உடைந்த பரணி மனசு? மைனா படத்தில் முதல்ல நடிக்க இருந்தது இவரா? 100 நாள் பிளாக்பஸ்டர் தந்த ஹீரோவாச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்லூரி படம் 100 நாள் ஓடியதால், நாடோடி படத்தில் வாய்ப்பு கிடைத்தது.. அப்போது சமுத்திரகனி சார் என்னை உடல் எடை அதிகரிக்க சொன்னார்.. அதனால் 55 கிலோவில் இருந்து 72 கிலோவாக வெயிட் அதிகரித்தேன்.. அந்த படமும் ஹிட்.. நாடோடிகள் அதைவிடப் பெரிய வசூலை ஈட்டியதால், 'கல்லூரி' வெற்றி சற்று சிறியதாக தெரிந்தது" என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் நடிகர் பரணி.

மூத்த பத்திரிகையாளரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனின் Touring Talkies என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள நடிகர் பரணி, "நடிப்பு என்பது எனக்கு தற்செயலாகதான் நடந்தது.. ஆனால் நான் உண்மையிலேயே ஒரு டைரக்டராக வரவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன்.. 10 வயசில் இருந்தே கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் இப்படி எல்லாத்தையும் நானே செய்யணும்னு நினைச்சேன்..

Cinema Actor Bharani Myna

கல்லூரி பட வாய்ப்பு

அதனால்தான், கல்லூரி படத்தின் ஆடிஷன் நடந்தபோது, டைரக்டர் பாலாஜி சக்திவேலுடன் சேர்ந்து அசிஸ்டென்ட் டைரக்டராக வேலை பார்க்க வந்தேன்.. அப்போது அங்கிருந்த ஒருவர், "டைரக்‌ஷனுக்கு வந்திருக்கியா? மதுரைக்காரங்க வெறும் பேச்சுதான், அவங்கெல்லாம் வேஸ்ட், டைரக்டராகணும்னு சொல்றே, உனக்கு நடிக்க தெரியுமா" என்று கிண்டலாக சொன்னார்..

உடனே எனக்கு கோபமாகி, என்ன நடிக்கணும்? என்று சொல்லிட, ஏற்கனவே நான் எழுதி வைத்திருந்த 'லவ் ஃபெயிலியர் ஆனவன் கோர்ட்டில் பேசுவது போன்ற ஒரு சீனை அப்படியே நடித்து காட்டினேன்.. இதை அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் கேண்டி கேமராவில் ஷூட் செய்துவிட்டனர்..

செகண்ட் லீடு கேரக்டர்

இதை பார்த்த பாலாஜி சக்திவேல், என்னை கூப்பிட்டு NCC கேடர் போல நடித்து காட்ட சொன்னார். இதற்கு பிறகு அந்த படத்தின் ஆடிஷன் கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் வருடம் என்னையும் சேர்த்து பலருக்கும் நடந்தது..

நடிகர் லாரன்ஸ் மாஸ்டரின் அசிஸ்டென்ட் ஒருவர் அங்கே வந்தபோது, "இவன் தான் இந்த படத்தில் செகண்ட் லீடாக பண்றான்" என்றார். அப்போதுதான் இந்த கல்லூரி படத்தில் நான் நடிக்கிறேன் என்று எனக்கு தெரிந்தது..

முதல் நாள் ஷூட்டிங்கில் நான் ரொம்பவே பயந்தேன்.. "டேய் உன்னை நம்பிதான்டா படம் ஃபுல்லா பேசுற மாதிரி வச்சிருக்கேன்" என்று பாலாஜி சக்திவேல் என்னை உற்சாகப்படுத்தினார்.. என்னை நடிகராக ஏற்றுக்கொண்டதுக்கும், இந்த வாய்ப்பு கொடுத்ததற்கும் டைரக்டர் ஷங்கர், பாலாஜி சக்திவேல் இருவருக்குமே என்னுடைய நன்றியை சொல்லணும்.

72 கிலோ வெயிட்

எத்தனையோ பணம் படைத்தவர்கள் இந்த ரோலில் பணத்தைக் கொடுத்து நடிக்க நிறைய பேர் இருந்தார்கள். ஆனால், பாலாஜி சக்திவேல் சார் என்னை செலக்ட் செய்தது பெரும் பாக்கியம்.. என்னுடைய கல்யாணத்துக்கு ஷங்கர் சார் வந்து, புத்தகம் அன்பளிப்பாக தந்தது, எனக்கு தேசிய விருது கிடைச்ச மாதிரி இருந்தது..

கல்லூரி படம் 100 நாள் ஓடியதால், நாடோடி படத்தில் வாய்ப்பு கிடைத்தது.. அப்போது சமுத்திரகனி சார் என்னை உடல் எடை அதிகரிக்க சொன்னார்.. அதனால் 55 கிலோவில் இருந்து 72 கிலோவாக வெயிட் அதிகரித்தேன்.. அந்த படமும் ஹிட்.. நாடோடிகள் அதைவிடப் பெரிய வசூலை ஈட்டியதால், 'கல்லூரி' வெற்றி சற்று சின்னதாக தெரிந்தது..

மைனா படம் மிஸ்ஸிங்

கல்லூரி, நாடோடிகள், தூங்க நகரம் இப்படி இந்த படங்கள் எல்லாமே 100 நாட்கள் ஓடியது.. இந்த தூங்க நகரம் படத்தின் போதுதான், மைனா படம் ஆஃபர் தேடி வந்தது..

தேதி காரணமாக அந்த படத்தை மிஸ் பண்ணிட்டேன்.. அதேபோல தென்மேற்கு பருவ காற்று படமும் எனக்கு மிஸ் ஆகிவிட்டது.. நல்ல படங்களை எல்லாம் விட்டுட்டியே என்று எல்லாரும் என்கிட்ட சொன்னாங்க..

ஆனால், எனக்கென்று இருந்தால், அது கண்டிப்பாக என்னை தேடி வரும் என்று உறுதியாக நம்பினேன்.. காரணம், இத்தனை கோடி பேரில், ஒரு சில ஆயிரம் நபர்கள்தான் நடிகர்களாகிறார்கள்.. அந்த சில ஆயிரம் பேர்களில் நானும் ஒரு நடிகராக இருப்பது சந்தோஷம்தான்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+