ரொம்ப முக்கியம்.. ராயல் என்பீல்ட் மார்க்கெட்டை குறி வைக்கும் சர்வதேச பைக் நிறுவனங்கள்? ஏன்?
சென்னை: இந்தியாவின் டாப் பைக்காக பார்க்கப்படும் ராயல் என்பீல்ட் பைக் மார்க்கெட்டை உலகின் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் குறி வைக்க தொடங்கி உள்ளன.
இந்தியாவில் ராயல் என்பீல்ட்.. சரியாக சொல்ல வேண்டும் புல்லட் பைக் என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பிள். முன்பு கிராமங்களில் குறிப்பிட்ட சாதியினர், நகரங்களில் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் பைக்காக இது இருந்தது.

ஆனால் அதன்பின் கடந்த 10 வருடங்களில் இந்தியாவில் ராயல் என்பீல்ட் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ராயல் என்பீல்ட் வாங்குவது என்பது ஸ்டேட்டஸ் சிம்பிள் என்பது மாறி வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைப்பது போல எல்லோரும் எளிதாக வாங்க தொடங்கிவிட்டனர்.
முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் ராயல் என்பீல்ட் மிக முக்கியமான பைக்காக பார்க்கப்படுகிறது. அதிலும் லடாக் பயணம் செல்வது, வடஇந்திய பயணம் மேற்கொள்வது என்று பல்வேறு விஷயங்களுக்கு ராயல் என்பீல்ட் மிக முக்கியமான பைக்காக மாறிவிட்டது. இதனால் இந்தியாவில் ராயல் என்பீல்ட் மார்க்கெட் என்பது மிகப்பெரியது.

ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட சராசரியாக 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை ராயல் என்பீல்ட் பைக் விற்பனை ஆகிறது. ஒரு ஹை எண்டு மாடல் பைக் இவ்வளவு அதிகமாக விற்பனை ஆவது ராயல் என்பீல்ட் பைக்கிற்கு மட்டுமே. இந்த மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்றுதான் உலகின் டாப் பைக் நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன. முக்கியமாக ஹார்லி டேவிட்சன், ட்ரையம்ப் இரண்டு பைக்குகளும் இந்திய மார்க்கெட்டை குறி வைத்து உள்ளன.
போட்டி: இந்தியாவின் மோட்டார்சைக்கிள் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, இங்கிலாந்தின் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்களுடன் இணைந்து இந்தியாவில் இரண்டு புதிய பைக்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது.
அதன்படி 400சிசி பைக்குகளான ஸ்பீட் 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் ஆகியவற்றை கடந்த வாரம் இவர்கள் கூட்டணி அறிமுகப்படுத்தியது. ஸ்பீட் 400 விலை ரூ.2.33 லட்சம். இருந்தாலும், முதல் 10,000 வாடிக்கையாளர்கள் இதை ரூ.2.23 லட்சத்திற்கு வாங்கலாம். ஸ்க்ராம்ப்ளர் 400 இன் விலை கடந்த வாரம் அறிவிக்கப்படவில்லை.

இதன் விலை 2.90 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மோட்டார் சைக்கிள்களும் 16000 கிமீ சர்வீஸ் இண்டர்வல் மற்றும் இரண்டு வாரண்டி கொண்டது. இரண்டு பைக்குகளும் ஹின்க்லியில் உள்ள ட்ரையம்ப் நிறுவனம் மற்றும் பஜாஜ் ஆட்டோவுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிகவும் ஹை எண்ட் மாடலான இரண்டு பைக்கும் மிக குறைந்த விலையில் இந்திய மார்கெட்டிற்கு வருவதால் ராயல் என்பீல்ட்க்கு இது பெரிய போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரையம்ப் 400 மாடலானது 398.15 சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு எஞ்சின் ஆகும், இது 8,000 ஆர்பிஎம்மில் 40 பிஎஸ் அதிகபட்ச ஆற்றலையும், 6,500 ஆர்பிஎம்மில் 37.5 என்எம் பீக் டார்க்கையும் வெளிப்படுத்தும். இன்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் வருகையால் இந்தியாவில் ராயல் என்பீல்டு மார்கெட்டிற்கு மிகப்பெரிய போட்டி நிலவி உள்ளது. அதேபோல் ராயல் என்பீல்டுக்கு போட்டியாக சமீபத்தில் ஹார்லி டேவிட்சன் பைக் தனது விலை குறைந்த மாடலை களமிறக்கியது. அமெரிக்காவின் விஸ்கான்சினை தளமாகக் கொண்ட வாகன உற்பத்தியாளர் மில்வாக்கி, இரு சக்கர வாகனத் துறையில் இந்தியாவில் டாப்பில் உள்ள Hero MotoCorp இரண்டும் சேர்ந்துதான் இந்த புதிய மாடலை வெளியிட்டு உள்ளன.

ஹீரோ நிறுவனம் ஹூண்டாய் உடன் உறவை முறித்துக்கொண்ட பின் தனியாக பைக் தயாரித்து வந்தது. இந்த நிலையில் அந்த உறவு முறிவிற்கு பைக் தயாரிக்க வேறு ஒரு பெரிய நிறுவனத்துடன் கைகோர்ப்பது இதுவே முதல்முறை. தி மில்வாக்கி - ஹீரோ இணைந்து இந்த புதிய மலிவான Harley Davidson மாடலை வெளியிட்டு உள்ளது.
ஹார்லி டேவிட்சன் X440 என்பதுதான் இந்த மாடலின் பெயர். இது சிங்கிள் சிலிண்டர், 440சிசி மோட்டார் சைக்கிள் ஆகும். இது ராயல் என்ஃபீல்டின் 350சிசி வண்டியை விட கொஞ்சம் நல்ல திறன் கொண்ட , அதற்கு போட்டியாக களமிறக்கப்பட்ட பைக்காக பார்க்கப்படுகிறது.
இதன் ஷோரூம் விலை - ₹ 2.3 லட்சம் ஆகும். ஆன் ரோடு விலை 2.5- 2.7 லட்சம் வரை இருக்கும். ஏற்கனவே அதிகம் விற்பனையாகும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350-ன் டாப் மாடலை விட சில ஆயிரம் ரூபாய் மட்டுமே இந்த ஹார்லி மாடல் அதிகம். இதனால் தற்போது பலரும் ஹார்லி பக்கம் திரும்பும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன்பாக இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள மலிவான ஹார்லி நைட்ஸ்டர், விலை 17.49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
இதை வாங்குவது பலருக்கும் எட்டா கனவு என்ற நிலையில்தான் தற்போது ஹார்லி டேவிட்சன் X440 வெறும் இரண்டரை லட்சத்திற்கு களமிறக்கப்பட்டு உள்ளது. மொத்தம் இந்த ஹார்லி மாடலில் மூன்று வகைகள் உள்ளன - பேசிக் வகை 'டெனிம்' ₹ 2.29 லட்சத்திற்கும், மிட்-ஸ்பெக் 'விவிட்' ₹ 2.49 லட்சத்திற்கும் மற்றும் டாப் ஸ்பெக் டிரிம் 'எஸ்' ₹ 2.69 லட்சத்திற்கும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications