பலித்த ஏவிஎம் சரவணன் சொல்? சினிமாவை காலி பண்ண டிவி சீரியல், ஹீரோ சம்பளம்! ரஜினியின் மினிமம் கேரண்டி
நடிகர்கள் அடிக்கடி படம் கொடுக்காததற்குக் காரணம், போட்ட பணத்தைத் திரும்ப எடுப்பதற்கான உத்தரவாதம் இன்று இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவாரா ஜெய்சங்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.. மேலும், தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை, நடிகர்களின் சம்பளம் மற்றும் சிறு படங்களின் முக்கியத்துவம் குறித்தும் அந்த பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "பெரிய நடிகர்கள் அடிக்கடி படம் கொடுக்காததற்கு காரணம், போட்ட பணத்தை திரும்ப எடுப்பதற்கான உத்தரவாதம் இன்று இல்லை.

பெரிய நிறுவனங்கள் படம் தயாரிப்பதை குறைத்துக் கொண்டதற்கு முக்கிய காரணமே நடிகர்கள், இயக்குநர்களின் அதிக சம்பளம்தான்.. மணிரத்னம், சங்கர் போன்ற டைரக்டர்களிடமிருந்து பிரம்மாண்ட கலாச்சாரம் ஆரம்பித்தது.. எனவே போட்ட பணத்தை எடுப்பதற்கான உத்தரவாதம் இல்லை..
பெரிய நடிகர்களின் பெரிய சம்பளம்
கேமராமேன், எடிட்டர் போன்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் அதிக சம்பளம் கேட்கிறார்கள்.. போதாக்குறைக்கு 'பேன் இந்தியா' படங்கள் எடுப்பதாலும் பட்ஜெட் கட்டுக்கடங்காமல் போகிறது. சினிமா நலிவடைவதற்கும் இது ஒரு காரணமாகிறது. இதனால் கேரக்டர் ஆர்டிஸ்ட்கள், துணை நடிகர்களுக்கு மிகக் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது... அந்த சொற்ப சம்பளம்கூட அவர்களுக்கு சரியாக வந்து சேருவதில்லை.
தெலுங்கு சினிமாவிலும் தமிழ்நாட்டை போலவே இந்த சிக்கல்கள் உள்ளன. ரவி தேஜா போன்ற நடிகர்களின் படங்கள் 80-100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, வெறும் 5-10 கோடி மட்டுமே வசூல் செய்யும் சூழல் அங்கேயும் நிலவுகிறது.
தியேட்டர்கள் காலி
இன்று சினிமா ஒரு சூதாட்டம் போல மாறிவிட்டது என்று மறைந்த ஏவிஎம் சரவணன் ஒருமுறை சொல்லியிருந்தார்.. காரணம், சினிமா கார்ப்பரேட் மயமாகிவிட்டது..
இன்று ரஜினிகாந்திற்கு மட்டுமே 'மினிமம் கேரண்டி' என்ற வசூல் உத்தரவாதம் உள்ளது.. பணத்தை போட்டால் நஷ்டம் வராது என்ற நிலை ரஜினியிடம் மட்டுமே உள்ளது... கமல், விஜய், அஜித் என யார் கிட்டேயும் 100% உத்தரவாதம் இல்லை.
விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வராததால்தான் தியேட்டர்களில் வசூல் பாதிக்கப்படுவதாக உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.. படம் ஓடவில்லை என்றாலும், சில நேரங்களில் ஓடியது போன்ற மாயையை உருவாக்குகிறார்கள்... படம் தோல்வியடைந்தாலும் மறுநாளே 'வெற்றி விழா' கொண்டாடும் விசித்திரமான கலாச்சாரமும் இந்த சினிமாவில் நிலவுகிறது.
ரஜினிகாந்த்துக்கு மினிமம் கியாரண்டி
அதாவது ஒரு படம் நன்றாக ஓடுகிறது என்ற பிம்பத்தை உருவாக்க இன்று அதிக அளவில் புரமோஷன் செய்யப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கு பணம் கொடுத்து 25,000 முதல் 50,000 வரை பேக்கேஜ் தரப்பட்டு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.. கமலுக்கு தக் லைஃப் படத்துக்கும் இப்படித்தான் அன்று புரமோஷன் செய்யப்பட்டது. ஆனாலும் அந்த படம் ஓடல..
தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு ரஜினிகாந்துக்கு மட்டும் தான் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அவருக்கு இணையாக அஜித்திற்கும், அவரை தொடர்ந்து விஜய்க்கும் ரசிகர்கள் உள்ளனர். இதில் யாருக்கு அதிக கைத்தட்டல் கிடைக்கிறது என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொள்ளலாம்..
ஆனால், ரஜினி, விஜய், அஜித் என யாராக இருந்தாலும் சரி, உழைப்புக்கேற்ற ஊதியத்தை மட்டுமே வாங்க வேண்டும்... அவர்கள் வாங்கும் அதிகப்படியான சம்பளம் தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும் காலி செய்கிறது.. முன்னணி நடிகர்கள் நடிப்பதாலேயே எல்லா படங்களும் லாபம் தந்துவிடாது. ரஜினியின் 'தர்பார்' மற்றும் விஜய்யின் 'சர்க்கார்' போன்ற படங்கள் நஷ்டங்களை சந்தித்திருக்கின்றன..
ஏவிஎம் சரவணன்
அன்று ஏவிஎம் போன்ற நிறுவனங்கள் தான் டைரக்டர்களின், நடிகர்களின் சம்பளத்தை முடிவு செய்தன.. ஆனால் இப்போது நடிகர்கள் தான், டைரக்டர்கள், தயாரிப்பாளரையும் முடிவு செய்கிறார்கள்...
மலையாளத்தில் முகம் தெரியாத நடிகர்கள் நடித்தாலும் கதை நன்றாக இருந்தால் மக்கள் அங்கு பார்க்கிறார்கள்.. கேரளாவில் கதைதான் ஹீரோ.. எனவே தமிழகத்தில் தற்போது வெளிவந்துள்ள 'சிறை' போன்ற தரமான சிறு படங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.. ஏனென்றால் ஒரு சிறிய கருவை வைத்துக்கொண்டு, 2 மணி நேரம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் வகையில் மிகச் சிறப்பாக எடுத்துள்ளார்கள்..
டிவி சீரியல்கள் வரவு
முன்பெல்லாம் குடும்ப பெண்கள் வேலைகளை முடித்துவிட்டு மதிய காட்சிகளுக்கு தியேட்டர்களுக்கு வருவார்கள். ஆனால் இப்போது பெண்கள் டிவி சீரியல்களில் மூழ்கிவிட்டார்கள்.. சினிமாவை அழிப்பதில் டிவி சீரியல்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...
வெப் சீரிஸ்களை பொறுத்தவரை சினிமாவின் அடுத்தகட்ட வளர்ச்சியாகத் தெரிகிறது. ஏனென்றால், அதிக உழைப்பும் தரமும் உள்ளது.. ஆனாலும், தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்ப்பது போன்ற உணர்வை தராது..
அப்பார்ட்மெண்ட்கள் உருவாகும்
எனவே இந்த சினிமா தொழில் பிழைக்க வேண்டுமானால் நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்... தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என அனைவரும் இணைந்து ஒரு கூட்டு முடிவை எடுக்க வேண்டும்...
லாபகரமான ஒரு தொழிலாக சினிமாவை மாற்றாவிட்டால், கிராமப்புறங்களில் உள்ள பல தியேட்டர்கள் காணாமல் போய், அந்த இடங்களில் அப்பார்ட்மெண்ட்கள் உருவாகக்கூடும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications