Parasakthi first review: பராசக்தி படம் எப்படி இருக்கு? வெளிநாட்டில் இருந்து வந்த முதல் ரிவ்யூ!
சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான திரைப்படம் 'பராசக்தி'. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், அவரின் 25-ஆவது திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. அதேபோல், இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு இது 100-ஆவது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைப் பற்றிய வெளிநாட்டு ரசிகர்கள் கொடுத்த ரிவ்யூ வெளியாகி இருக்கிறது.
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம், வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனால், படத்தின் இந்திய சென்சார் சான்றிதழ் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், இது தொடர்பான குழப்பம் சில நாட்களாக நீடித்து வருகிறது.

அதே நேரத்தில், வெளிநாடுகளில் சென்சார் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, படம் முழுமையாக ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த சூழ்நிலையில், வெளிநாடுகளில் படத்தை பார்த்த சிலர் தெரிவித்துள்ள முதல் விமர்சனங்கள், படக்குழுவினருக்கு நம்பிக்கையையும், ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பையும் இரட்டிப்பாக்கியுள்ளது.
கமர்ஷியல் திரைக்கதை
'பராசக்தி' படத்தின் கதை, 1965-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மொழிப்பற்று, அடையாள அரசியல், தமிழ் உணர்வு போன்ற மிக முக்கியமான சமூக - அரசியல் அம்சங்களை பேசும் கதை என்பதால், இந்த படம் முழுக்க முழுக்க ஆர்ட் சினிமாவாக மாறிவிடுமா? என்ற சந்தேகம் ஆரம்பத்தில் பலரிடமும் இருந்தது.
அதுவும், அதே பொங்கல் பண்டிகை காலத்தில் வெளியாக உள்ள விஜய்யின் 'ஜன நாயகன்' போன்ற பக்கா கமர்ஷியல் படத்துடன் நேரடியாக மோத வேண்டிய சூழ்நிலையில்,"பராசக்தி கமர்ஷியல் இல்லையென்றால் ஒர்க்-அவுட் ஆகுமா?" என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.

வெளிநாட்டு ரிவ்யூ
இந்த எல்லா சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் வகையில், வெளிநாட்டில் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ள விமர்சனங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அவர்கள் கூறுவதாவது: சுதா கொங்கரா, மொழிப்போர் போன்ற சென்சிட்டிவ் விஷயத்தை மிகுந்த சீரியஸுடன் கையாள்ந்திருக்கிறார். அதே நேரத்தில், திரைக்கதை நகர்வு முழுக்க செம கமர்ஷியல். எமோஷன், மாஸ், அரசியல் கருத்து - மூன்றையும் சரியான அளவில் மிக்ஸ் செய்துள்ளார். மொழிப்போர் தொடர்பான காட்சிகள் பார்ப்பவர்களை சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன
குடும்பமாக வந்து பார்க்கும் ரசிகர்களையும் தியேட்டரில் கட்டிப்போடும் அளவுக்கு படம் இருக்கிறது, என்று வெளிநாட்டு பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர்.

படக்குழு செம உற்சாகம்
இந்த ஆரம்ப விமர்சனங்கள் வெளியாகியதும், மொத்த படக்குழுவும் செம உற்சாகத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன."இது வெறும் கருத்து படமல்ல... பந்தயம் அடிக்கும் கமர்ஷியல் படம்" என்ற நம்பிக்கையில் படக்குழு தற்போது உள்ளது.
கூடுதல் எதிர்பார்ப்பு
சிவகார்த்திகேயனின் 25-ஆவது படம், ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100-ஆவது இசைப் படம், சுதா கொங்கராவின் அரசியல் - சமூக பின்னணியிலான இயக்கம் என பல முக்கியமான மைல்கற்கள் ஒன்றாக இணைந்துள்ளதால், 'பராசக்தி' மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய சென்சார் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைத்து, திட்டமிட்டபடி படம் திரைக்கு வந்தால், பொங்கல் பந்தயத்தில் 'பராசக்தி' பெரிய ஆட்டம் போட வாய்ப்பு உள்ளது என்று சினிமா வட்டாரங்கள் கணிக்கின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications