கார் நம்பர் பிளேட் வாங்குறீங்களா? அதென்ன BH சீரிஸ் நம்பர் பிளேட்? எப்படி வாங்குவது? ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் (MoRTH) 2021 இல் BH நம்பர் சீரிஸ் பிளேட் அறிமுகம் தொடங்கப்பட்டது.

BH தொடர் எண் தகடு (பாரத் நம்பர் பிளேட்) அடிக்கடி மாநிலம் விட்டு மாநிலம் குடியேறுபவர்களுக்கு என்று கொண்டு வரப்பட்ட நம்பர் ஆகும். இவர்களுக்கான வாகனப் பதிவு செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த நம்பர் பிளேட் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு அடிக்கடி இடமாற்றம் செய்பவர்கள் இந்த நம்பர் பிளேட்டை பயன்படுத்த முடியும்.

automobile

BH நம்பர் பிளேட்டுக்கான தகுதி, பலன்கள் மற்றும் விண்ணப்ப செயல்முறை இங்கே விளக்கப்பட்டுள்ளது:

மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், பாதுகாப்புத் துறை பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் 4க்கும் மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் அலுவலகங்களைக் கொண்ட தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் BH தொடர் நம்பர் பிளேட்டைத் தேர்வுசெய்ய தகுதியுடையவர்கள்.

BH தொடர் நம்பர் பிளேட் பலன்கள்: BH நம்பர் பிளேட், வேறொரு மாநிலத்திற்கு இடம்பெயரும்போது வாகனத்தை மறுபதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை நீக்கி உள்ளது. அதாவது டிஎன் போட்டுவிட்டு கர்நாடகாவில் ஓட்ட வேண்டும் என்ற கவலை வேண்டாம். இல்லை அங்கே போய் மீண்டும் புதிதாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டாம். உங்கள் நேரத்தையும்,பணத்தையும் இந்த புதிய நம்பர் பிளேட் மிச்சப்படுத்துகிறது,

மேலும் இந்த நம்பர் பிளேட் நாடு முழுவதும் செல்லுபடியாகும். ஆனால் இந்த நம்பர் பிளேட்டை பெற நீங்கள் சாலை வரியை இரண்டு ஆண்டுகளுக்கு சேர்த்து செலுத்த வேண்டும். அல்லது இரண்டின் மடங்குகளில் (நான்கு, ஆறு மற்றும் எட்டு ஆண்டுகள்) செலுத்த வேண்டும்.

BH தொடர் நம்பர் பிளேட்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது: MoRTH இன் வாகன் போர்டல் மூலமாகவோ அல்லது உங்கள் வாகன டீலரின் உதவியின் மூலமாகவோ நீங்கள் BH நம்பர் பிளேட்டுக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் சார்பாக படிவம் 20ஐ நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். தனியார் துறை ஊழியர்கள் படிவம் 60 (பணிச் சான்றிதழ்) மற்றும் அவர்களின் அதிகாரப்பூர்வ ஊழியர் ஐடியை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தின் போது "BH" தொடர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேவையான கட்டணம் மற்றும் மோட்டார் வாகன வரி ஆன்லைனில் செலுத்தப்படும். போக்குவரத்து அலுவலகம் (RTO) உரிமையாளரின் தகுதியை சரிபார்த்து, BH தொடர் நம்பர் பிளேட்டை அங்கீகரிக்கும்.

HSRP பிளேட்டுகள் கட்டாயம்: இது போக இந்தியாவில், ஏப்ரல் 1, 2019க்கு முன் விற்கப்பட்ட வாகனங்களில் கட்டாயமாக உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) பிளேட்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. எச்எஸ்ஆர்பி இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்பதே தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க விதி. ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரையில் இதற்கு அபராதம் விதிக்கப்படும்.

HSRP நம்பர் பிளேட் என்பது எரிபொருள் வகையைக் குறிக்கும் வண்ண-குறியிடப்பட்ட லேபிளுடன் உள்ளது. நம்பர் பிளேட்டுக்கு எளிதாக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

இந்த நம்பர் பிளேட்டுகளில் 3டி ஹாலோகிராம், ரிப்ளக்டிவ் ஃபிலிம், ஹலோ கிராம்மில் எழுதப்பட்ட 'இந்தியா' என்ற பெயர் மற்றும் லேசர் மூலம் பொறிக்கப்பட்ட வரிசை எண் போன்ற சிறப்பு அம்சங்கள் இருக்கும்.

ஜூலை 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு விற்கப்படும் வாகனங்கள் இப்போது தானாக HSRP வகை எண் பிளேட்டுகளுடன் வருகின்றன. கர்நாடகா போன்ற பல மாநிலங்கள் இப்போது செப்.15, 2024 க்கு முன் பழைய வாகனங்களின் நம்பர் பிளேட்களை HSRP வகையில் மாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளன. வாகனத்தின் வகையைப் பொறுத்து 500 முதல் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று கர்நாடகாவில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

என்ன விதமான பிளேட்; எலக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யப்பட்டு உங்கள் காருடன் இணைக்கப்பட்ட அலுமினிய நம்பர் பிளேட்தான் உயர் பாதுகாப்பு பதிவுத் தட்டு (HSRP) என்று அழைக்கப்படுகிறது. நீல நிற ஹாலோகிராமில் குரோமியம் அடிப்படையிலான அசோக சக்ரா சின்னம் இதில் இருக்கும். HSRP தகடு 10 இலக்க PIN அல்லது நிரந்தர அடையாள எண் கொண்டு இருக்கும். இந்த எண் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கீழ்-இடது மூலையில் பொறிக்கப்பட்டுள்ளது. 20 மிமீ நீளம் மற்றும் 20 மிமீ அகலத்தில் இந்த பிளேட் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+