Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ
சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில், மரியராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள "ஹேப்பி ராஜ்" திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக, இந்த படத்தைப் பற்றி பிரபல யூடியூபர் ப்ளூ சட்டை மாறன் (Happy Raj Review) அளித்த விமர்சனம் தற்போது அதிகம் பேசப்படுகிறது.

ஹேப்பி ராஜ் ரிவ்யூ
இந்த படத்தின் கதை ஒரு சிம்பிளான காதல் கோணத்தில் தொடங்குகிறது. ஹீரோ, ஒரு பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் அந்த பெண், அவரை காதலிக்கவும் திருமணம் செய்யவும் முடியாது என்று நேராக மறுக்கிறாள். அதற்குக் காரணம் ஹீரோவின் அப்பா. ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் அவருக்கு "குதிரை மூட்டை" என்ற பட்டப்பெயர் இருப்பதாகவும், அதை வைத்து ஹீரோவையும் "சின்ன குதிரை மூட்டை" என்று கேலி செய்வார்கள் என்றும், இப்படிப்பட்ட அவமானத்தை தாங்க முடியாது என்பதாலேயே காதலை நிராகரிக்கிறாள்.
இதனால் மனமுடைந்த ஹீரோ, இந்த ஊரை விட்டு வெளியூருக்கு சென்று வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடிவு செய்கிறார். அங்கே சென்று மற்றொரு பெண்ணுடன் உறவு உருவாகி, திருமணத்திற்கும் போகும் நிலையில், மீண்டும் ஒரு புதிய பிரச்சனை எழுந்து அந்த கல்யாணமும் நின்று விடுகிறது. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக் கதை.
ஹேப்பி ராஜ் கதை
இந்த மையக்கரு சமூகத்தில் தோற்றத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடும் மனநிலையை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக அப்பா - மகன் உறவு, சமூக அவமானம், இன்செக்யூரிட்டி போன்ற விஷயங்களை படம் பேச முயற்சிக்கிறது. ஆனால், இதை எப்படிக் கூறியிருக்கிறார்கள் என்பதில்தான் பெரும்பாலான விமர்சனங்கள் வருகின்றன.
ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ
அதிலும் குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் இந்த படத்தை கடுமையாக கலாய்த்துள்ளார். அவரது கருத்துப்படி, இந்த படம் சொல்ல வருகிற மையக்கதை நல்லதுதான். ஆனால் அதை சரியாக சொல்லாமல், முழுக்க முழுக்க காமெடி பெயரில் எரிச்சலை ஏற்படுத்தும் காட்சிகளால் நிரப்பியிருப்பதாக கூறுகிறார்.
மேலும், இந்த படத்தின் நீளம் பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்றும், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கதை சரியாக நகராமல் "கொலையா கொல்றாங்க" என்று விமர்சித்துள்ளார். ஆரம்பத்தில் கதை கொஞ்சம் தொடங்கி, அதை நீண்ட நேரம் மறந்து வைத்து, கடைசியில் தான் மீண்டும் அந்த மையக்கருவை தொடுகின்றனர் என்பதும் அவரது குற்றச்சாட்டு.
ப்ளூ சட்டை மாறன் மேலும் கூறுகையில், இந்த படத்தின் உண்மையான ஹீரோ ஜி.வி. பிரகாஷ் குமார் அல்ல, ஜார்ஜ் (George Maryan) தான் என்று பாராட்டியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதியில் ஜார்ஜ் மரியனின் நடிப்பு மட்டும் தான் படத்தை கொஞ்சம் காப்பாற்றுகிறது என்றும், அந்த சில நிமிடங்களுக்காக முழு படத்தையும் பார்த்து முடிக்க வேண்டுமா என்பது ரசிகர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் என அவர் காமெடியாக கலாய்த்து இருக்கிறார்.
இதே நேரத்தில், சில ரசிகர்கள் இந்த படத்தின் கருத்தை பாராட்டி வருகின்றனர். தோற்றத்தை வைத்து மனிதர்களை அவமதிக்கும் சமுதாய மனநிலையை எதிர்த்து பேசும் முயற்சி நல்லது என்றும், குடும்பத்தோடு பார்க்கக்கூடிய சில உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் எமோஷனல் காட்சிகள் சிலருக்கு பிடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தொழில்நுட்ப ரீதியாக பார்க்கும்போது, ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை மற்றும் பின்னணி இசை சில காட்சிகளில் நன்றாக வேலை செய்துள்ளது. கிராமத்து பின்னணி மற்றும் இயல்பான லொக்கேஷன்களும் படத்திற்கு ஒரு தனி ஃபீல் கொடுக்கின்றன.
மொத்தத்தில், "ஹேப்பி ராஜ்" நல்ல மையக்கருவை கொண்டிருந்தாலும், திரைக்கதை மற்றும் காட்சிப்படுத்தலில் பலவீனமடைந்த படம் என்றே சொல்லப்படுகிறது. குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் இந்த படத்தின் குறைகளை நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியதால், தற்போது இந்த படம் குறித்து ரசிகர்களிடையே கலவையான கருத்துக்கள் நிலவி வருகின்றன.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications