கீர்த்தனா பெயர் ஏன் முதலில் இருக்கு.. டென்ஷனான அமைச்சர் ஜெகதீஸ்வரி.. பதற்றமான மாவட்ட ஆட்சியர்!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: அரசு விழாவில் தனது பெயரை முதலில் போடாமல் அமைச்சர் கீர்த்தனா பெயரை போட்டது ஏன் என்று மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பிய வீடியோ பேசுபொருளாகி இருக்கிறது. துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் தனது பெயரே முதலில் வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் விளையாட்டுத்துறை சார்பாக சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்காக வைக்கப்பட்ட பேனரில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலிடத்திலும், 2வது இடத்தில் மகளிர் நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயர் இடம்பெற்றிருந்தது.

TVK

விருதுநகர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக ஜெகதீஸ்வரி இருந்து வருகிறார். தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கிறார். இதனால் விழாவின் பேனரில் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை முதலில் பார்த்த அமைச்சர் ஜெகதீஸ்வரி டென்ஷனாகி இருக்கிறார். உடனடியாக அங்கிருந்த மாவட்ட ஆட்சியரையும் அழைத்திருக்கிறார்.

அப்போது அமைச்சர் ஜெகதீஸ்வரி, பொறுப்பு அமைச்சர் என்ற வகையில் என்னுடைய பெயர் தான் முதலில் இருக்க வேண்டும்.. எதற்காக அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலில் போட்டீர்கள்.. விழா ஏற்பாடுகளை நீங்கள் தானே செய்தீர்கள் என்று ஆட்சியர் சுகபுத்ராவிடம் கேள்விகளை எழுப்பி கொந்தளித்தார்.

உடனடியாக அங்கிருந்த மற்ற அதிகாரிகளுக்கும் டோஸ் விழுந்துள்ளது. இதன் காரணமாக நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாகவே விருதுநகர் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் கீர்த்தனா இடையில் மோதல் இருந்து வருகிறது. இதனால் அமைச்சர் கீர்த்தனாவின் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறினர்.

என்னதான் விருதுநகர் சொந்த ஊர் என்றாலும், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழில் தன்னுடைய பெயர் இருக்க வேண்டும் என்று அமைச்சர் கீர்த்தனா தரப்பு கெடுபிடி விதித்து வருகிறது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு கொடுத்தாலும், அவர் இன்னும் அந்த மாவட்டம் பக்கமே செல்லவில்லை. இதனால் அமைச்சர் கீர்த்தனா தரப்பு மீது பல்வேறு நிர்வாகிகளும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+