Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BhavaniSagar Dam Water Level Today | பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று

Subscribe to Oneindia Tamil

Sep 13, 2024, 11:07 am IST

இன்று காலை வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 963 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 94.58 அடியாக சரிந்துள்ளது.
Sep 11, 2024, 10:12 am IST

கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ந்து நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் சரியத் தொடங்கியுள்ளது. நேற்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1306 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று நிலவரப்படி பவானி சாகர் அணை நீர்மட்டம் 95.05 அடியாக சரிந்துள்ளது.
Sep 03, 2024, 11:01 am IST

பவானிசாகர் அணையானது 15 அடி கொள்ளளவும் 32.8 டி எம் சி யும் கொண்டுள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 96.53 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 26.09 உள்ளது மேலும் பவானிசாகர் அணைக்கு 2463 கன அடி வீதம் தண்ணீர் வினாடிக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் 3150 கன அடி வினாடிக்கு வெளியேற்றப்படுகின்றது.
Aug 29, 2024, 11:25 am IST

இன்று வியாழக்கிழமை நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.03 அடியாக உள்ளது. நீர் இருப்பு 26.47 டிஎம்சியாகவும், நீர்வரத்து 2251 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 3171 கன அடியாக உள்ளது.
Aug 28, 2024, 1:04 pm IST

பவானிசாகர் அணை:- நீர்மட்டம் - 97.15 அடி (105), நீர் இருப்பு - 26.55 டிஎம்சி (32.8), நீர்வரத்து - 1,092 கன அடி, நீர் வெளியேற்றம் - 2,850 கன அடி
Aug 23, 2024, 11:08 am IST

பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 3831 கனஅடியாக உள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.56 அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1625 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Aug 21, 2024, 10:33 am IST

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,592 கனஅடியில் இருந்து 5,167 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.20 அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Aug 19, 2024, 10:16 am IST

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,109 கனஅடியில் இருந்து 5,947 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.81 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 2,200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Aug 14, 2024, 10:34 am IST

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1926 கன அடியில் இருந்து 5172 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.24 அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1005 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் நீர்வரத்தால் பவானிசாகர் அணை நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Aug 13, 2024, 2:12 pm IST

பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்றைய தினம் 95.82 அடியாக இருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 13) 96.01 அடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் அணைக்கு வரும் நீரின் அளவு 2710 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1005 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
Aug 12, 2024, 11:17 am IST

இன்று காலை நிலவரப்படி, பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 95.82 அடியை எட்டி உள்ளது. பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து தற்போது 1622 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Aug 09, 2024, 10:13 am IST

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3206 கனஅடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து உயர்ந்து வருவதால் அணையின் நீர்மட்டம் இன்று 95.46 அடியாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து அணையில் இருந்து குடிநீருக்காகவும் பாசனத்திற்காகவும் வினாடிக்கு 1005 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
Aug 08, 2024, 10:22 am IST

இன்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலவரப்படி, பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3206 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. மேலும் அணையிலிருந்து தற்போது 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று 95.46 அடியாக உயர்ந்துள்ளது.
Aug 07, 2024, 10:37 am IST

இன்று ஆகஸ்ட் 7 ஆம் தேதி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2087 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. மேலும் அணையிலிருந்து தற்போது 1034 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று 95.14 அடியாக உயர்ந்துள்ள நிலையில் முழு கொள்ளளவை நெருங்க இன்னும் 10 அடிகளே உள்ளதால் ஈரோடு மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Aug 06, 2024, 6:27 pm IST

இன்றைய நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.14 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2887 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1034 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
Aug 05, 2024, 10:35 am IST

பவானிசாகர் அணை நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 93.47 அடியாக உள்ளது. அதேசமயம் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,31,000 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,33,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
Aug 05, 2024, 10:35 am IST

பவானிசாகர் அணை நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 93.47 அடியாக உள்ளது. அதேசமயம் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,31,000 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,33,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
Aug 01, 2024, 10:41 am IST

105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி, 93.18 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 1178 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Jul 31, 2024, 2:25 pm IST

நேற்று ஜூலை 30ஆம் தேதி நிலவரப்படி 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 40 வது முறையாக 90.80 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 1035 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Jul 03, 2024, 12:11 pm IST

நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7994 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் 66.14 அடியாகவும், நீர் இருப்பு 9.4 டிஎம்சி ஆகவும் இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
May 30, 2024, 10:28 am IST

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 54.07 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 54.24 அடியாக உயர்ந்ததுள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 5.53 டிஎம்சியாக உள்ளது.
May 21, 2024, 12:53 pm IST

பவானிசாகர் கீழ் பவானி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 974 கன அடியிலிருந்து 1659 கன அடியாக அதிகரித்துள்ளது . நீர்மட்டம் 105 அடி தற்போது நீர்மட்டம் 45.57அடியாக உள்ளது.
May 04, 2024, 11:11 am IST

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 45.30 அடியாகவும், நீர் இருப்பு 3.40 டிஎம்சியாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 34 கன அடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
Apr 29, 2024, 10:36 am IST

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 45.56 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Apr 10, 2024, 11:08 am IST

புதன்கிழமை (ஏப்ரல் 10) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:- நீர் மட்டம் - 47.19 அடி , நீர் இருப்பு - 3.79 டிஎம்சி , நீர் வரத்து வினாடிக்கு - 38 கன அடி , நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 205 கன அடி , அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
Apr 06, 2024, 9:50 am IST

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 05) இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்ட நிலவரம்:- நீர் மட்டம் - 47.64 அடி , நீர் இருப்பு - 3.89 டிஎம்சி , நீர் வரத்து வினாடிக்கு - 17 கன அடி , நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 200 கன அடி , பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் மட்டும் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Mar 30, 2024, 10:35 am IST

நேற்று காலை நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.96 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 362 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
Mar 21, 2024, 9:43 am IST

நேற்றைய நிலவரப்படி (20 மார்ச் 2024 ) பவானிசாகர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 58.56 கன அடியாகவும், கொள்ளளவு 32.8 டி எம் சி யாகவும், நீர் இருப்பு- 06.80 , நீர் வரத்து -31 வினாடிக்கு கன அடியாகவும் இருந்தது.
Mar 18, 2024, 11:16 am IST

திங்கட்கிழமை (மார்ச் 18) இன்று காலை 10 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் - 59.16 அடி , நீர் இருப்பு- 6.98 டிஎம்சி, நீர் வரத்து வினாடிக்கு- 26 கன அடி, நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 1,050 கன அடி. பாசனத்திற்காக அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 800 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 150 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் 1,050 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Mar 12, 2024, 10:47 am IST

பவானிசாகர் அணை நீர்மட்டம் (நேற்றைய நிலவரப்படி): நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32. 8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 62. 41 நீர் இருப்பு- 08. 06 நீர் வரத்து -47வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 3300 வினாடிக்கு கன அடி

BhavaniSagar Dam Water Level Today

பவானிசாகர் அணையின் வரலாறு;

தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய மண் அணை எனப் பெயரும் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய அணை எனும் சிறப்புப் பெயரும் பெற்றது பவானிசாகர் அணை. தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில், மாயாறும், பவானி ஆறும் ஒன்றுகூடும் இடத்தில் உள்ளது, இந்த பவானிசாகர் அணை. 1948 ஆம் ஆண்டு சுமார் பத்துக் கோடியே ஐம்பது லட்சம் செலவிடப்பட்டு இந்த அணையை கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஏறத்தாழ சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர இந்த அணையின் கட்டுமான பணி துவங்கப்பட்டு, அடுத்த ஏழு ஆண்டுகளில் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி, அப்போதைய தமிழ்நாடடின் முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் பவானிசாகர் அணையை திறந்து வைத்தார்.

எங்கு உள்ளது பவானிசாகர் அணை?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது பவானிசாகர் அணை. இந்த அணை, முழுக்க முழுக்க மண்ணால் கட்டப்பட்ட அணையாகும் . மேலும் இந்த அணை ஆசியாவில் மிகப்பெரிய 'மண் அணை' என்றும் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் பவானி ஆறு, அங்குள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காவும் பயன்படுத்தப்படுகிறது.

எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது பவானிசாகர் அணை?

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ், பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்தேக்கத்திற்கு பவானிசாகர் நீத்தேக்கம் என்று பெயர்.

பவானிசாகர் அணை முழு கொள்ளளவு விவரம்:

பவானிசாகர் அணையால் 32.8 டிஎம்சி வரையான நீரை தேக்கிவைக்க முடியும். அணையின் மொத்த உயரம் 120 அடி. அதில் உள்ள சேறு, சகதியெல்லாம் கழித்தால், 105 அடியாகக் கணக்கில் கொள்ளப்படுகிறது. பவானிசாகர் அணையின் மூலம் 16 மெகவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 2.7 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

பவானிசாகர் அணை வானிலை:

ரம்மியமான இயற்கை சூழலின் மத்தியில் இந்த பவானிசாகர் அணை அமைந்துள்ளதால் இங்கு இதமான குளிர் காற்று எப்போதும் வீசும். சில சமயங்களில் குறைந்தளவு தண்ணீர் இருந்தாலும் கூட குளிர்ச்சியான காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் வருகை எப்பொழுதும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும்.

டணாய்க்கன்_கோட்டை:

பவானிசாகர் அணைக்குள் ஓர் வரலாற்றுச்சிறப்பு மூழ்கிக் கிடக்கிறது. அதாவது டணாய்க்கன்_கோட்டை என்றழைக்கப்படும் ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் கோட்டை பவானிசாகர் அணை நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது. கோடைக்காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்தகோட்டை நம் கண்களுக்குப் புலப்படுகிறது.

ஹொய்சாளர் ஆட்சிக்காலத்தில் படைத்தளபதியான பெருமாள் தண்டநாயக்கனைப் பாராட்டி வழங்கப்பட்ட குறுநிலத்தை அவன் ஆண்டு வந்த போது கி.பி 1254ம் ஆண்டு ஆற்றுச்சமவெளியில் இந்தக் கோட்டையைக் கட்டி ஆண்டான். தண்டநாயக்கன் கோட்டை நாளடைவில் டணாயக்கன் கோட்டை ஆனது. பல நூறு ஆண்டுகள் ஆன பின்பும் கூட இன்னும் உறுதியுடன் கம்பீரமாய் நிற்கும் இந்தக்கோட்டையைப் பார்க்கும்போது அன்றையக் கட்டிடக்கலையின் நுட்பம் விளங்கும்.

பவானிசாகர் அணை - அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்:

ஆனைமலை சரணாலயம், நிலம்பூர், பண்ணாரி அம்மன் கோவில், மருதமலை கோவில், பொள்ளாச்சி, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், கோவை ஆகிய சுற்றுலா தளங்கள் பாபநாசம் அணைக்கு அருகே அமைத்துள்ளது.

பவானிசாகர் அணை - பார்வையிடும் நேரம்:

பவானிசாகர் அணையை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு அனைத்து வார நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு நுழைவு கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+