Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுரை.. இதை மட்டும் மிஸ் செய்தால்.. FASTag மொத்தமாக ரத்து செய்யப்படும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் FASTag-களைப் பொருத்தாத ஓட்டுநர்களின் டேக்குகள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். சிலர் வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் FASTagஐ பொறுத்தாமல்.. கைகளில் வைத்து காட்டுகின்றனர். இது சுங்கச்சாவடி பாதைகளில் நெரிசலை ஏற்படுத்துகிறது. மேலும் சுங்கம் வசூலிப்பவர்களுடன் சில நேரங்களில் வாக்குவாதத்திற்கும் வழி வகுக்கிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

automobile transport

FASTag விதிகள் மீறப்பட்டால் நடவடிக்கை

சுங்க வசூல் மற்றும் நெடுஞ்சாலைகளை நிர்வகிக்கும் NHAI நிறுவனமான IHMCL, சுங்க வசூலிப்பவர்கள், நெடுஞ்சாலை கட்டுபவர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் கூட்டமைவுகளிடம் ஆலோசனை செய்த பின் இந்த முடிவை அறிவித்து உள்ளது.

"கையில் வைத்திருக்கும் டேக்குகள்" இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முறையை தடை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், இனி கைகளில் வைத்து காட்டப்படும் டேக்குகள் முற்றிலுமாக பிளாக்லிஸ்ட் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஸ்ட் டாக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதை உடனே நீக்க வேண்டும். பாஸ்ட் டாக் 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதில் உடனே கேஒய்சி மாற்ற வேண்டும். பாஸ்ட் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட்ட வேண்டும். இல்லையென்றால் இரட்டை தொகை கட்ட வேண்டும் என்றும் இதில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம்.

கடுமையான FASTag விதிகள்

1. பாஸ்ட் டாக்கில் லோ பேலன்ஸ் இருந்தால்.. எல்லா டோல் கேட்டிலும் இனி ரீசார்ஜ் செய்ய முடியாது.

2. சிலருக்கு லோ பேலன்ஸ் காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால், டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

3. அதாவது டோல் கேட் அருகே நின்று ரீ சார்ஜ் செய்தால்.. அதை டோல் கேட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

4. கே ஒய் சி காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால்.. டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே அதை சரி செய்ய வேண்டும். இந்த வாகனங்களின் பாஸ்ட் டாக் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. வாகனங்களுக்கு சட்ட ரீதியிலான வழக்கு, சிக்கல் இருந்தால், அதன் காரணமாக பாஸ்ட் டாக்.. பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால் அதை 1 மணி நேரத்திற்கு முன்பே சரி செய்திருக்க வேண்டும்.

6. பிளாக் லிஸ்ட் ஆகி இருக்கும் பாஸ்ட் டாக் எதையும் டோல் கேட்களில் பயன்படுத்த கூடாது.

FASTag பிளாக் லிஸ்ட் ஆகி உள்ளதா என்று எவ்வாறு சரிபார்க்கலாம்:

• நீங்கள் செல்வதற்கு முன் உங்கள் FASTag செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்காக FASTag வாடிக்கையாளர் போர்ட்டலைப் பயன்படுத்தலாம்.

• அதிகாரப்பூர்வ NPCI போர்ட்டலில் (https://www.npci.org.in/what-we-do/netc-fastag/check-your-netc-fastag-status) உள்நுழையவும்.

• பேலன்ஸ் முறையாக உள்ளதா என்று சோதனை செய்ய வேண்டும்.

• உங்கள் கணக்கிற்கு தேவையான குறைந்தபட்ச தொகையை ரீசார்ஜ் செய்யவும்.

• கே.ஒய்.சி முறையாக இருக்கிறதா .. பிளாக் லிஸ்ட் நோட்டிபிகேஷன் வந்துள்ளதா என்பதை பார்க்கவும்.

• இதை எல்லாம்.. டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+