தமிழ்நாடுதான்.. டிக் அடிக்க போகும் எலான் மஸ்க்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்.. வருகிறது டெஸ்லா ஆலை!
சென்னை: தமிழ்நாட்டில் டெஸ்லா நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளன. இந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கார் உற்பத்தி செய்யும்.
புதிய டெஸ்லா ஆலைக்கு பதிலாக ஏற்கனவே உள்ள உற்பத்தி மையங்களில் டெஸ்லா ஆலை கிளை உற்பத்தி மையமாக அமைக்கப்படும். பெரும்பாலும் சென்னை டிக் அடிக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது.

டெஸ்லா உற்பத்தி தமிழ்நாடு
தமிழ்நாட்டின் இருக்கும் வலுவான EV கட்டமைப்பு மற்றும் வலுவான கார் உற்பத்தி சுற்றுசூழல் காரணமாக டெஸ்லாவின் மையத்திற்கான முதல் தேர்வாக தமிழ்நாடு மாறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மும்பையில் டெஸ்லா நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், சென்னை அல்லது தமிழ்நாட்டின் வேறு பகுதியில் இவி உற்பத்தி மையம் அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதன்படி டெஸ்லா நிறுவனம் தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் நிலம் தேடுகிறது. இந்தியாவின் 40% EVகளை தமிழ்நாடு உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் திறமையான தொழிலாளர்கள், துறைமுக அணுகல் மற்றும் சென்னையில் உள்ள ஆட்டோ ஹப் ஆகியவை இதற்கு சாதகமாக உள்ளது.
சமீபத்தில்தான் வியட்நாம் EV தயாரிப்பு நிறுவனமான VinFast தூத்துக்குடியில் $2 பில்லியன் முதலீடு செய்தது.
தமிழ்நாடு தொடரும் முதலீடு
இந்த நிலையில்தான் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாக தொடங்கி உள்ளன. தமிழ்நாடு அரசு இ வாகனங்களுக்கான கொள்கைகளை சமீபத்தில் வெளியிட்டு அதற்கான சலுகைகளையும் உடனுக்குடன் அறிவித்து உள்ளது. இந்த சலுகைகள் வழியாக டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான தீவிரமான முயற்சிகளில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழிற்துறை அதிகாரிகள் தீவிரமான ஆலோசனைகளை செய்து வருவதாகவும் தொழிற்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா கார், பேட்டரி மூலம் இயங்க கூடிய கார்களில் உலகில் முதன்மையான காராக இருக்கிறது. அதேபோல் இதன் நிறுவனர் எலான் மஸ்க் உலகில் முக்கியமான தொழில் அதிபராக இருக்கிறார். இவர்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலோர மாநிலங்கள்: கடலோர மாநிலங்களை இதற்காக டெஸ்லா கவனித்து வருகிறதாம். பல்வேறு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விதமாக டெஸ்லாவின் கிகா தொழிற்சாலையை இந்தியாவின் எதாவது ஒரு கடலோர சிட்டியில் அமைக்க டெஸ்லா ஆலோசனை செய்து வருகிறது. இப்போதைக்கு சென்னை, குஜராத், தெலுங்கானா ஆகியவை டெஸ்லாவின் லிஸ்டில் உள்ள பகுதிகள் ஆகும். இவற்றில் ஒன்றை டெஸ்லா டிக் செய்ய வாய்ப்புகள் உள்ளதாம்.
டெஸ்லா முதலீடு
இந்தியாவில் பணியாளர்களை நியமிப்பதற்கான வேலைகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கி உள்ளது. இதன் மூலம் இந்திய மார்க்கெட்டில் நேரடியாக உற்பத்தியை மேற்கொள்ள டெஸ்லா நினைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதை கடுமையாக கண்டித்து உள்ளார்.
இந்தியாவில் அவர் முதலீடு செய்ய விரும்ப காரணம் வரி மட்டுமே. அதிக வரி காரணமாக நேரடியாக இந்தியாவில் பேக்ட்ரி கட்ட விரும்புகிறார். இந்தியா அதிகம் வரி போடுகிறது. முக்கியமாக வெளிநாட்டு கார்களுக்கு அதிக இறக்குமதி வரி போடுகிறது. இதற்காக நேரடியாக அங்கே டெஸ்லா உற்பத்தி மையத்தை உருவாக்க மஸ்க் நினைக்கிறார். அது பெரிய தவறு. அமெரிக்காவிற்குத்தான் சிக்கல், என்று டிரம்ப் பாய்ந்து உள்ளார். டெஸ்லா உற்பத்தி மையம் மகாராஷ்டிரா அல்லது தமிழ்நாட்டிற்கு வருவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்று இருந்தார் . இந்த பயணத்தில் அவர் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கை சந்தித்து இருந்தார். இந்த நிலையில்தான் டெஸ்லா முதலீடு இந்தியாவிற்குள் வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாக தொடங்கி உள்ளன. இந்தியா மற்றும் பல்வேறு தெற்காசிய நாடுகளில் டெஸ்லா கார்களை விற்பனை செய்ய எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதற்காக ஆசியாவில் உற்பத்தி செய்ய அவர் திட்டமிட்டு வருகிறார். சீனாவின் உற்பத்தியை மேலும் பெருக்க அவர் விரும்பாத நிலையில் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. அதன்படி 2 மில்லியன் டாலருக்கு வாகனம், செமி கன்டெக்ட்டர் என்று பல்வேறு உற்பத்திகளை டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் செய்ய உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications