பல காலமாக கிடப்பில் கிடந்த ஹைவே! தமிழ்நாட்டின் மிக முக்கிய நெடுஞ்சாலை! விரைவில் பயன்பாட்டுக்கு வருது
தஞ்சாவூர்: விக்கிரவாண்டி - மானாமதுரை இடையிலான தேசிய நெடுஞ்சாலை 36 விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதி நிறைவடைந்த நிலையில் மறுபகுதி விரைவில் கட்டி முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 36 (NH 36) விக்கிரவாண்டி அருகே அமைய உள்ள மிகப்பெரிய தேசிய நெடுஞ்சாலையாகும். இது விக்கிரவாண்டியில் தொடங்கி மானாமதுரையில் முடிவடைகிறது. இதன் மொத்த நீளம் 334 கி.மீ.பண்ருட்டி, வடலூர் அணைக்கரை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை வழியாக இந்த நெடுஞ்சாலை செல்கிறது.

இது பண்ருட்டி, வடலூர், ஆனைக்கரை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் வழியாக செல்கிறது. இந்த பாதையானது மாவட்டங்களுக்கு போக்குவரத்திற்கு மிகவும் தேவையாக அமையும்.
தேசிய நெடுஞ்சாலை 36ல் சோழபுரம் - தஞ்சாவூர் இடையிலான சாலை பணிகள் முடிவடைந்து உள்ளன. இதனால் அங்கே முழுமையான போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நல்லூர் வி.யு.பி. குடுமுருட்டி ஆற்றுப் பாலத்தை சாலையுடன் இணைக்கும் பணி முடிவடைந்து உள்ளது.
நான்கு வழிச்சாலையான சோழபுரம்-தஞ்சாவூர் இடையே 48 கிலோமீட்டர் நீளமும், சேத்தியாத்தோப்பு-சோழபுரம் பகுதியும் சுமார் 50 கிலோமீட்டரை உள்ளடக்கியது. சோழபுரம்-தஞ்சாவூர் பிரிவில் இரண்டு புறவழிச்சாலைகள், நான்கு பெரிய பாலங்கள் மற்றும் 15 வாகன அண்டர்பாஸ்கள் (VUPs) மற்றும் மேம்பாலங்கள் உள்ளன, சேத்தியாத்தோப்பு-சோழபுரம் பாதையில் மூன்று புறவழிச்சாலைகள், நான்கு பெரிய பாலங்கள் மற்றும் 20 VUPகள்/மேம்பாலங்கள் உள்ளன.

வேகம் எடுக்கும் பணிகள்: மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மேற்கொண்ட ஆய்விற்கு பின் இங்கே நடக்கும் பணிகள் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக முடிக்கப்படாமல் இருந்த விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தை கடந்த வாரம் ஆய்வு செய்தது கவனம் பெற்றுள்ளது.
இதனால் இத்திட்டம் தேவையான உந்துதலைப் பெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இத்திட்டம் டெல்டா பகுதிக்கான முக்கியமான உள்கட்டமைப்பு வளர்ச்சியை கொடுக்கும். விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய வழித்தடமாக அமையும்.
செப்டம்பர் 2020க்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த திட்டம் இப்போது வரை முடிக்கப்படவில்லை. கஜா புயல், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் நிதி ஒதுக்குவதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முழு திட்டமும் தாமதமானது என்று மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. முக்கியமாக நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் இந்த சாலை அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் முதல் சோழபுரம் மற்றும் சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான திட்டத்தின் இரண்டு தொகுப்புகளில் சுமார் 95% பணிகள் நிறைவடைந்துள்ளன. மற்ற தொகுப்பின் ஒப்பந்தத்தை முடித்துவிட்டு புதிய டெண்டருக்கு செல்ல NHAI முடிவு செய்திருந்தது. கூடிய விரைவில் பணிகள் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது.
நான்கு வழிச்சாலை கொண்ட சோழபுரம்-தஞ்சாவூர் பிரிவு 48 கி.மீ. நீளம் கொண்டது. இதில் இரண்டு பைபாஸ் பிரிவுகள், நான்கு பெரிய பாலங்கள் மற்றும் 15 வாகன சுரங்கப்பாதைகள்/மேம்பாலங்கள் உள்ளன. சேத்தியாத்தோப்பு-சோழபுரம் பிரிவு சுமார் 50 கி.மீ தூரத்திற்கு இயங்குகிறது, இதில் மூன்று புறவழிச்சாலைகள், நான்கு பெரிய பாலங்கள் மற்றும் 20 VUPகள்/மேம்பாலங்கள் உள்ளன.
அமைச்சரின் ஆய்வும், திட்டம் குறித்த உறுதிமொழியும் கும்பகோணம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாள் இந்த திட்டம் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. இத்திட்டத்தை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தது அப்பகுதி பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சோழபுரம் - தஞ்சாவூர் இடையிலான நெடுஞ்சாலைப் பகுதி முழுமையாகப் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் போக்குவரத்துக்கு திறக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். அமைச்சரின் வருகையைத் தொடர்ந்து மற்ற தொகுப்புகளும் விரைவாக நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம் என்று அப்பகுதி மக்கள் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
-
20 நாள் பொறுமையா இருந்தா ரூ.70 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்..!! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications