தெரியாமல் பெட்ரோலுக்கு பதில் டீசலை நிரப்பிவிட்டால் என்ன செய்யணும்! "இதை" செய்தால் செலவு வெச்சிடும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு வகை கார்களுமே உள்ளன. பெட்ரோல் நிலையத்திலும் கூட பெட்ரோல் டீசல் என இரண்டும் அருகருகே தான் இருக்கும். ஒருவேளை நீங்கள் உங்கள் பெட்ரோல் காருக்கு தெரியாமல் டீசலை அடித்தால் என்ன செய்வது என்று யோசித்து இருக்கிறீர்களா.. அல்லது டீசலுக்கு பதிலாக பெட்ரோலை அடித்துவிட்டால் என்ன செய்வது எனத் தெரியுமா.. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.

இந்தியாவில் கார் மார்க்கெட் வேகமாக வளர்ந்து வருகிறது. டிராபிக், வானிலை மோசமாகிக் கொண்டே போகும் நிலையில் கார் இருந்தால் மட்டுமே சவுகரியமாகப் பயணிக்க முடியும் என்ற சூழல் இருக்கிறது. காற்று மாசு காரணமாக இப்போது டீசல் கார்கள் குறைந்துவிட்டாலும் கூட இன்னும் அவை கணிசமான அளவுக்கு சந்தையில் இருக்கவே செய்கிறது.

car bike

எரிபொருளை மாற்றி நிரப்பினால் என்ன செய்வது

ஒருவேளை நீங்கள் எரிபொருள் நிரப்பச் செல்லும்போது உங்கள் டீசல் காருக்கு பெட்ரோலை நிரப்பிவிட்டால் என்ன செய்வது? அல்லது நீங்கள் பெட்ரோல் காரை வைத்திருந்து.. அதில் டீசலை நிரப்பிவிட்டால் என்ன செய்வது என யோசித்து இருக்கிறீர்களா.. கார் மட்டுமின்றி பைக்கிலும் கூட தவறுதலாக எப்படியோ டீசலை போட்டுவிட்டால் என்ன செய்வது எனத் தெரியுமா இது குறித்து நாம் பார்க்கலாம்.

பெட்ரோல் காரில் தெரியாமல் டீசலை போட வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.. ஏனென்றால் டீசலை நிரம்பும் அந்த வால்வு பெட்ரோல் காரில் பொருந்தாது. அதையும் தாண்டி எப்படியோ பெட்ரோல் காரில் டீசலை நிரப்பிவிட்டால் சிக்கல் தான். ஏனென்றால் பெட்ரோல் என்பது டீசலுடன் ஒப்பிடுகையில் ஒரு லேசான எரிபொருள்.. பெட்ரோல் எஞ்சின் டீசலில் இயங்கும்படி வடிவமைக்கப்படவில்லை. பெட்ரோல் எஞ்சினில் உள்ள ஃபில்டரில் டீசல் அடைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.

நிச்சயம் செய்யவே கூடாதது

பெட்ரோல் எஞ்சினில் டீசலை நிரப்பிவிட்டார்கள் என்பது தெரிந்தால் தப்பித் தவறியும் எஞ்சினை ஸ்டார்ட் செய்யாதீர்கள். அப்படியே மெல்ல வண்டியை ஓரமாக இழுத்துச் செல்லுங்கள். உடனே சர்வீஸ் சென்டருக்கு கால் செய்யுங்கள். அவர்கள் உங்கள் வாகனத்தை டோ செய்து அழைத்துச் செல்வார்கள். வண்டியில் இருந்து டீசலை முழுமையாக காலி செய்துவிட்டு.. வாட்டர் வாஷ் செய்ய வேண்டும். அதன் பிறகே காரை ஸ்டார்ட் செய்ய வேண்டும்.

ஒருவேளை தெரியாமல் நீங்கள் டீசல் இருக்கும் பெட்ரோல் காரை ஸ்டார்ட் செய்தாலும் அது கொஞ்ச தூரம் மட்டுமே இயங்கும். உங்கள் வண்டியில் இருந்து அதிக வெளிர் நிற புகை வெளிவரும். பிறகு சிறிது நேரத்திலேயே வண்டி நின்றுவிடும். இதுபோன்ற சூழல்களிலும் உடனே சர்வீஸ் சென்டருக்கு கால் செய்யுங்கள். அவர்கள் டீசலை வெளியே எடுத்து வாட்டர் வாஷ் செய்து தருவார்கள்.

இதுதான் பெரிய பிரச்சினை

டீசல் காரில் பெட்ரோலை போட்டால் தான் அதை விடப் பெரிய பிரச்சினை. முன்பே குறிப்பிட்டது போல பெட்ரோலை விட டீசல் ஹெவியாக இருக்கும். எஞ்சினும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டு இருக்கும். அப்படியிருக்கும்போது நீங்கள் பெட்ரோலில் இயக்க முற்பட்டால் பெரிய செலவு வைத்துவிடும். எரிபொருள் மாறி இருப்பது தெரிந்தால் எஞ்சினை ஸ்டார்ட் செய்யாத வரை பிரச்சினை இல்லை. பெட்ரோலை காலி செய்து வாட்டர் வாஷ் செய்தால் போதும்.!

ஆனால், தப்பித் தவறி ஸ்டார்ட் செய்துவிட்டீர்கள் என்றால் சிக்கல் தான். டீசல் எஞ்சினுக்குள் பெட்ரோல் சென்றுவிட்டால் சில நொடிகளில் எஞ்சின் பவரை இழந்து ஆஃப் ஆகிவிடும். அப்போது உங்களுக்கு வேறு வழியே இல்லை.. சர்வீஸ் சென்டருக்கே கால் செய்ய வேண்டும். இஞ்சினை முழுமையாகச் சோதனை செய்வார்கள். இது நமக்குப் பெரிய செலவு வைத்துவிடும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • எரிபொருளை மாற்றி நிரப்பாமல் இருக்க 3 அடிப்படை விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்:
  • முதலில் உங்கள் காருக்கு பெட்ரோல் அல்லது டீசல் எதை நிரப்ப வேண்டும் என்பதைக் குறிப்பிடும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டுங்கள்.
  • அதேபோல எரிபொருள் நிலையத்தில் எங்கு பெட்ரோல் உள்ளது.. எங்கு டீசல் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப வண்டியை நிறுத்துங்கள்.
  • மேலும், எரிபொருள் நிரம்பும் போது கொஞ்சம் வண்டியில் இருந்து இறங்கி செக் செய்யுங்கள்.

இதுபோல சின்ன சின்ன விஷயங்களைச் சரியாகச் செய்தால் போதும்.. பெரிய செலவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+