Avatar Fire and Ash Review: அவதார் 3 எப்படி உள்ளது.. உலக முக்கிய விமர்சகர்களின் விமர்சனம் தொகுப்பு இதோ!
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்டகால கனவுத் திட்டமான அவதார் வரிசையில் மூன்றாவது படமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' (Avatar: Fire and Ash) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இருபது வருடங்களாக கேமரூன் இதைச் செதுக்கியுள்ளார். இதுகுறித்து உலகின் பல்வேறு முன்னணி விமர்சகர்கள் சொன்ன விமர்சனங்களின் தொகுப்பு உங்களுக்காக (Avatar: Fire and Ash Review)
முதல் பாகத்தில் காடு, இரண்டாம் பாகத்தில் கடல் எனப் பயணித்த கேமரூன், இந்த முறை 'நெருப்பு' (Fire) மற்றும் 'சாம்பல்' (Ash) சார்ந்த புதிய பண்டோரா உலகத்தைக் காட்டியுள்ளார்.

இந்தப் படம் உணர்ச்சிபூர்வமான, கண்கவர் காட்சிகளைக் கொண்ட ஒரு சாகசப் பயணமாக பண்டோராவைச் சுற்றி அமைகிறது. நா'வி இனப் போராளியான வரங் மற்றும் அவளது அஷ் கிளான் (Ash Clan) என்ற புதிய வில்லன் குழு இப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பாகத்தின் மிகப்பெரிய ஹைலைட், ஜேக் சல்லியின் வளர்ப்பு மகனான ஸ்பைடர் (Spider) பற்றியது. இதுவரை மனிதனாக முகமூடி அணிந்து பண்டோராவின் காற்றைச் சுவாசித்த ஸ்பைடர், இப்போது தாய் தெய்வம் எய்வாவின் (Eywa) அருளால் நேரடியாக அந்த கிரகத்தின் காற்றைச் சுவாசிக்கும் சக்தியைப் பெறுகிறான். இது மனிதர்களுக்கும் நா'வி இனத்திற்கும் இடையிலான ஒரு முக்கியப் பாலமாக அவனை மாற்றுகிறது.
புதிய வில்லன்கள்: சாம்பல் இனம் (Ash People)
இம்முறை ஜேக் சல்லிக்கு சவாலாக வராங் தலைமையிலான புதிய நா'வி பழங்குடியினர் அறிமுகமாகிறார்கள். இவர்கள் மற்ற நா'விகளைப் போல அமைதியானவர்கள் அல்ல; மிகவும் முரட்டுத்தனமானவர்கள். இவர்களுடன் RDA படைகளும் இணைவது கதையை மேலும் பரபரப்பாக்குகிறது.
அதே பாணி, ஆனால் அதிக வேகம்
படம் 'தி வே ஆஃப் வாட்டர்' பாணியிலேயே பயணிக்கிறது. குடும்பப் பாசம், பாயக்கானுடனான நட்பு, இறுதியில் பிரம்மாண்டமான கப்பல் போர் என அதே கட்டமைப்பு இருந்தாலும், காட்சிகளின் வேகம் மற்றும் விறுவிறுப்பு இந்த முறை மிக அதிகம். குறிப்பாக, மனிதர்கள் பண்டோராவில் அமைத்துள்ள பிரம்மாண்டமான நகரமும், அங்கு நடக்கும் சண்டைக் காட்சிகளும் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
லோ'ஆக் - புதிய கதைசொல்லி
இந்த முறை ஜேக் சல்லிக்குப் பதிலாக அவனது மகன் லோ'ஆக் (Lo'ak) கதையைச் சொல்கிறான். அவனது நடிப்பு சிறப்பாக இருந்தாலும், கதையின் இறுதியில் அவன் ஒரு பார்வையாளனாகவே நிற்பது ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தைத் தரலாம்.
படத்தின் பலம் மற்றும் பலவீனம்
பலம்: ஹாலிவுட் தரத்தின் உச்சத்தைத் தொடும் VFX காட்சிகள், 3D மற்றும் HFR தொழில்நுட்பம் தரும் விஷுவல் விருந்து.
பலவீனம்: கதையின் வேகம் சில இடங்களில் சீரற்றதாக இருப்பது மற்றும் முந்தைய பாகத்தின் சாயல் அதிகமாக இருப்பது.
விமர்சனம்
RDA இன்னும் முழுமையாகத் தோற்கடிக்கப்படவில்லை, சவால்கள் இன்னும் மிச்சமிருக்கின்றன. ஆனால், நா'வி இனமும் துல்குன் திமிங்கிலங்களும் இணைந்து கொடுக்கும் அந்தப் பதிலடி ரசிகர்களுக்கு ஒரு திருப்திகரமான திரையரங்கு அனுபவத்தைத் தருகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications