47 வயதில் அப்பா ஆன பிரேம்ஜி.. கங்கை அமரன் குடும்பமே குஷி.. தாய்மாமன் வந்தாச்சா? எழும் அக்கறை கேள்வி
சென்னை: நெஞ்சத்தை கிள்ளாதே, என்னமோ நடக்குது, கசடதபற, ஆர்.கே.நகர், பார்ட்டி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் பிரேம்ஜி அமரன்.. தற்போது பெண் குழந்தைக்கு தந்தையாகியிருக்கிறார் 47 வயதான பிரேம்ஜி அமரன்... இதையடுத்து, கங்கை அமரன் குடும்பமே மகிழ்ச்சியில் பூரித்து போயிருக்கிறது.. பிரேம்ஜி தம்பதிக்கு வாழ்த்துக்களும் குவிந்தவாறு உள்ளனர்..
பிரபல நடிகரும், பாடகருமான பிரேம்ஜி முதலில் சினிமாவில் இசையமைப்பாளராகத்தான் அறிமுகமானார்... ஆனால் போதுமான அளவுக்கு மிளிராத காரணத்தினால் நடிக்க துவங்கினார்.

தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தையும் பெற்றார்.. சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து அசத்தினார்.
திருப்புமுனை படங்கள்
எனினும், தன்னுடைய சகோதரர் வெங்கட் பிரபுவின் படங்களில் தொடர்ந்து நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம்.. குறிப்பாக, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற படங்கள் பிரேம்ஜிக்கு திருப்புமுனையாக அமைந்த படங்களாகும்.
அதேபோல யுவன் சங்கர் ராஜா இசையில் பல வெற்றிப் பாடல்களை பாடியுள்ள பிரேம்ஜி, ஒருசில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.
45 வயது கடந்தும் திருமணம் செய்யாமல் இருந்த நிலையில், கடந்த வருடம்தான் இந்து என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சேலம் பேங்க்
இந்து சேலத்தைச் சேர்ந்தவர். சேலத்திலேயே ஒரு தனியார் பேங்க்கில் பணிபுரிந்து வருகிறார். பிரேம்ஜி, இந்து இருவருக்கும் இடையே கடந்த 3 வருடமாக பழக்கம் ஏற்பட்ட நிலையில், அது காதலாக மாறி, திருமணத்தில் முடிந்தது.. திருத்தணி முருகன் கோவிலில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது. இந்து பிரேம்ஜியைவிட 20 வயது இளையவர் என்று சொல்லப்பட்டது
திருமணத்துக்கு பிறகு மனைவி இந்துவுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு, தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வந்தார்..
இந்து பிரேம்ஜி
சமீபத்தில் இவரது மனைவி இந்துவுக்கு வளைகாப்பு விழாவை சிறப்பாக நடத்தினார் பிரேம்ஜி... இந்நிலையில், நேற்றைய தினம் பிரேம்ஜி - இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்தத் தகவலை 'வல்லமை' பட டைரக்டர் கருப்பையா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
இதனால் தம்பதி இருவருக்கும் திரையுலகில் இருந்து மட்டுமல்லால், சுற்றம் சூழ, நண்பர்கள் என குவிந்து தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். ஆனாலும், இந்துவின் சகோதரர் மட்டும் இன்னும் வரவில்லையாம்.
இந்துவின் தம்பி
திருமணமான புதிதில் இந்து மீடியாவுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "என் கல்யாண ஆல்பத்தில் என்னுடைய தம்பி மட்டும் இல்ல. அவன் கல்யாணத்துக்கு கூட வரவில்லை. என்னுடைய கணவரை அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆனாலும் அவர் பேச முயற்சி செய்தார். ஆனால் அவன் பேசவில்லை.
இப்போது தான் காலேஜ் படிச்சு முடித்திருக்கிறான். அவனுக்கு புரிந்துகொள்ளும் வயது இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன். எப்போது அவனுக்கு புரியுதோ அப்போது அவன் வரட்டும் என்று விட்டுவிட்டோம்" என்று வருத்தத்துடன் கூறியிருந்தார்.
கங்கை அமரன் குடும்பம் குஷி
தற்போது பெண் குழந்தை பிறந்ததையடுத்து பிரேம்ஜியின் குடும்பம் சந்தோஷத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், "உங்கள் தம்பி வந்தாரா இந்து? குழந்தையை பார்த்தாரா? என்று இணையவாசிகள் அக்கறையுடன் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்..
ஒருசிலர் 'இது அவர்களது குடும்ப விவகாரம்' என்று கமெண்ட்களை பதிவிட்டாலும், "இதுவரை போனது போகட்டும், பெண் குழந்தை பிறந்திருப்பதை கேள்விப்பட்டதுமே தாய்மாமன் வந்துவிடுவார் பாருங்கள், பிரிந்திருந்த அக்கா-தம்பியை இந்த பெண் குழந்தைதான் சேர்த்து வைக்க போகிறாள்" என்றெல்லாம் இந்துவுக்கு வாழ்த்துக்களாக கூறி வருகிறார்கள்












Click it and Unblock the Notifications