பிரச்சினையாகவே இருக்கும். அவை இந்தியச் சாலைகளுக்கு ஏற்றபடி இருக்காது. ஆனால், புதிய ஐ 20 மாடல்களில் சஸ்பென்ஷன் சிக்கல் சரி செய்துள்ளனர். எனவே, இதையும் கன்சிடர் செய்யலாம்.

மஹேந்திரா XUV 3XO: கடைசியாக லிஸ்டில் இருப்பது மஹேந்திரா XUV 3XO.. லாங் டிரைவ் எஸ்யுவி என்றால் மஹேந்திராவை தவிக்கவே முடியாது.. 1.2L டர்போ பெட்ரோல் அல்லது 1.5L டீசல் இன்ஜின் மாடல்களல் கிடைக்கும் இதன் வீல்பேஸ் பெரியது என்பதால் அதிக வேகத்தில் சென்றாலும் குலுங்காமல் கெத்தாக இருக்கும்.. பாதுகாப்பிலும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற இந்த கார் லாங் டிரைவிற்கு ஏற்றதாக இருக்கும். ஆட்டோமொபைல் துறையில் உள்ள வல்லுநர்களின் முதல் சாய்ஸாகவும் இந்த மஹிந்திரா XUV 3XO இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+