Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் என் நண்பர்.. திரிஷாவை பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! மிரட்டல் போன்! உடைத்து பேசிய பார்த்திபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் நடிகை திரிஷா மற்றும் நடிகர்-இயக்குநர் பார்த்திபன் தொடர்பான விவகாரம் தான் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் திரிஷா குறித்து பார்த்திபன் கூறிய கருத்து இணையத்தில் வைரலானது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிஷா சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டதும் இந்த விவகாரம் மேலும் பேசப்பட்டது.

இந்த சர்ச்சை கிளம்பிய உடனே பார்த்திபன் ஒரு வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டிருந்தார். அதில் தன்னுடைய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், யாரையும் அவமதிக்க வேண்டிய நோக்கம் இல்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால் அதில் சர்ச்சை அடங்கவில்லை. இதற்கிடையில் தனது யூடியூப் சேனலில் பார்த்திபன் மேலும் ஒரு விரிவான விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை வெளியிடுவதற்கு முன்பாக அவர் ஒரு ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

Parthiban Trisha Vijay

போன் செய்த நபர்

அந்த ப்ரோமோ வீடியோவை பார்த்ததும் ஒருவர் தனக்கு போன் செய்து இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என்று கேட்டதாக பார்த்திபன் கூறியுள்ளார். அது குறித்து அவர் கூறும்போது, "ப்ரோமோ வெளியிட்ட சில நிமிடத்திலே ஒரு நபர் போன் செய்து இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என்று கேட்டார். அது எனக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளித்தது. ஏற்கனவே விஷயம் அடங்கி வருகிறது. இதை வெளியிட்டால் மீண்டும் பரபரப்பு ஆகிவிடும் என்று அவர் சொன்னார்" என்று விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

ஆனாலும் பார்த்திபன் இப்போது ஒரு புது வீடியோவில் அந்த நிகழ்ச்சியில் நடந்ததை முழுமையாக விளக்கினார். அவர் கூறும்போது, தன்னை ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் சில மணி நேரம் இடைவேளை கிடைத்ததால் போனை பார்த்துக்கொண்டிருந்தபோது திரைப்பட விமர்சகர் அந்தணன் நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சில கருத்துகளை கூறியிருந்தார் என்று தெரிவித்துள்ளார்.

அந்த விமர்சனத்தில் கூறப்பட்ட முக்கிய விஷயம் என்னவென்றால், தற்போது அரசியலில் விஜய் நல்ல ஆதரவை பெற்று வருகிறார். பல சர்ச்சைகள் வந்தபோதும் மக்கள் மத்தியில் அவருக்கு பெரிய எதிர்ப்பு உருவாகவில்லை. ஆனால் சமீபத்தில் அவர் திரிஷாவுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தான் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது என்று அந்தணன் கூறியதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

அதே கருத்து

இந்த கருத்தை சமூக வலைதளங்களிலும் பலரும் பகிர்ந்திருந்தனர் என்று பார்த்திபன் கூறுகிறார். மேலும் இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி கூட இதே மாதிரியான கருத்தை கூறியுள்ளார். "விஜய்க்கு இப்போது மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது. அரசியலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற இடத்தில் இருக்கிறார். அப்படியிருக்கும்போது இதுபோன்ற சர்ச்சை தேவையா என்ற ஆதங்கத்தில் பலரும் பேசிக்கொண்டிருந்தார்கள்" என்று பார்த்திபன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

திரிஷா பற்றி பேசிய காரணம்

அந்த நேரத்தில் நிகழ்ச்சியில் திரிஷாவின் படம் திரையில் வந்ததால் தான் தன்னால் அந்த கருத்து சொல்லப்பட்டது என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார். "நான் அதை திட்டமிட்டு பேசவில்லை. அந்த நேரத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் சில நிமிடங்கள் திகைத்து நின்ற பிறகுதான் அந்த வார்த்தையை சொன்னேன்" என்றும் அவர் கூறினார்.

மேலும் அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகே தன்னுடைய நண்பர் ஒருவர் "நீங்கள் இப்படி பேசியிருக்க வேண்டாம், இது நாளைக்கு பெரிய பரபரப்பாகி விடும்" என்று கூறியதாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அதை கேட்டவுடன் அந்த நிகழ்ச்சியை நடத்திய தனியார் சேனலுக்கு தான் போன் செய்து அந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என்று கேட்டதாகவும் அவர் கூறினார்.

ஆனால் அங்கு இருந்த ரசிகர் ஒருவரின் மூலம் அந்த வீடியோ வெளியேறி சமூக வலைதளங்களில் பரவிவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

மன்னிப்பு வீடியோ எடுக்க தாமதம்

அந்த வீடியோ வைரலானதும் உடனே மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ எடுத்து அனுப்பியதாக பார்த்திபன் கூறினார். ஆனால் அதை எடிட் செய்து அனுப்புவதற்குள் சில மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாகவும், அதற்குள் திரிஷா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பார்த்திபன் குற்றச்சாட்டு

திரிஷா வெளியிட்ட அந்த பதிவில், ஒருவர் வேண்டுமென்றே திரிஷாவின் புகைப்படத்தை திரையில் காட்டி அதற்கு பார்த்திபன் பதில் சொன்னது போல சூழ்நிலை உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால் அது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு என்றும் பார்த்திபன் கூறியுள்ளார்.

"நான் யாரைப் பற்றியும் தரக்குறைவாக பேசக்கூடியவன் கிடையாது. மகளிர் தினத்தில் பேச வேண்டுமானால் வேலு நாச்சியார் போன்ற பல பெண்களை பற்றி பேசுவேன். ஒரு பெண்ணை குறை சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்று அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் விஜய் குறித்து பேசும்போது, "விஜய் என்னுடைய நெருங்கிய நண்பர். இப்போதும் நண்பராகத்தான் இருக்கிறார். அவருடைய மனைவி சங்கீதா இன்னும் அவருடைய மனைவிதான். விவாகரத்து இன்னும் கிடைக்கவில்லை. அதனால் அவரை முன்னாள் மனைவி என்று சொல்ல முடியாது. இந்த நிலையில் மூன்றாவது நபராக திரிஷா பற்றி நான் பேச வேண்டிய அவசியமே இல்லை" என்றும் பார்த்திபன் கூறியுள்ளார்.

ரசிகர்கள் காத்திருக்கும் பதில்

பார்த்திபன் இவ்வாறு விரிவாக விளக்கம் அளித்துள்ள நிலையில், நடிகை திரிஷா தரப்பில் இருந்து இதற்கு என்ன பதில் வரும் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஏற்கனவே ஒரு பதிவு மூலம் அவர் மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்ததால், பார்த்திபனின் இந்த புதிய விளக்கத்திற்கு அவர் மீண்டும் பதில் அளிப்பாரா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

இதனால் இரண்டு நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய இந்த திரிஷா - பார்த்திபன் விவகாரம் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+