புல்லரிக்க வைத்த சார்லி.. லாக்டவுன் படத்தினால் நெகிழ்ச்சி.. ரேவதி, கார்த்திக், முரளி பற்றி பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் டிசம்பர் 5ம் தேதி வெளிவர உள்ள படம் 'லாக் டவுன்'. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரானன ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகும். இப்படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த படத்தை பற்றி நடிகர் சார்லி பேசியிருக்கும் விஷயங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Rednool என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த நடிகர் சார்லி, "உண்மையான லாக்டவுன் நேரம் என்பது மனித இனத்துக்கே கடினமான காலம்.. அப்போதுதான் தான் நான் நேசித்த தாயாரை இழந்தேன்.. வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது..

Charle Lockdown Movie Actress Revathy

லாக்டவுன் படம்

இந்த லாக்டவுன் படம், வருகிற டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.. இந்த படத்தில் எனக்கு அப்பா கேரக்டர்.. ஒவ்வொரு அப்பாவும் தங்கள் மகளை நேசிப்பார்கள், ஆனால் இந்தப் படத்தில் உள்ள என்னுடைய கேரக்டர், நேசிப்பையும் தாண்டி, மகள் மீது அளவுக்கு மீறிய நம்பிக்கை வைத்திருப்பார்.. அது மிகச்சிறந்த விஷயம்..

இந்த லாக்டவுன் படத்தில் எம்ஜிஆருடன் நடித்த ரேவதி அம்மாவுடன் நடித்துள்ளதை பெருமையாக நினைக்கிறேன்.. சந்தோஷமாக நினைக்கிறேன்.. இந்த படத்தில் எனக்கு அம்மாவாக ரேவதி அம்மா நடித்துள்ளார்.. அன்று ஹீரோயினாக ரேவதி அம்மா நடித்த படங்களை நான் சிறுவனாக பார்த்துள்ளேன்.

ரேவதி அம்மா பெருமை

அவர் என்னிடம், சார்லி உங்க கூட நடிப்பது பெருமையாக இருக்கு என்கிறார்.. எனக்கு அதைக்கேட்டு புல்லரித்துவிட்டது..

'லாக்டவுன்' திரைப்படம் என்னுடைய வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமையும்.. டிசம்பர் 5 முதல் திரையரங்கங்களுக்கு வந்து படத்துக்கு ஆதரவு அளித்து, அதை ஒரு திருவிழாவாக ரசிகர்கள் மாற்ற வேண்டும்..

பொன்னியின் செல்வன்' போன்ற பிரம்மாண்டப் படங்களை எடுக்கும் லைக்கா நிறுவனம், தமிழில் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய, லாக்டவுன் போன்ற சிறிய படத்துக்கு ஆதரவு தருவது பெருமையான விஷயம்..

விதவித அப்பா கேரக்டர்

நான் பலவிதமான அப்பா கேரக்டர்களை ஏற்று நடித்துள்ளேன்.. ஆனால் உணர்வு பரிமாற்றங்கள் படத்துக்கு படம் மாறுபடுகிறது.. இந்த கேரக்டர் வெற்றிக்கு முக்கிய காரணமே இயக்குநர்கள் மட்டும்தான்.. அவர்கள் கொடுக்கும் கேரக்டரின் பின்னணியும், உணர்வுப் பரிமாற்றங்களுமே அந்த வேறுபாட்டை காட்டுகிறது.

நான் எத்தனை படங்களில் நடித்திருக்கிறேன் என்று எண்ணிக்கை வைத்திருந்தேன். 857-க்குப் பிறகு நான் எண்ணுவதை நிறுத்திவிட்டேன். எத்தனை படங்கள் நடித்திருக்கிறேன் என்று எண்ணுவது நடிகரின் வேலையல்ல, அது திரைப்பட ஆய்வாளர்களின் வேலை. டைரக்டர்களின் தரும் கேரக்டரை ஒழுங்காக செய்வதே என்னுடைய வேலை.

வெற்றிக்கொடி கட்டு படத்தில் என்னுடைய கேரக்டர் பலருக்கும் கண்ணீர் வரவழைப்பதாக கூறுவார்கள்.. பாக்யராஜ் படமான ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தில் ரிக்‌ஷாக்காரன் கேரக்டர் நேர்மையை சொல்லும் கேரக்டர்.. ஒரு எளிய மனதின் நேர்மையாக இருக்கும்போது, வலிமையாகவும் இருக்க முடியும் என்பதுதான் அந்த கேரக்டர். இதுபோன்ற கேரக்டர்களும், அதை சரியாக செய்யும்போதும்தான் நடிகனுக்கு மரியாதையை ஏற்படுத்தித் தருகிறது..

கார்த்திக், முரளி

கொஞ்ச நாட்களாக உங்களைக் காணவில்லையே என்பார்கள்.. இது எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள நடிகர்களை அவரவர் மொழியில் கேட்கத்தான் செய்வார்கள்.. 7வது மாடியில் இருந்து எட்டாவது மாடிக்கு படியேறிப் போவது யார் கண்களுக்கும் தெரியாது.. 8வது மாடிக்கு சென்றபிறகுதான், அவர் இன்னும் உயரத்தில் இருப்பது தெரியும். எனவே நடிகர்கள் காணவில்லை என்று சொல்லக்கூடாது.. அது அவர்களுக்கான ஒரு "Processing Time"

கார்த்திக், முரளி சார் முதல் சிவகார்த்திகேயன், ரியோ வரை புதிய தலைமுறை நடிகர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான விஷயம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+