’காவாலா’ தமன்னாவை விட கவர்ச்சி ஆட்டம் போட ஆளை தேடிப்பிடித்த நெல்சன்.. ஜெயிலர் 2வில் அட இவரா?
சென்னை: லால் சலாம் படத்தின் தோல்விக்குப் பிறகு ரஜினி ரசிகர்கள் இந்த ஆண்டு ரொம்பவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்படம் எந்தளவுக்கு ட்ரோல் செய்யப்பட வேண்டுமோ அந்தளவுக்கு ட்ரோல் செய்யப்பட்டு விட்டது. சமீபத்தில், நடைபெற்ற சினிமா ரவுண்ட் டேபிள் அரட்டையின் போது சிம்ரன் கூட பெரிய நடிகர்களின் பாக்ஸ் ஆபீஸ் கேம் புரியவில்லை என போட்டு பொளந்துள்ளார்.
எந்திரன் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்துக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் தரமான என்டர்டெயின்மென்ட் மற்றும் பக்கா மாஸ் படமாக ஜெயிலர் திரைப்படம் தான் அமைந்தது. ரஜினிகாந்தை இயக்க முடியாமல் பல பிரபல இயக்குநர்களே தர்பார், அண்ணாத்தா என திணறிக்கொண்டிருக்க கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என மிரட்டிய லோகேஷ் கனகராஜும் அந்த வரிசையில் இணைந்தார்.

அருணாச்சலம் என அட்டகாசமான படத்தைக் கொடுத்த சுந்தர். சியே சூப்பர் ஸ்டாரின் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும், அதிலிருந்து விலகி விட்டார். இந்நிலையில், ஹுகும், காவாலா என கலக்கலாக பாட்டு போட்டும், என் மருமகளை பத்தி என்ன சொன்னே என கேட்டு தலை சீவியதுமாக டைகர் முத்துவேல் பாண்டியனாக மிரட்டியிருந்தார்.
தமன்னாவின் காவாலா ஆட்டம்: சூப்பர் ஸ்டாரையே அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் போல மாற்றிவிட்டு தமன்னாவை வைத்து சூப்பரான ஐட்டம் நம்பரை அனிருத் இசையில் உருவாக்கி திரையில் தெறிக்கவிட்டு இருந்தார் நெல்சன். ஜெயிலர் படத்துக்கான அறிமுக அறிவிப்பாகவே காவாலா பாடலின் புரொமோவை தான் நெல்சன் மற்றும் அனிருத் இணைந்து வெளியிட்டு ரசிகர்களை கலகலப்பாக்கினர். ஜெயிலர் படத்தின் ஹுகும் பாடலுக்கு முதலாக ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியானதும் "காவாலா" பாடல் தான்.

ஜெயிலர் 2: ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தை வெயிட் பண்ணி தரமாக இயக்கி வருகிறார் நெல்சன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன், லால் சலாம் மற்றும் கூலி என 3 படங்களை முடித்து வரும் வரை காத்திருந்து ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார். தற்போது அந்த படத்துக்கான ஐட்டம் பாடல் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.
தமன்னாவுக்கு பதில் நோரா ஃபதேகி: ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடலில் தமன்னா செம குத்தாட்டம் போட்ட நிலையில், ஜெயிலர் 2 படத்திலும் அதே போன்ற ஒரு தரமான ஐட்டம் நம்பரை இசையமைத்துக் கொடுத்துள்ளார் அனிருத் என்கின்றனர். அந்த பாடலுக்கு பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை நோரா ஃபதேகி நடனமாடி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நோரா ஃபதேகி பாகுபலி படத்திலும் நடனமாடியவர் என்பது கூடுதல் தகவல்.
காஞ்சனா 4: ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4 படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் நோரா ஃபதேகி நடித்து வரும் நிலையில், ஜெயிலர் 2 படத்திலும் அவர் ஒரு ஸ்பெஷல் ஐட்டம் நம்பருக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் என்கின்றனர். அடுத்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே நோரா ஃபதேகி மாறிவிடுவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications