கொண்டையை மறந்துட்டாங்களே,, வெறும் ஒரே ஒரு கார் மட்டும் விற்ற பிரபல கார் நிறுவனம்.. ஷாக் சம்பவம்
சென்னை: இந்தியா ஒரு SUVகளின் நாடு. இந்தியாவில் தினமும் நூற்றுக்கணக்கில் SUVகள் விற்பனை ஆகின்றன. மாதந்தோறும் சராசரியாக 10,000 க்கும் அதிகமான SUV மாடல்கள் நாட்டில் விற்பனை ஆகின்றன.
இந்திய மார்க்கெட் என்பது எஸ்யுவி மார்க்கெட். ஆனால் இப்படிப்பட்ட இந்தியாவில் SUV சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் என்ற மாடல் கார் மிக மோசமான விற்பனையை பதிவு செய்துள்ளது. இது ஜனவரி 2024 இல் ஒரே ஒரு டிஸ்பாட்ச் யூனிட்டை மட்டுமே SUV சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் விற்பனை செய்துள்ளது. C5 Aircross ஏன் விற்பனையாகவில்லை என்பதைப் பற்றி பேசலாம்.

SUV சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் : சிட்ரோயன் நிறுவனம் இந்திய மார்கெட்டிற்கு கெத்தாகவே வந்தது. முக்கியமாக தோனியை எல்லாம் பிராண்ட் அம்பாசிடராக கொண்டு வந்தது. இதற்காக கடுமையான விளம்பரங்களை செய்தது .
சிட்ரோயன் நம்பகமான நிறுவனம்தான். கார் மாடல்களும் சிறப்பானதே. இப்போது நம் சாலையில் ஓடும் பல எஸ்யுவி கார்களுடன் ஒப்பிடுகையில் சிட்ரோயன் கார் வகைகள் நன்றாகவே இருக்கும்.
ஆனால் அப்படிப்பட்ட SUV சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் இந்தியாவில் விற்பனை ஆகாமல் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கிறது.
ஜனவரி 2024 இல் Citroen C5 Aircross இன் 1 யூனிட்டை மட்டுமே விற்க முடிந்தது. மேலும், 2023 டிசம்பரில் C5 Aircross இன் 2 யூனிட்களை மட்டுமே Citroen விற்க முடிந்தது. கடந்த சில மாதங்களாக அந்த கார் ஒற்றை இலக்கத்தில்தான் விற்பனை ஆகி வருகிறது.
என்ன காரணம்?: மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்துவிட்டது போல சிட்ரோயன் நிறுவனம் இந்திய மார்கெட்டிற்கு கெத்தாகவே வந்தது. முக்கியமாக தோனியை எல்லாம் பிராண்ட் அம்பாசிடராக கொண்டு வந்தது ஆனால் ஷோ ரூம்களை திறக்க மறந்துவிட்டது. போதுமான அளவு ஷோ ரூம் இந்த கார்களுக்கு இல்லாதது முக்கியமான ஒரு காரணம்.
குறைந்த விற்பனைக்கான முக்கிய காரணம், நாட்டில் உள்ள சிட்ரோயனின் சிறிய சேவை நெட்வொர்க்கும் குறைவான டீலர்ஷிப்களும் ஆகும். இந்த காரை விற்க டீலர்கள் தயாராக இல்லை. மேலும், C5 Aircrossக்கு 40 லட்சங்களைச் செலவழிக்க மக்கள் விரும்பவில்லை.
இங்கே டீலர் இருந்தால்தான் சர்வீஸ் விட முடியும். பார்ட்ஸ் கிடைக்கும். இதே காரணத்திற்காகவே ஆஸ்திரேலியாவில் அந்த நிறுவனம் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவில் அந்த நிறுவனத்தின் மார்க்கெட் போய்.. ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறியது.
இந்தியாவில் சிட்ரோயன் நீண்டகாலம் விற்பனை ஆகுமா.. மார்க்கெட்டில் இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது. இதே விலைக்கு இன்னும் நல்ல கார்கள் கிடைப்பதும் கூட மக்கள் சிட்ரோயனின் கார்களை வாங்காமல் போக முக்கிய காரணம்.
நல்ல கார்: Citroen C5 Aircross இந்த விலை வரம்பில் மிகவும் நல்ல தயாரிப்புதான். ஒட்டுமொத்த வடிவமைப்பு தனித்துவமானது. உலகளவில் பாராட்டப்பட்ட Citroen சஸ்பென்ஷன் அமைப்புடன் வருகிறது.
10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்டீயரிங்-மவுண்டட் கண்ட்ரோல்கள், காற்றோட்டமான இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் போன்றவற்றுடன் இந்த கார் மார்கெட்டிற்கு வந்துள்ளது. இது 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் இது அறிமுகம் ஆனாலும் கூட.. . 174bhp மற்றும் 400Nm டார்க்கை உற்பத்தி செய்யும்.. திறன் இருந்தும் கூட மக்கள் இந்த காரை விரும்பவில்லை. 8-ஸ்பீடு AT கியர்பாக்ஸால் இருந்தும் கூட போதிய ஷோ ரூம் இல்லாததால் இந்த கார் விற்பனை பெரிதாக சாத்தியமாகவில்லை.












Click it and Unblock the Notifications