தூங்குமூஞ்சி ஸ்டார்.. அடுத்த எஸ்கே.. சேலைக்கு எதிரான கருத்து.. சர்ச்சையை கிளப்பிய ஹாட்ஸ்பாட் 2 மச்?
சென்னை:Yours Shamefully குறும்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் ஹாட்ஸ்பாட் படத்தை கடந்த ஆண்டு இயக்கி இயக்குநராக அறிமுகமானார். ஹாட்ஸ்பாட் படத்தில் ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கலையரசன் என பலர் நடித்திருந்தனர்.
படத்தின் டிரைலர் ரொம்பவே ஆபாசமாகவும் டபுள் மீனிங் உடனும் இருந்த நிலையில், படம் ரொம்ப மோசமாக இருக்கும் என நினைத்தே பலரும் தியேட்டருக்குச் சென்று படத்தை பார்க்காமல் ஃப்ளாப் ஆகிவிட்டனர்.

ஆனால், விமர்சகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஓடிடியில் வெளியான பின்னர், பலரும் ஹாட்ஸ்பாட் படத்தை பார்த்து பாராட்டினர். இந்நிலையில், ஹாட்ஸ்பாட் 2 படத்தின் நடிகர்கள் அறிமுக டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏகப்பட்ட பிரபல நடிகர்கள் இந்த 2ம் பாகத்தில் இணைந்துள்ளனர். மேலும், சர்ச்சைக்கும் பஞ்சமே வைக்காத வகையில் வசனங்களை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தனது ஸ்டைலில் வைத்துள்ளார்.
விஷ்ணு விஷால் தயாரிப்பு: நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். இந்த ஆண்டு அவரது தம்பி அறிமுகமான "ஓஹோ எந்தன் பேபி" படத்தையும் தயாரித்து கேமியோ ரோலில் நடித்திருந்தார். மேலும், அவர் நடித்த ஆர்யன் படத்தையும் தயாரித்து நடித்திருந்தார். இந்நிலையில், அடுத்ததாக விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் மற்ற பிரபல நடிகர்கள் நடிக்கும் படத்தை தயாரித்துள்ளார். புதுமையான முயற்சிகளுக்கு தொடர்ந்து விஷ்ணு விஷால் முதலீடு செய்து வருகிறார்.
செல்ஃப் ட்ரோல் டிரைலர்: சோஷியல் மீடியாவில் சினிமா பிரபலங்களை ட்ரோல் செய்தால் பிரபலங்கள் சண்டைக்கே வந்துவிடுவார்கள். இந்நிலையில், செல்ஃப் ரோஸ்ட் அல்லது செல்ஃப் ட்ரோல் வரிசையில் ஒரு புதுவிட டிரைலரை உருவாக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் விக்னேஷ் கார்த்த்திக். ஆதித்யா பாஸ்கர், அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, பிரிகிடா சாகா, பவானி ஸ்ரீ, ரக்ஷன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் அவர்களின் செல்ஃப் ட்ரோல் உடன் கூடிய காட்சியில் நடித்துள்ளனர்.
தூங்குமூஞ்சி அஸ்வின்: ஹாட்ஸ்பாட் முதல் பாகத்தில் நடித்த ஆதித்யா பாஸ்கர் ஹாட்ஸ்பாட் 2 மச் படத்திலும் இணைந்துள்ளார். ஹாட்ஸ்பாட் 96 படம் வந்தாலும் 96 ஜூனியர் ராம் நடிப்பார் என ஆதித்யா பாஸ்கரை ட்ரோல் செய்துள்ளனர். அவரை தொடர்ந்து அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது நம்ம குக் வித் கோமாளி ஃபேம் அஸ்வின் குமாரைத் தான். தூங்குமூஞ்சி ஸ்டார் என்றே கலாய்த்துள்ளனர்.
சேலை பஞ்சாயத்து: எங்க மறைக்கணுமோ அங்க மறைக்காம.. கவர்ச்சியான இடங்களை கரெக்ட்டா காட்டுற டிரெஸ் தானே சாரி, மோஸ்ட் செக்ஸியஸ்ட் டிரெஸ்ஸும் சாரி தான் என தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலைக்கு எதிரான வசனத்துடன் வாரிசு படத்தில் குட்டி பாப்பாவாக நடித்த சஞ்சனா திவாரி இப்போ இளம்பெண்ணாக நடித்துள்ள சீன் மற்றும் அவர் பேசும் வசனங்கள் தான் தற்போது சோஷியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஹாட்ஸ்பாட் டிரெய்லர் பஞ்சாயத்து போல இதுவும் படத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
அடுத்த சிவகார்த்திகேயன்: விஜய் டிவியில் இருந்து வந்த 10434வது ஆளு தான் நம்ம ரக்ஷன் என்றும், அடுத்த சிவகார்த்திகேயன் ஆக ட்ரை பண்றாரு என்றும் செமையா ஓட்டியுள்ளனர். கடைசியாக பிரியா பவானி சங்கர் படத்தை எப்படியாவது ஹிட்டாக்கணும்னு வந்து சேர்ந்துட்டார் என அவரையும் டோட்டலாக பங்கம் செய்துள்ளனர். ஹாட்ஸ்பாட் திரைப்படத்தில் பல அருமையான கருத்துக்கள் இடம்பெற்ற நிலையில், ஹாட்ஸ்பாட் 2 மச் படமும் சமூக கருத்துக்களுடன் வெளியாகும் என தெரிகிறது. வெயிட் பண்ணிப் பார்ப்போம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications