இன்போசிஸ், அக்சென்சர்.. ஐடி வேலையை தூக்கியெறிந்துவிட்டு சினிமாவுக்கு வந்த பெரிய தலைகள்!
சினிமா பல கோடி மக்களின் கனவு, ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்புள்ள துறை. இன்று பலர் சினிமா துறையிலும், மீடியாவிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். பல இளம் பொறியாளர்கள் நிலையான ஐடி வேலையை விட்டுவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகின்றனர்.
ஆனால் வெகு சிலருக்கு அந்த சினமாவின் ஃபோகஸ் லைட் அவர்கள் மீது அடிக்கும், மற்றவர்களுக்கு இந்த ஃபோக்கஸ் கிடைப்பது கிடையாது. இப்படி தென்னிந்திய சினிமாவில் இன்போசிஸ், அக்சென்சர் என ஐடி நிறுவன பணியில் இருந்து வெளியேறி பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீநிதி ஷெட்டி
KGF படத்தில் ரீனா தேசாய் வேடத்தில் நடித்துப் புகழ் பெற்ற ஸ்ரீநிதி ஷெட்டி எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து, பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அக்கென்சர் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றிய அவர், 2016-17 ஆண்டுகளில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். கேஜிஎப் படத்தைத் தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடாவில் பல படங்களில் நடித்துள்ளார், சமீபத்தில் இவர் நடித்த HIT: The Third Case பெரிய அளவில் பேசப்பட்டது. தமிழில் இவர் விக்ரம் உடன் நடித்த கோப்ரா திரைப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். தற்போது தெலுங்கில் ஆதர்ஷ குடும்பம் வீட்டு எண் 47 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சூது கவ்வும் கருணாகரன்
தஞ்சாவூர் சாஸ்த்ராபல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங்-ல் பட்டம் பெற்ற கருணாகரன். அக்கென்சர் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய அவர், சினிமா மீதான ஆர்வத்தால் ஷார்ட் பிளிம் மூலம் இவரது பயணம் துவங்கிக் கலகலப்பு, பீட்சா (2012), ஜிகர்தண்டா, சூது கவ்வும், நேற்று இன்று நாளை, சமீபத்தில் வா வாத்தியார் வரை சுமார் 50 படங்களுக்கு மேல் நகைச்சுவை வேடங்களிலும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துப் புகழ் பெற்றார்.

கலையரசன்
கலையரசன் கம்பியூட்டர் அப்ளிகேஷன்ஸ் படித்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 2006 முதல் 2010 வரை அக்கென்சரில் பணியாற்றிய அவர், மெட்ராஸ், சர்பட்டா பரம்பரை, சமீபத்தில் தண்டகாரண்யம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழைப் பெற்றார்.
டோவினோ தாமஸ்
டோவினோ தாமஸ் சென்னையில் காக்னிசண்ட் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர். படிக்கும் போதும் சரி, பணியாற்றும் போதும் சரி விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் மாடலிங் ஆகியவற்றில் தீவிரமாக இருந்தார். மாடலிங் கரியர் இவருக்கான சினிமா வாய்ப்பை 2012ஆம் ஆண்டு கொடுத்தது மூலம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார். இன்று மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். சுமார் 30க்கும் அதிகமான படங்களிலே ஹீரோவாக நடத்த டோவினோ தாமஸ்-ன் சமீபத்திய திரைப்படமான பள்ளிச்சத்தம்பி ஏப்ரல் 15ஆம் தேதி வெளியானது.

நிவின் பாலி
ப்ரேமம் புகழ் நிவின் பாலி கேரளாவில் இன்ஜினியரிங் படித்து பெங்களூரில் 2006 -08 வரையிலான காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். பின்னர் தந்தையின் மரணத்திற்கு பின் கேரளாவுக்கு திரும்பிய அவர் முழு நேர சினிமாவுக்குத் தாவினார் நிவின் பாலி. 2010 முதல் மலையாள சினிமாவில் நடித்து வரும் அவர் ப்ரேமம், பெங்களூர் டேஸ், ஆக்சன் ஹீரோ பிஜு, சர்வம் மாயா போன்ற 30க்கும் அதிகமான படத்தில் நடித்துப் புகழ் பெற்றார், தற்போது மலையாள திரையுலகில் மிகவும் முக்கிய நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
பேசில் ஜோசப்
பேசில் ஜோசப் இன்போசிஸ் திருவனந்தபுரத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர். ஷார்ட் பிலிம் மூலம் சினிமாவுக்கு வந்தவர், பணியாற்றி வந்த காலகட்டத்திலேயே 3-4 ஷார்ட் பிலிம் இயக்கியது மூலம் சினிமா துறையில் இறங்கும் வாய்ப்பை பெற்றார். இயக்குநர் கனவுடன் வந்தாலும் நடிப்பில் மாஸ் காட்டி வரும் பேசில் ஜோசப் தமிழ், மலையாளம் எனப் பல மொழிகளில் நடிப்பது மட்டும் அல்லாமல் இந்திய அளவில் புகழ்பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த பொன்மன் பெரிய அளவில் பேசப்பட்டது. இதோடு தமிழில் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வந்து அனைவரையும் சர்ப்ரைஸ் செய்தார் பேசில் ஜோசப்.













Click it and Unblock the Notifications