நெட்பிளிக்சில் திடீரென ஃபேமசான 'எக்கோ' (Eko) மலையாள திரைப்படம்.. திரைக்கதையும், கிளைமேக்சும் மாஸ்!
சென்னை: மலையாள சினிமா என்றாலே த்ரில்லர் கதைகளுக்குப் பஞ்சம் இருக்காது. அந்த வரிசையில் 'கிஷ்கிந்தா காண்டம்' படக்குழுவினரின் அடுத்த படைப்பாக வெளிவந்துள்ள 'எக்கோ' (Eko) தற்போது நெட்ஃபிக்ஸில் (Netflix) வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

கதைக்களம்
கேரள-கர்நாடக எல்லையில் உள்ள 'காட்டுக்குன்னு' என்ற அடர்ந்த பனிமூட்டமான மலைப்பகுதி. அங்கு 'மலாத்தி' (மலாயா தேசத்தைச் சேர்ந்த சோயி) என்ற வயதான பெண்மணி தனது காவலாளி 'பியூஸ்' (சந்தீப் பிரதீப்) மற்றும் ஒரு கூட்டமான வேட்டை நாய்களுடன் தனியாக வசித்து வருகிறார். ஊரை விட்டு ஒதுங்கி வாழும் இவருக்கும், பல வருடங்களாகத் தலைமறைவாக இருக்கும் ஒரு மர்மமான நாய் வளர்ப்பாளரான 'குரியச்சன்' என்பவருக்கும் என்ன சம்பந்தம்? அவரைத் தேடி வரும் அந்நியர்களால் வெளிப்படும் உண்மைகள் என்ன? இதுதான் படத்தின் கதை (Eko Movie Review).
படத்தின் பிளஸ்
- நாய்களின் மிரட்டல்: படத்தில் நாய்கள் வெறும் விலங்குகளாக இல்லாமல், கதையை நகர்த்தும் முக்கிய கதாபாத்திரங்களாகவே வருகின்றன. நாய்களின் ஆக்ரோஷமான காட்சிகள் பார்வையாளர்களை சீட் நுனியில் அமர வைக்கின்றன.
- திரைக்கதை: 'கிஷ்கிந்தா காண்டம்' புகழ் பாஹுல் ரமேஷின் எழுத்து மற்றும் டின்ஜித் அய்யத்தனின் இயக்கம் படத்தை ஒரு சர்வதேச தரத்திற்கு உயர்த்தியுள்ளது. மெதுவாகத் தொடங்கும் படம், இரண்டாம் பாதியில் எடுக்கும் வேகம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
- நடிப்பு: சந்தீப் பிரதீப் ஒரு அமைதியான இளைஞராகவும், அதே சமயம் ஆக்ரோஷமான இடங்களிலும் நடிப்பில் மிரட்டியுள்ளார். வினீத் (காதல் தேசம் புகழ்) மற்றும் நரேன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை கச்சிதமாகச் செய்துள்ளனர்.
- இசை மற்றும் ஒளிப்பதிவு: ஜி.வி. பிரகாஷ் பாணியில் முஜீப் மஜீத்தின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றுகிறது. மலைப்பகுதியின் அழகையும் ஆபத்தையும் ஒருசேரக் காட்டியிருக்கிறது ஒளிப்பதிவு. இப்படி ஒரு லொகேசனை வசனமே இல்லாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்பதை போன்ற ஒரு பகுதியில்தான் கதை நகர்கிறது.
- திருப்பங்கள்: யார் நல்லவர், யார் கெட்டவர் என்று அறிய முறியாதபடி பாத்திரங்களின் தன்மை கிளைமேக்ஸ் வரை தொடர்ந்து மாறிக்கொண்டே உள்ளது. அடச்சே.. இத்தனை த்ரில்லர் படம் பார்த்தும், நாம் சரியாக கணிக்கவில்லையே என்று நம்மை அரை மணி நேரத்திற்கு ஒருவாட்டி ஏமாற்றியபடியே இருக்கிறார் இயக்குநர்.
மைனஸ்:
படம் ஒரு 'Slow-burn' ரகம் என்பதால், ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கலாம். ஆக்ஷன் படங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இது சற்றே ஏமாற்றம் அளிக்கலாம். ஆரண்ய காண்டம் போலவே கிளைமேக்ஸ் என்ன என்பதை பார்வையாளர்களுக்கே விட்டுள்ளார் இயக்குநர். பலருக்கும் அது புரியாமல் போக கூடும். இருமுறை கடைசி 5 நிமிட காட்சியை திரும்ப ஓட்டிப் பார்க்க நேரிடும். ஆனால் அதுவும் ஒரு அழகுதான்.
படம் எப்படி
நீங்கள் ஒரு த்ரில்லர் ரசிகர் என்றால், குறிப்பாக கிளைமாக்ஸ் ட்விஸ்டுகளை விரும்புபவர் என்றால், 'எக்கோ' உங்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக இருக்கும். நெட்ஃபிக்ஸில் தமிழ் டப்பிங்கிலும் இது கிடைக்கிறது!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications