சபாஷ் சரியான போட்டி.. டிசம்பர் 18.. ஜன நாயகன் செகண்ட் சிங்கிள் வருது.. பராசக்தி 10 நிமிட சீன்!
சென்னை: எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தின் முதல் பாடலான 'தளபதி கச்சேரி' வெளியாகி இதுவரை 75 மில்லியன் வியூஸ் அள்ளி டிரெண்டாகி வருகிறது. ஏகப்பட்ட பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அந்த பாடலுக்கு ரீல்ஸ் போட்டு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவிலும் அதகளம் செய்துள்ளனர்.
இந்நிலையில், தளபதி விஜய்யின் 2வது சிங்கிள் தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தற்போது வெளியிட்டுள்ளது.

ஃப்ளாஷ்பேக்கில் விஜய் போலீஸ் அதிகாரியாகவும், பிரெசன்ட்டில் ஒரு பாதுகாவலனாகவும் இந்த படத்தில் இருப்பார் என்றே தெரிகிறது. பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜன நாயகன் என தொடர்ந்து பலரும் சொல்லி வரும் நிலையில், துணிவு டைரக்டர் எச். வினோத் தளபதி விஜய்யை வைத்து என்ன தரமான சம்பவத்தை செய்துள்ளார் என்பதை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கிடக்கின்றனர்.

ஜன நாயகன் செகண்ட் சிங்கிள்: புயலுக்கு முன் அமைதி என நேற்றே கேவிஎன் பில்டப் கொடுக்க ஆரம்பித்த நிலையில், தற்போது வரும் டிசம்பர் 18ம் தேதி ஜன நாயகன் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என்கிற அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷியாக்கி உள்ளனர். முதல் பாடலில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடனமாட கலர்ஃபுல்லான பாடலாக தளபதி கச்சேரி பாடல் அமைந்தது. இந்நிலையில், அனிருத் இசையில் உருவாகியுள்ள செகண்ட் சிங்கிள் பாடல் வெறித்தனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Calm till yesterday..
— KVN Productions (@KvnProductions) December 16, 2025
Storm from the 18th🔥#JanaNayaganSecondSingle is releasing on Dec 18th 🧨#JanaNayagan#JanaNayaganPongal#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss… pic.twitter.com/aHPnTb6IOg
பராசக்தி உடன் மோதல்: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, அதர்வா மற்றும் ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படத்தின் 10 நிமிட பிரத்யேக வீடியோ வரும் டிசம்பர் 18ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சியுடன் வெளியாகும் என இன்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதே தேதியில் ஜன நாயகன் படத்தின் 2வது பாடலும் வெளியாகிறது. இதனால், கண்டிப்பாக சோஷியல் மீடியாவில் விஜய் vs சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சண்டை மற்றும் போட்டா போட்டி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள்












Click it and Unblock the Notifications