எல்லாரும் ஒரே மாதிரி இல்ல: பிரபல நடிகை காயடு லோஹர் டக்னு தந்த பதில்! பாடி ஷேமிங்குக்கு எதிராக சபாஷ்
சென்னை: எந்த சூழலிலும் நடிகைகளை உருவகேலி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நடிகை கவுரி கிஷனுக்கு திரைப்பிரபலங்கள் பலர் சமீபத்தில் ஆதரவு கருத்து தெரிவித்திருந்தனர்.. இந்நிலையில், டிராகன் பட நடிகை கயாடு லோஹரிடம், உருவ கேலி செய்வது பற்றின கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நடிகை தந்த பதில், சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
டிராகன் படத்தில் ஹீரோயின்களுள் ஒருவராக நடித்திருந்தவர் கயாடு லோஹர். இந்த படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை கயாடு லோஹர்.

இவரது ஒரிஜினல் பெயர் பல்லவி. இவர் முதன்முதலில் அறிமுகமானது கன்னட சினிமாவில்தான்.. அவர் நடித்த முதல் படத்தின் பெயர் முகில் பீட்.
ஆரம்பமே ஹிட் படங்கள்
ஆரம்பத்தில் மாடலிங்கில் இருந்தவர், சினிமாவிற்குள் நுழைந்து மலையாள படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அசாமில் பிறந்து, டெஸ்பூர் என்ற இடத்தில் வளர்ந்த இவர், தற்போது புனேவில் வசித்து வருகிறார்.
20 வயதில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு தற்போது 24 வயதாகிறது.. மலையாளம், கன்னடம், மராத்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். கயாடு வட இந்தியாவை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு தென்னிந்திய மொழி அவ்வளவாக தெரியாது. எனினும், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக்கொண்டு வருகிறார்.
டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹருக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில், இப்போது உருவாகி வரும் இதயம் முரளி படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
நடிகை கயாடு லோஹர்
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கயாடு லோஹர் கலந்து கொண்டிருக்கிறார்.. அப்போது அவரிடம் பாடிஷேமிங் செய்யப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நடிகை பதிலளிக்கும்போது, " நாம் எங்கு சென்றாலும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.. நாம் யாரும் அதில் இருந்து தப்பிக்க முடியாது. ஆனால், நாம் மற்றவர்கள் மீது கருணை உடன் இருக்க கற்று கொள்ள வேண்டும்.
ஒரே மாதிரி உடலமைப்பு
ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் வெவ்வேறு விதமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் ஒரே மாதிரி இருந்துவிட முடியாது. அப்படி எல்லோரும் ஒரே மாதிரி இருந்துவிட்டால் தனித்துவம் என்பதே இல்லாமல் போய்விடும்.
அனைவரிடமும் அன்பு செலுத்தம், கருணை காட்டவும் நாம் கற்றுக்கொண்டால், உலக வாழ்க்கை இன்னும் எளிமையாக இருக்கும்" என்று பதிலளித்து உள்ளார்.. கயாடு லோஹரின் இந்த பதில்தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..
சில நாட்களுக்கு முன்பு 96 பட நடிகை கவுரி கிஷன், உருவகேலி குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.. கவுரி கிஷனின் பதிலுக்கு, திரையுலகில் ஆதரவு பெருகியது. எந்த சூழலிலும் நடிகைகளை உருவகேலி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குஷ்பு, ரோகிணி, சின்மயி, ராதிகா என பல்வேறு திரைப்பட பிரபலங்கள் தங்களது கருத்துக்களை கூறியிருநத்னர்..
போலி வார்த்தைகள்
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட யூடியூபர், தனது கேள்வி குறித்து வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். ஆனால், அந்த வருத்தத்தை கவுரி கிஷன் ஏற்கவில்லை.. "மேடைத்தனத்துடன் கூடிய போலி வார்த்தைகளால் வெளிப்படும் மன்னிப்பை நான் ஏற்கமாட்டேன்" என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை கயாடு லோஹர் பாடிஷேமிங் குறித்து தெரிவித்துள்ள பதிலுக்கும் இணையவாசிகள் ஆதரவை தந்து வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications