Jananayagan Box office: ஜனநாயகன் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.. விஜய் ரசிகர்கள் கடும் அப்செட்!
சென்னை: தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் நடித்த கடைசி படமான 'ஜனநாயகன்' பல்வேறு சிக்கல்களைக் கடந்து கடந்த 23 ஆம் தேதி ரிலீஸ் ஆன நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' வசூல் குறைந்தது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது தமிழக முதல்வராக இருக்கும் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து ஜூலை 23 அன்று திரையரங்குகளில் வெளியான 'ஜனநாயகன்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. உலகளவில் முதல் நாளில் ரூபாய் 80.28 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது 'ஜனநாயகன்'.

ஜனநாயகன் ரிலீஸ்
தமிழக முதலமைச்சர் ஆகிவிட்ட நடிகர் விஜய்யின் கடைசி படம், உலகம் முழுவதும் 30 நாடுகளில் வெளியான படம் அதிக திரைகளில் வெளியானது என்றபோதிலும், வசூலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. படம் சில மாதங்களுக்கு முன்பே இணையத்தில் கசிந்தது, ரிலீஸ் தாமதம், பகவந்த் கேசரி ரீமேக் என்ற விமர்சனம் ஆகியவற்றால் வசூல் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூலி சாதனையை முறியடிக்காத ஜனநாயகன்
தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய முதல் நாள் வசூல் சாதனையைத் தன் கைவசம் வைத்துள்ள ரஜினிகாந்தின் 'கூலி' படத்தின் சாதனையை முறியடிக்கத் தவறி உள்ளது ஜனநாயகன். முதல் நாள் வசூலில் முதலிடத்தில் ரஜினியின் கூலி படமும், இரண்டாவது இடத்தில் விஜய்யின் லியோ படமும் உள்ளன.
முதல் நாள் வசூல் டாப் படங்கள்
ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படம் ஒட்டுமொத்த தமிழ் திரைப்படங்களில் முதல் நாளில் 151 கோடி வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. விஜய்யின் முதல் நாள் வசூலில் 'லியோ' படம் 148.5 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் விஜய்யின் 'GOAT' உள்ளது. இந்த லிஸ்ட்டில் 'ஜனநாயகன்' திரைப்படம் ரூபாய் 80 கோடி வசூலுடன் 9வது இடத்தில் உள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு வசூல் விவரங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் உலகம் முழுவதும் மொத்தம் ரூ. 112.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் அப்செட்
படத்திற்கு "ஏ" சான்றிதழ் காரணமாக விஜய் ரசிகர்களான குட்டீஸ்கள் பார்க்க வாய்ப்பில்லாமல் போனது, மற்ற மொழிகளில் உடனே வந்த எதிர்மறையான விமர்சனம் ஆகியவை மற்ற மாநில வசூலை பெரிதும் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் வசூல் நன்றாகவே இருந்து வருகிறதாம். எனினும், விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' வசூல் சாதனை படைக்கத தவறியது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.
தங்கள் ஆதர்ச நடிகரான விஜய் இதோடு சினிமாவில் நடிக்கமாட்டார் என்ற சோகத்தில் பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், அவரது கடைசி படமான 'ஜனநாயகன்' எதிர்பார்த்த வசூல் சாதனைகளைப் படைக்காதது விஜய் ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
