கேவலத்தை சிவகுமாரால் பொறுத்துக்க முடியல.. அந்த நடிகை மனதில் ஏற்படுத்திய கருப்பு வடு.. மாறாத அவமானம்
சென்னை: நடிகர் சிவகுமார் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.. கடந்த 2001ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'பூவெல்லாம் உன் வாசம்' படம் தான் சிவகுமார் கடைசியாக நடித்த படமாகும்... திரைப்படங்களிலும், சீரியல்களிலும் சிவகுமார் ஏன் நடிப்பதில்லை என்ற காரணத்தை, பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இன்றைய சினிமாவின் "கேவலங்களை" பொறுக்க முடியாமல், "இனி சினிமாவில், சீரியலில் நடிக்க கூடாது என்று முடிவு செய்து" விலகியதாக மூத்த பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணனுக்கு தந்த பேட்டியில் நடிகர் சிவகுமார் ஏற்கனவே கூறியிருந்தார்..

சீரியல்களில் அதிக பணம் சம்பாதித்த போதிலும், சக நடிகர்களின் தொழில்முறை ஒழுக்கமின்மையையும், மரியாதைக் குறைவையும் தாங்க முடியாமலேயே சிவக்குமார் தன்னுடைய நடிப்பிலிருந்து முழுமையாக விலகிவிட்டதாகவும் சித்ரா லட்சுமணன் பேட்டியில் சிவகுமாரே கூறியிருந்தார்.
சிவகுமாரை காதலித்த ஹீரோயின்
இந்நிலையில், நம்முடைய Filmibeat யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, அன்றைய காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த பல நடிகைகள் சிவகுமார் சாரை காதலித்திருக்கிறார்கள்.. அவரை திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டுள்ளார்கள்..
ஆனால், சிவகுமார் சார், சினிமா என்பது ஒரு தொழில் என்றும், தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை என்பது வேறு என்றும் பிரித்து பார்த்து வாழ்ந்தவர்..
பிஸியாகவே நடித்து கொண்டிருந்த சிவக்குமார் சார், திடீரென சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.. இதற்கான காரணத்தை அவரே ஒரு காணொலியில் சொல்லி உள்ளார்..
ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது
அதாவது, ஒரு சீரியல் ஷூட்டிங்கில் சிவகுமார் நடித்து கொண்டிருந்தார்.. அது மிகவும் முக்கியமான எமோஷனல் சீன் என்பதால், சிவகுமார் நடிப்பில் தீவிரமாக முழுகவனம் செலுத்தி வசனம் பேசி நடித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் நடிகை ஒருவர், தன்னுடைய செல்போனில், ஆண் நண்பருக்கு சத்தமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தாராம்.. இதனால் நடிக்க முடியாமல் டைவர்ட் ஆன சிவக்குமார் சிவக்குமார், "ஏன்ம்மா நடிக்கும்போது டிஸ்டர்ப் பண்றீங்க?" என்று கேட்டுள்ளார்..
அலட்சியப்படுத்திய நடிகை
அதற்கு நடிகை, "ஏன் சார் இத்தனை வருஷம் நீங்க சினிமாவில் இருக்கீங்க, நான் பேசுவது டிஸ்டர்ப்பா இருந்தால் டப்பிங்கில் மேட்ச் பண்ணிக்கலாம் சார், இதெல்லாம் தெரியாதா உங்களுக்கு?" என்று அலட்சியமாக பதிலளித்தாராம்.
இந்த பதில், சிவக்குமாருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.. உண்மையிலேயே பயங்கர கோபக்காரர் சிவகுமார்.. ஆனால், இந்த சினிமா தொழிலை நேசித்தும், நாணயத்துடனும் நடந்து கொண்டுவருவதால், அந்த இடத்தில் தன்னுடைய கோபத்தை காட்டி கொள்ளாமல் இருந்துவிட்டார் சிவகுமார்..
சபதம் எடுத்த சிவகுமார்
அதுமட்டுமல்ல, ஒரு மூத்த நடிகருக்குரிய மரியாதை இல்லாமல், சினிமாவின் தொழில்முறை ஒழுக்கம் குலைந்துவிட்டதே என்றும் வருத்தப்பட்ட சிவகுமார், 'இனிமேல் நமக்கு சினிமா வேண்டாம், நமக்கான சினிமா இது கிடையாது. சினிமாவில் இனியும் தொடர்ந்தால் மரியாதை கிடைக்காது' என நினைத்து என்று ஒதுங்கிவிட்டார்..
அந்த நடிகை பேசியதை அவமானமாக கருதிய சிவக்குமார், "மரியாதை இல்லாத இடத்தில் ஒரு கணம் கூட இருக்க முடியாமல், இனி நடிக்கவே மாட்டேன் என்று சபதம் எடுத்தார்.. அதனால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துவிட்டு, மொத்தமாக திரைப்பயணத்தையும் நிறுத்திவிட்டார்
மனதில் பதிந்த கருப்பு வடு
எத்தனையோ படங்களில் நடிக்க வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்தும்கூட, 20 வருடமாக அந்த நடிகை ஏற்படுத்திய கருப்பு வடு, சிவகுமார் மனதில் இருந்து மறையவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுவே மற்றவர்களாக இருந்தால் காசுக்காகவும், வாய்ப்புக்காகவும் நடித்திருப்பார்கள். ஆனால், அந்த பிடிவாதத்தையும், கோபத்தையும் சிவகுமார் தளர்த்தி கொள்ளவேயில்லை.. ஒரு நல்ல நடிகனுக்கு மட்டுமே இந்த பிடிவாதம் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications