முட்டியை போட்டு ஜாய் கிட்ட லவ் சொன்ன மாதம்பட்டி ரங்கராஜ் அடித்து தாக்கினாரா? கோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: பிரபல நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் பல்வேறு தளங்களில் முன்பு கூறியிருந்த நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் இருவரையும் இன்று நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது.. அதன் பேரில், இருவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள்.
பிரபல நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தொடர்ந்து கூறி வரும் குற்றச்சாட்டுகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

ஜாய் கிரிசில்டா கடந்த சில மாதங்களாக சோஷியல் மீடியாவில் மாதம்பட்டியை குற்றம் சாட்டி அடுக்கடுக்கான பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜூடன் நெருக்கமாக இருந்த தருணங்களின் வீடியோவும் போட்டோக்களையும் வெளியிட்டு, தன்னுடைய குழந்தைக்கு அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் ஜாய். போலீஸில் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை என கூறி மகளிர் ஆணையத்தையும் நாடி, அங்கு இருவரும் நேரில் விசாரணைக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தன்னை அடித்து துன்புறுத்தியதாக ஜாய் தன்னுடைய 2வது புகாரையும் அளித்திருந்தார். கர்ப்பமாக இருந்த காலத்தில் ரங்கராஜ் இரண்டு முறைதான் பார்த்து சென்றார், அதுவும் மன உளைச்சலில் தான் முடிந்தது என்று அவர் ஊடகங்களில் பேசியிருந்தார்.. அதேபோல ஜாயின் அம்மாவும் மாதம்பட்டி தனது பேரனை அடித்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்திருந்தது நினைவிருக்கலாம்.
சென்னை கோர்ட்
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் எட்டியபோது, 18வது மேஜிஸ்திரேட் முன்பு இன்று விசாரணை நடைபெற்றது. இரு தரப்பினரையும் தனித்தனியாகவும், சேர்த்தும் நீதிபதி விளக்கங்கள் கேட்டு விசாரித்தார்.
பிறகு இந்த வழக்கு தொடர்ந்து செல்லும் முன்னர் 2 பேரும் கட்டாயமாக கவுன்சிலிங் பெற வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தியது. அடுத்த மாதத்திற்குள் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்பதோடு, அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
முதல் மனைவி போட்டோ
அதே நேரத்தில், அடுத்த விசாரணைக்காக பிப்ரவரி 13ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் இருவருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, காலையில் இருந்து சோஷியல் மீடியாவில் ஒரு போட்டோ வைரலாகி கொண்டிருக்கிறது.. ஜாய் சமீபத்தில் "என் கணவரை எங்கயாவது பார்த்தால் எனக்கு டிஎம் பண்ணுங்க" என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்தது அதிக கவனத்தை ஈர்த்திருந்தார்.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி, ரங்கராஜுடன் எடுத்திருந்த ஒரு போட்டோவை சமூக வலைதளத்தில் இன்ற வெளியிட்டுள்ளார்.. உடனே இதே போட்டோவை எடுத்து மாதம்பட்டியும் ரீ-ஷேர் செய்துள்ளார்.. இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் நிலையில், ஜாய் - மாதம்பட்டி இருவருக்கும் நீதிமன்றத்திலிருந்து இத்தகைய முக்கிய உத்தரவு வந்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications