அம்மா மடியிலேயே உயிரை விட்ட நடிகை மோனிஷா.. கடைசி நொடி சம்பவம்.. 21 வயதில் இப்படியொரு பெண் வாழ்ந்தாரா
சென்னை: மறைந்த நடிகை மோனிஷா, வாழ வேண்டிய 21 வயதில் இறந்துவிட்டார்.. நல்ல பெண், மிகப்பெரிய உயரத்தை அடையக்கூடிய நடிகையாக இருந்தவர்.. காலம் எடுத்த முடிவால் துரதிருஷ்டமான விபத்து ஏற்பட்டுவிட்டது.. மோனிஷாவுக்கு இன்றும் ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்..
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, கேரளாவில் கோழிக்கோட்டில் பிறந்தவர்.. பெங்களூரில் வளர்ந்தவர். 6 வயதிலிருந்தே பரதநாட்டியம் கற்றுக்கொண்டார்.. காரணம், இவரது அம்மா ஸ்ரீதேவி உண்ணியும் ஒரு கிளாசிக்கல் டான்சர்.. இப்போதும் நிறைய நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

மலையாள எழுத்தாளர், டைரக்டர் என்.டி வாசுதேவ நாயர் மோனிஷாவை ஒரு விழாவில் பார்த்துவிட்டு நடிக்க அழைத்துள்ளார்.. இதற்கு மோனிஷாவின் அம்மாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.. காரணம், மோனிஷாவின் அம்மாவும் அங்கு பிரபல நடிகைதான்.. கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்..
தேசிய விருது மற்றும் அறிமுகம்
இதையடுத்து, மோனிஷா தன்னுடைய 17 வயதிலேயே "நகக்ஷதங்கள்" என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.. அந்த முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். நிறைய மலையாள படங்களில் நடித்தார்..
ஹோம்லியாக, நம்ம பக்கத்து வீட்டு பெண்ணாகவே இருப்பார். அவர் நடித்த கேரக்டர்களும் அதுபோன்ற ஹோம்லி கேரக்டராகவே நடித்திருந்தார்.. இதற்கு பிறகுதான் தமிழில் நடிக்க துவங்கினார்.. பூக்கள் விடும் தூது படத்தில் தமிழில் அறிமுகமானார்.. பாடல்களும் ஹிட்டானது..
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன்
மொத்தமே 4 தமிழ் படங்கள்தான் மோனிஷா நடித்துள்ளார்.. இதில் கார்த்திக் உடன் நடித்த 'உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அந்த படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன்" பாடல் இன்றும் ரசிகர்கள் மனதை கவரும் ஒன்றாக உள்ளது..
1992ல் ஷூட்டிங் ஒன்றுக்காக திருவனந்தபுரத்திலிருந்து கொச்சி ஏர்போர்ட்டுக்கு அதிகாலை 4 மணிக்கு காரில் சென்றுள்ளார்..
விடிகாலை நேரம் என்பதால், மோனிஷா தன்னுடைய அம்மாவின் மடியிலேயே தூங்கிக் கொண்டிருந்தார்.. அப்போதுதான் கார் விபத்தில் சிக்கி, மோனிஷாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, காதில் இருந்து ரத்தம் கொட்டி அங்கேயே ஸ்பாட்டில் உயிரிழந்தார்.. மோனிஷா உட்பட 3 பேர் உயிரிழந்து, அம்மா மட்டும் உயிர் தப்பினார்.
மோனிஷா அக்கா, மோனிஷா அக்கா
மோனிஷாவுக்கு எப்போதுமே குழந்தைகள் மீது அதிக பிரியம் இருந்தது.. அதனால், 'சைல்டு சைக்காலஜி' படிக்க நிறையவே ஆசைப்பட்டார் மோனிஷா..
பள்ளி சிறுவர்கள் தினமும் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு செல்லும்போது, மோனிஷா வீட்டு வாசலில் நின்று கொண்டு, "மோனிஷா அக்கா" என்று கத்துவார்களாம்,..
உடனே அவர்களுக்கு தினமும் சாக்லேட் தருவாராம் மோனிஷா.. அவர் இறந்த பிறகும் அந்த சிறுவர்கள் வந்து வாசலில் மோனிஷா அக்கா, மோனிஷா அக்கா என்று கத்தியிருக்கிறார்கள்.. மோனிஷா இறந்தது தெரிந்தும்கூட மோனிஷாவை கூப்பிட்டு, சாக்லேட் தர மாட்டீங்களா அக்கா? என்று கத்துவார்களாம்.
வெறும் 21 வயசுதான்
அதேபோல தெருநாய்கள் மீது அதிகப் பாசம் கொண்டவர்.. தெருநாய்களும் மோனிஷா வீட்டு வாசலில் நிற்குமாம்.. அந்த நாய்களுக்கு தினமும் பால் ஊற்றி வந்துள்ளார்.. அந்த நாய்களுக்கு ஒரு பெரிய காப்பகம் அமைக்க வேண்டும் என்ற கனவும் மோனிஷாவுக்கு இருந்துள்ளது..
அவர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார் மோனிஷா.. அவரைச் நேரில் சந்தித்து போட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார்.. வெறும் 21 வயதிலேயே அவர் மறைந்தது தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications