மெட்ரோ நோ.. எக்ஸ்பிரஸ் வே நோ.. நிதி உதவி நோ.. தமிழ்நாட்டிற்கு "ஜீரோ".. ஏமாற்றிய மத்திய பட்ஜெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான முக்கியமான ஒரு அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட் பாதி பட்ஜெட் ஆகும். இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

budget 2024 nirmala sitharaman automobile

2024 லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து உள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டதால்.. முழு பட்ஜெட் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான முக்கியமான ஒரு அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. மெட்ரோ நிதி ஒதுக்கீடு, விரைவு சாலைகள், வெள்ள நிவாரணம் என்று எதுவும் வழங்கப்படவில்லை.

நிதி இல்லை: ஏற்கனவே சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கு இப்போதைக்கு பணம் கொடுக்க முடியாது, நிதியை விடுவிக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.

இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு நிதி: இந்த நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு நிதி இல்லாமலே வெறும் மாநில அரசின் நிதியிலேயே மெட்ரோ கட்டப்பட்டு வருகிறது.

மத்திய அரசு நிதி ஒதுக்காமல் கைவிரித்து வரும் நிலையில் கூடுதல் நிதிகளை பல்வேறு சர்வதேச வங்கிகளிடம் இருந்து தமிழ்நாடு அரசு பெற்று வருகிறது. இவர்களின் உதவியுடன்தான் தமிழ்நாடு அரசு மெட்ரோ சேவை கட்டுமானங்ளை மத்திய அரசின் உதவி இல்லாமலே மேற்கொண்டு வருகிறது.

budget 2024 nirmala sitharaman 2024 automobile

விரைவு சாலைகள் : விரைவு சாலைகள் இந்தியாவின் மிக உயர்ந்த சாலைகள் ஆகும். ஜூலை 2023 நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 5,173 கிமீ (3,214 மைல்) அதிவேக நெடுஞ்சாலைகள் அதாவது எக்ஸ்பிரஸ் வே உள்ளன. இவை பெரும்பாலும் 6, வழி அல்லது 8 வழி சாலைகள் ஆகும்.

இங்கே அதிகபட்சம் 120 கிமீ வேகத்தில் கூட செல்ல முடியும். கட்டுமானத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலை இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலையாக இருக்கும். இது 2026 இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே இந்தியாவில் 2002 இல் தொடங்கப்பட்ட முதல் 6-வழி செயல்பாட்டு விரைவுச்சாலை ஆகும். தற்போது, ​​இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ்வே, மும்பை-நாக்பூர் எக்ஸ்பிரஸ்வே (கட்டம்-II) 600 கிமீ (370 மைல்), 2022 இல் திறக்கப்பட்டது மற்றும் (கட்டம்-II) மே 2023 இல் திறக்கப்பட்டது. மற்றும் 2021 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட 14 பாதைகள் கொண்ட டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வேயின் டெல்லி - தஸ்னா (யுபி எல்லை) பிரிவில் அகலமான விரைவுச்சாலையாக உள்ளது.

எக்ஸ்பிரஸ்வேக்கள்: ஜூலை 2023 நிலவரப்படி, 5,173 கிமீ (3,214.4 மைல்) நீளம் கொண்ட 48 எக்ஸ்பிரஸ்வேக்கள் இந்தியாவில் செயல்படுகின்றன, மேலும் 8,772 கிமீ கட்டுமானத்தில் உள்ளன. 2014 ஆம் ஆண்டில், நாட்டில் சுமார் 1,021 கிமீ அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டுமே இருந்தன.


உத்தரப்பிரதேசம் 1,396 கிமீ (867 மைல்) 8 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
மகாராஷ்டிரா 793.4 கிமீ (493.0 மைல்) 6 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
ராஜஸ்தான் 757 கிமீ (470 மைல்) 3 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
ஹரியானா 609 கிமீ (378 மைல்) 7 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
மத்தியப் பிரதேசம் 244 கிமீ (152 மைல்) எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
சத்தீஸ்கர் 191 கிமீ (119 மைல்) 2 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
கர்நாடகா 171 கிமீ (106 மைல்) 5 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.

வடஇந்தியா: தமிழ்நாட்டில் வெறும் 94.8 கிமீ தூரத்திற்கு சென்னை - குமரி இடையே சில ஸ்ட்ரெட்ச் 6 வழி சாலையாக அமைக்கப்பட்டு உள்ளன. வடஇந்தியாவில் இருப்பது போல நீண்ட எக்ஸ்பிரஸ் வே சாலைகள் தமிழ்நாட்டில் கட்டப்பட வில்லை.

தமிழ்நாட்டில் போதிய அளவில் எக்ஸ்பிரஸ் வே கட்டுமானங்கள் தொடங்கப்படாமல் இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் வே. கட்டப்படுவதால் தமிழ்நாடு பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

என்ன காரணம்: போதிய நிலம் கிடப்பது இல்லை, விவசாய நில பிரச்சனை, மக்கள் போராட்டம், திட்டத்தின் தேவை புரியாமல் இருப்பது இந்த பிரச்சனைக்கு காரணமாக மாறி உள்ளது.

இரண்டு திட்டங்கள்: சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் வே வழித்தட கட்டுமானம் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், பாரத்மாலா பரியோஜனா இரண்டாம் கட்டத்தின் கீழ், சென்னை மற்றும் திருச்சியை இணைக்கும் இரண்டாவது எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை உருவாக்க தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சமீபத்தில் நாடு முழுவதும் சுமார் 6,747 கிமீ தூரத்திற்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ்வேகள், பொருளாதார வழித்தடங்கள் மற்றும் இடை-வழிச்சாலைகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்காக ஆலோசகர்களை பணிக்கு அமர்த்தி உள்ளது.

அதில் தமிழ்நாட்டு திட்டங்களும் அடங்கும். இதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் அளவு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. சென்னை டூ திருச்சி 4 மணி நேரத்தில் செல்லும் விதமாக இந்த எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்படும்.

வேறு சாலைகள்: கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான எக்ஸ்பிரஸ் வழிச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) ஆலோசகரை நியமித்துள்ளது.

வாகனங்களின் அபரிமிதமான எண்ணிக்கையின் காரணமாக பெருகிவரும் போக்குவரத்து இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, NHAI சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையே புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டத்தை முன்வைத்தது. இதையடுத்து NHAI அதிகாரிகள், போக்குவரத்தின் அளவை அளவிடுவதற்கும் புதிய சாலையின் சீரமைப்பைக் கண்டறிவதற்கும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்த திட்டம் NHAI கூட்டங்களில் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்து இருந்தாலும் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கான ஆயத்த பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், டிபிஆர் தயாரிக்க ஆலோசகரை NHAI நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஆலோசகர் குழு ஒன்று கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான பல்வேறு பகுதிகளுக்கு பலமுறை சென்று டிபிஆர் பணியை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

டிபிஆர் தயாரிக்கும் பணி கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு மாதத்திற்குள் அதை சமர்ப்பிக் வாய்ப்புள்ளது. இது பின்னர் NHAI தலைமையகத்திற்கு அனுப்பப்படும். இது ஆறு வழி நெடுஞ்சாலையாக இருக்கும். அதேபோல் தேவைப்படும் இடங்களில் சர்வீஸ் சாலைகள் இருக்கும்.

எக்ஸ்பிரஸ் வே: இது போக சென்னை பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வே சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதே பாதைக்கு அருகே புல்லட் ரயில் கொண்டு வரப்பட உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.

இந்த நிலையில்தான் 2024 பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான புதிய எக்ஸ்பிரஸ் வே சாலைகள் அமைப்பது தொடர்பான அறிவிப்புகள் இன்று எதுவும் வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+