ரூ.1800 கோடி சொத்துள்ள மகேஷ் பாபு.. 100 கோடி கார்கள் நிற்கும் வீடு! யாருக்கும் தெரியாத அந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு திரையுலகினரால், "இளவரசன்" என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் மகேஷ் பாபு பற்றி பல்வேறு தகவல்களை ஆஸ்கார் மூவிஸ் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.. மகேஷ்பாபுவின் சினிமா பயணம் மட்டுமல்லாமல், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பாலாஜி பிரபு தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது:

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "மகேஷ் பாபு இன்று தெலுங்கு நட்சத்திரமாக அறியப்பட்டாலும், அவர் பிறந்து வளர்ந்தது, படித்தது, எல்லாமே சென்னையில்தான். சாந்தோம் பகுதியில் உள்ள சென்ட் பீட்ஸ் பள்ளியில் படித்திருக்கிறார்.. லயோலாவில் காலேஜ் முடித்துள்ளார்..

Cinema Mahesh Babu

ஆண்ட்டி மனோரமா

12 வயதிலேயே மகேஷ் பாபுவை எனக்கு தெரியும்.. மனோரமாவின் வீட்டுக்கு எதிர் வீட்டில் அவர்கள் குடியிருந்தனர்.. என் அப்பாவுடன் நடிகை மனோரமாவின் வீட்டுக்கு நான் சென்றபோது, நீலகண்ட மேத்தா தெருவில் மகேஷ்பாபு அவரது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.. அப்போது அவரது கிரிக்கெட் பால், மனோரமாவின் வீட்டில் வந்து விழுந்துவிட்டது..

அந்த பந்தை எடுக்க ஓடிவந்தார் மீசை முளைக்காத சிறுவன் மகேஷ் பாபு.. :ஆண்ட்டி, வீட்டில் பால் விழுந்துடுச்சு" என்றதுமே, "எடுத்துக்கோ..ப்பா" என்றார் மனோரமா.. மகேஷ்பாபு அந்த பந்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றதுமே, என் அப்பாவிடம் மனோரமா, "அண்ணே, இது தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகன்" என்றார்..

கல்லூரி படிக்கும்போது, டிவிஎஸ் 50 வண்டியில்தான் வந்து சென்றிருக்கிறார்.. சென்னை பையன் என்றே சொல்லலாம். சென்னை தமிழை சூப்பராக பேசுவாராம் மகேஷ் பாபு..

ரூ.100 கோடிக்கு கார்கள்

மகேஷ் பாபுவின் உழைப்பு போன்ற பல விஷயங்கள் விஜய் போலவே இருக்கும்.. இருவருமே லயோலாவில் படித்தவர்கள்.. விஜய் போலவே மகேஷ் பாபு ஒரு கார் பிரியன்.. லேட்டஸ்ட் கார்களை இருவருமே வாங்கிவிடுவார்கள்.. அந்தவகையில் ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி, ரேஞ்ச் ரோவர் உட்பட 100 கோடிக்கு மகேஷ்பாபு வீட்டில் கார்கள் வரிசைக்கட்டி நிற்கும்..

விஜய்யின் பல படங்களை தெலுங்கில் மகேஷ் பாபு நடித்திருக்கிறார். டைம்டேபிள் போட்டு வேலை பார்ப்பது உட்பட பல விஷயங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியாகவே இருக்கும்.. விஜய்யின் 'துப்பாக்கி' படத்தின் ரீமேக் உரிமையை மகேஷ் பாபு வாங்கியிருந்தாலும், அதை டப்பிங் உரிமையாகவே தந்தார்..

மகேஷ் பாபுவுக்கு கிட்டத்தட்ட ரூ.1500 முதல் ரூ.1800 கோடி வரை சொத்து இருப்பதாக சொல்கிறார்கள்.. பல நிறுவனங்களுக்கு முக்கிய முதலாளியாகவும் (MD/CEO) இருந்து வருகிறார்.

எளிமையே இவரது அடையாளம்!

தென்னிந்திய திரைநடிகர்களிலேயே அதிகபட்சமாக உதவி செய்வது மகேஷ்பாபுதான்.. தான் சம்பாதிப்பதில் குறைந்தது ரூ.30 கோடி தந்துடுவார்..

ஹைதராபாத்தில் "ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை" கட்டி தந்துள்ளார்.. நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சைகளை செய்து வருவது மிகப்பெரிய விஷயமாகும்..

சில ஊர்களை தத்தெடுத்து, அங்குள்ள குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவுகளை மகேஷ் பாபு குடும்பம் தொடர்ந்து செய்து வருகிறது.

இடுப்பில் குத்திய பவுன்சர்கள்

எல்லா ரசிகர்களுடன் அன்பாக, பாசமாக பேசுபவர்.. ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் மகேஷ் பாபு பேசி கொண்டிருந்தபோது, ரசிகர் ஒருவர் ஓடிவந்து மகேஷ்பாபு கட்டிப்பிடித்துள்ளார்.. இதைப்பார்த்த அங்கிருந்த பவுன்சர்கள், அந்த ரசிகரை விலக்கிவிட்டு, அவரது இடுப்பிலே குத்தியுள்ளனர்.

இதைப்பார்த்து பதறிப்போன மகேஷ் பாபு உடனடியாக அந்த ரசிகரை மீட்டு அவரிடம் அன்பாக பேசி, போட்டோவும் எடுத்துக் கொண்டார். பிறகு அந்த பவுன்சிலர்களையும் கண்டித்திருக்கிறார்.. இதைப்பார்த்த அந்த ரசிகர்கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.

அதேபோல, பாலிவுட் ஸ்டார் நம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. 2 குழந்தைகளும் உள்ளனர்.. ஆனால் இன்னமும் இளமையாகவே உள்ளார் மகேஷ் பாபு.. தன்னுடைய அப்பா கிருஷ்ணாவிடம் கொடுத்த சத்தியத்தின் காரணமாக, அரசியலுக்கு மகேஷ் பாபு வரமாட்டார், அது உறுதி" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+