சென்னை அடியோடு மாறப்போகுது! 570 கிமீ நீளத்திற்கு.. அப்படியே மாற்றப்படும் 3505 சாலைகள்! மாஸ் சம்பவம்
சென்னை: எட்டு மாத தாமதத்திற்குப் பிறகு, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) விரைவில் நகரம் முழுவதும் 570 கிமீ நீளமுள்ள 3,505 சாலைகளை புதுப்பிக்க உள்ளது. இந்த பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காலமாக பள்ளங்கள் நிறைந்த மற்றும் மோசமாக பராமரிக்கப்படும் சாலைகளை மீண்டும் போட முடிவு செய்துள்ளனர். குறிப்பாக துரைசாமி சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை ஆகியவற்றில் சாலை அமைக்கப்பட உள்ளது.

இதற்காக சென்னை GCC 486 கோடியை முன்மொழிந்துள்ளது. 2025-26 பட்ஜெட்டில் நிதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதியிலிருந்து (TURIF) 150 கோடியும், நகர்புரா சாலை மேம்பாட்டு திட்டத்திலிருந்து (NSMT) 60 கோடியும் எதிர்பார்க்கப்படுகிறது.
பணிகள் ஓவர்
சென்னையில் தொடர் மழை வெள்ளம் முடிந்து உள்ள நிலையில் சேதமடைந்த சாலைகளை உடனுக்குடன் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் சாலைகள் மூலம் பேட்ச் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் உடனுக்குடன் குழிகள் மூடப்படுகின்றன.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு காரணங்களுக்காகக் சாலை பணிகள் நடந்து வருகின்றன. சாலைகளை விரிவு செய்வது, பாதாள சாக்கடை அமைப்பது, கழிவு நீர் குழாய்களை அமைப்பது, கேபிள் அமைப்பது, மழை நீர் வடிகால் சென்னையில் அமைப்பது, மின்சார வடங்களை அமைப்பது, பாலம் கட்டுவது, சென்னையில் செய்வது என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைந்த காரணத்தால் தற்போது சாலைகள் மீண்டும் அமைக்கப்பட உள்ளன.
1,000 மெயின் மற்றும் உட்புற சாலைகள் அடுத்த வாரத்திற்குள் சரி செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முழுவதாக மோசம் அடைந்த சாலைகள் சரி செய்யப்படும். அவை பேட்ச் செய்யப்படாமல் மொத்தமாக சாலைகள் மீண்டும் போடப்படும். அதுவே பள்ளங்கள் மட்டும் இருந்தால் அவை பேட்ச் செய்யப்படும். ஒரு பள்ளத்தை சரிசெய்ய சுமார் 20 நிமிடங்கள் ஆகும். இரவு நேரங்களில் இதற்கான பணிகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை சாலைகள் சீர்திருத்தம்:
பல சாலைகளில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய ஜெட் பேட்ச் இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 7 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளது. இந்த இயந்திரங்கள் அகமதாபாத்தில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டு, சாலைகளில் உள்ள குழிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும்.
மாற்றப்படும் சாலைகள்:
ராயபுரம், தொண்டியார்பேட்டை, பெருங்குடி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய சாலைகளான பர்னபி ரோடு, புரசைவாக்கம் மெயின் ரோடு, பேசின் பிரிட்ஜ் ரோடு, அண்ணாநகரின் சாந்தி காலனி ரோடு உள்ளிட்ட சாலைகள் முதல் கட்டமாக சரி செய்யப்படும். இந்த சாலைகளை சரிசெய்வது போக்குவரத்து நெரிசலையும் குறைக்க உதவும்.
கண்டறியப்பட்ட 1,000 மோசமான சாலைகளில் 300 வடசென்னையில் உள்ளன. அடுத்த மழை முடிந்ததும் சாலைகள் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, மேட்லி ரோடு மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சில சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சாலைகள் சேதமடைந்துள்ளதால் அவற்றை சரிசெய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளது
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications