Parasakthi 7th Day Box Office: பராசக்தி 7வது நாள் வசூல் இத்தனை கோடி! சிவகார்த்திகேயனுக்கு குவியுது கலெக்ஷன்
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் 'பராசக்தி' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியது. ஆரம்பத்திலேயே இந்த படம் அரசியல், சமூக கருத்துக்களை மையமாக வைத்து உருவாகியுள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக, ஹிந்தி திணிப்புக்கு எதிராக 1960களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருப்பது, தமிழர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வத்தை உருவாக்கியது.

இதற்கு போட்டியாக திரைக்கு வரவிருந்த 'ஜனநாயகன்' திரைப்படம் திடீரென ரிலீஸில் இருந்து விலகியதால், 'பராசக்தி' படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் கிடைத்தன. இதனால் ஆரம்ப நாட்களில் வசூல் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெரிய நட்சத்திர பட்டாளம், அனுபவம் வாய்ந்த இயக்குநர், சமூக அரசியல் களம் என அனைத்து அம்சங்களும் இந்த படத்தை ஒரு "பெரிய சம்பவம்" ஆக மாற்றும் என திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டது.
எதிர்பார்ப்பும் நிஜமும்
படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களின் கருத்துக்கள் கலவையாக இருந்தன. கதையின் மையம் வலுவானதாக இருந்தாலும், அதை திரையில் கொண்டு வந்த விதம் முழுமையான திருப்தியை தரவில்லை என்பதே பெரும்பாலான விமர்சனங்களின் சாராம்சம்.
ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் மையமாக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள், படத்தில் காதல் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருப்பதைப் பார்த்து சற்று ஏமாற்றம் அடைந்தனர். அந்த காதல் பகுதிகள் கதையின் ஓட்டத்திற்கு பெரிதாக உதவவில்லை என்றும் சிலர் கூறினர்.
திரைக்கதை
சுதா கொங்கரா இதற்கு முன்பு எடுத்த 'இறுதிச்சுற்று', 'சூரரைப் போற்று' போன்ற படங்கள் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவை. அதனால் 'பராசக்தி'யிடமும் அதே அளவிலான தாக்கம் இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இம்முறை திரைக்கதை அமைப்பில் சற்று தடுமாற்றம் இருப்பதாக ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தனர். சில காட்சிகள் நீளமாக இருப்பதாகவும், முக்கியமான அரசியல் தருணங்கள் இன்னும் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
நெகட்டிவ் விமர்சனங்களும் சர்ச்சையும்
படம் வெளியான இரண்டாவது நாளிலிருந்தே சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்தன. இதுகுறித்து இயக்குநர் சுதா கொங்கரா அளித்த ஒரு பேட்டியில், இந்த விமர்சனங்களில் சில குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்களால் திட்டமிட்டு பரப்பப்படுவதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு எதிராக, "முந்தைய படங்களை பாராட்டிய ரசிகர்களே இப்போது விமர்சனம் சொன்னால் அது ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?" என ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.
பராசக்தி வசூல் நிலவரம்
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான 'பராசக்தி', மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என கணிக்கப்பட்டது. குறிப்பாக முதல் வார முடிவில் 50 கோடி ரூபாயை கடக்கும் என பலரும் நம்பினர். ஆனால் Sacnilk இணையதளத்தின் தகவலின்படி, ஏழாவது நாளில் படம் 4.75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஒரு வார முடிவில் இந்தியாவில் மட்டும் மொத்தமாக 41 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்பார்த்த அளவுக்கு வசூல் எட்டாதது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றமாக இருந்தாலும், படம் முழுக்க தோல்வி என சொல்ல முடியாத நிலையே காணப்படுகிறது. மெகா ப்ளாக் பஸ்டர் பட்டத்தை தவறவிட்டாலும், சுமார் ஹிட் என்ற நிலைமைக்கு படம் வந்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், சமூக அரசியல் கருத்துகளை மையமாக வைத்து பேசப்பட்ட படமாக 'பராசக்தி' தொடர்ந்து விவாதங்களை கிளப்பி வருகிறது. வசூலிலும் விமர்சனங்களிலும் கலவையான நிலையை சந்தித்தாலும், இந்த படம் பற்றி பேசப்படுவது மட்டும் நிச்சயம் குறையவில்லை என்பதே தற்போதைய உண்மை.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications