அசைக்கவே முடியாத இளையராஜாவின் "இரும்பு கோட்டையை" அசைத்த இசையமைப்பாளர் தேவா? கானா பாடலின் காட்ஃபாதர்
சென்னை: "90களில் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த இளையராஜாவின் ஆளுமைக்கு சவால் விடுத்து, ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரே காலகட்டத்தில் இணைந்து, திரை இசையுலகில் புதிய சகாப்தத்தை தொடங்கியவர் இசையமைப்பாளர் தேவா. 'தேனிசைத் தென்றல்' என்று அழைக்கப்பட்ட தேவா, கானா பாடல்களின் காட்ஃபாதராகப் போற்றப்படுகிறார்" என்று புகழ்ந்து பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார் மூத்த பத்திரிகையாளர் சுபைர்.
Jeeva Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சுபைர், "தேவாவின் இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம். இவர் மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர். இசையமைப்பதற்கு முன்பு தூர்தர்ஷனில் ஒரு அரசு ஊழியராகப் வேலை பார்த்து வந்துள்ளார்.

இரட்டை இசையமைப்பாளர்கள்
ஆரம்பத்தில் இவர் இசையமைப்பாளர் சந்திரபோஸ் அவர்களுடன் இணைந்து 'தேவா போஸ்' என்ற பெயரில் இரட்டை இசையமைப்பாளராக சில படங்களுக்கு பணியாற்றினார். ஆனால், அந்த படங்கள் சரியாக போகவில்லை. பிறகு ஆளுக்குகொரு பக்கம் பிரிந்த நிலையில், சந்திரபோஸுக்கு மட்டும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் தேவாவோ, 75 காலகட்டங்களுக்கு பிறகு சினிமா வாய்ப்புகளை தேடி அலைந்தார்.
தேவாவுக்கு பக்கபலமாக அப்போது இருந்தவர்கள் தேவாவின் சகோதரர்கள்தான்.. பக்திப் பாடல்கள் மற்றும் சின்ன சின்ன படங்களுக்கு தேவா அப்போது இசையமைத்து வந்தார். பிறகு 'தேவா C' என்ற பெயருடன் ஒரு படத்தில் பணிபுரிந்தார்.. ஆனால், அந்த படமும் சரியாக போகவிலை..
பிறகு புதுமுகங்கள் நடித்த "மாட்டுக்கார மன்னார்" என்ற படத்துக்கு இசையமைத்தார்.. அந்த படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
இரும்பு கோட்டையை அசைத்தவர்
இதற்குபிறகுதான், தேவாவின் திரைப்பட வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது, 1990-களின் தொடக்கத்தில் வெளியான நடிகர் பிரசாந்தின் முதல் படமான 'வைகாசி பொறந்தாச்சு'.. தான்.
வசந்த கால பறவைகள், சூரியன் என்று வரிசையாக படங்களில் இசையமைத்தார். அண்ணாமலை, பாட்சா என்று பெரிய பெரிய படங்களுக்கு இசையமைத்து உச்சத்துக்கு போய்விட்டார் தேவா.
ரஜினிகாந்துக்கும் இளையராஜாவுக்கும் இடையே சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்ட சமயத்தில், 'அண்ணாமலை' மற்றும் 'பாட்ஷா' போன்ற பிரம்மாண்டப் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புத் தேவாவுக்குக் கிடைத்தது. இதன்மூலம்தான் அவரின் உச்சபட்ச வளர்ச்சி தொடங்கியது.
இளையராஜா இரும்புக் கோட்டை
ஆனால் சுமார் 25 வருடங்களாகவே தமிழ் சினிமாவில் இளையராஜா மட்டுமே அசைக்க முடியாத இரும்பு கோட்டையாகவே இருந்தார்...
தேவா தன்னுடைய வளர்ச்சியின்போது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார். இளையராஜாவுக்கு போட்டியாக ஒருவரை ஏற்க முடியாததால், அவர்மீது "காப்பி அடிக்கிறார்" என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இளையராஜாவின் சாயல்கள் தேவாவின் பாடல்கள்நிறைய உள்ளது..
அண்ணாமலை' படத்தின் வெற்றிக்கு இமாலயமான விமர்சனங்கள் வந்தாலும், அதன் இசை 'தம்பிமலை' என்று வர்ணிக்கப்பட்டது.
கானா' பாடல்களின் காட்ஃபாதர்
இசையமைப்பாளர் தேவா 'கானா பாடல்களின் காட்ஃபாதர்' என்று அழைக்கப்படுகிறார். 'கானா' (Gaana) என்ற வார்த்தை தமிழ் கிடையாது; அது ஹிந்தி வார்த்தை... கானா என்றால் பாட்டு என்று அர்த்தம். வடஇந்தியாவை சேர்ந்தவர்கள் இரவு நேரத்தில் குல்ஃபி ஐஸ் விற்பார்கள்..
இரவில் ஐஸ் விற்பனையின்போது களைப்பு தெரியாமல் இருக்க, தமிழ் டியூன்களில் இந்தி பாடல்களை பாடினார்கள்.. அப்படித்தான் கானா பாடல்கள் தமிழகத்தில் அறிமுகமானது. பிறகு நம்ம மக்களே இந்த பாடல்களை இறந்தவர்கள் வீடுகளில் பாட ஆரம்பித்தனர்.. தென்மாவட்டங்களில் இறந்தவர்வீடுகள்ல பாடுவதற்கு ஒப்பாரி பாடல் என்பார்கள்.. வடமாவட்டங்களில் சென்னை போன்ற பகுதிகளில் மரண கானா என்பார்கள்.
காரணம், இறந்தவர்களின் வீடுகளில் விடிய விடிய விழித்திருக்கவும், இறந்தவரின் புகழைப் பாடுவதற்காகவும் பாடப்பட்ட பாடல்கள்தான் 'மரண கானா.. சினிமாவுக்குள் வந்த தேவா, திரையில் கொண்டு வந்தார்..
கானா பாடல்களின் காட்ஃபாதர்
திரையுலகிற்குள் முதன்முதலில் கொண்டு வந்து, மக்களிடையே பிரபலப்படுத்தியதாலேயே தேவா அவர்கள் 'கானா பாடல்களின் காட்ஃபாதர்' என்று புகழப்படுகிறார்.
புது முக இயக்குநர்களுக்கு நிறைய வாய்ப்புகளை தந்தது தேவாதான்.. காரணம், தேவாவின் அணுகுமுறைதான். இளையராஜாவிடம் எளிதாக அணுகி, நமது விருப்பத்தைச் சொல்ல முடியாத நிலை இருந்தபோது, தேவா புதிய இயக்குநர்களுக்கு மிகவும் நட்புணர்வுடன் பழகினார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications