கலைஞர் எனக்கு கொடுத்த பட்டம்.. எம்ஆர் ராதா பொண்ணுனு சொல்ல கூட விடல.. ராதிகா உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தாய் கிழவி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மிக விமர்சையாக நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என நிரம்பியிருந்த இந்த விழாவின் ஹைலைட்டாக மாறியது நடிகை ராதிகா சரத்குமார் பேசிய உணர்ச்சி மிகுந்த உரை தான்.

கலைஞர் கொடுத்த பட்டம்
படத்தைப் பற்றிய தனது அனுபவத்தை பகிர்ந்த அவர், தன்னுடைய பெயருக்கு முன்பு பட்டம் போடுவது பிடிக்காதவர் என்று முதலில் கூறினார். ஆனால் "கலையரசி" என்ற பட்டத்தை தந்தவர் மு. கருணாநிதி என்பதால் அந்த பட்டம் தனது வாழ்க்கையில் ஒரு அடையாளமாக மாறிவிட்டதாக நினைவுகூர்ந்தார்.
சரத்குமார் கொடுத்த அட்வைஸ்
"அந்த பட்டத்தை என் பெயருக்கு முன்பு போடலாமா என்று நான் முதலில் தயங்கினேன். அப்போது என் கணவர் சரத்குமார் 'அது சாதாரண பட்டம் இல்லை... கலைஞர் கொடுத்த பட்டம்... கண்டிப்பாக போட வேண்டும்' என்று சொல்லிய பிறகு தான் அதன் மதிப்பு எனக்கு முழுமையாக புரிந்தது" என்று அவர் கூறிய போது அரங்கமே கைதட்டலால் முழங்கியது.
அதைத்தொடர்ந்து தனது ஆரம்ப கால சினிமா பயணத்தை நினைத்துக் கொண்ட அவர் மேலும் உருக்கமாகப் பேசினார். "நான் சினிமாவுக்கு வந்த புதுசில் ' எம்.ஆர். ராதா மகள்' என்று சொல்லக்கூடாது, அந்த பெயரை பயன்படுத்தக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் இருந்தது. பல தடைகளை கடந்து இன்று என் நடிப்பால் எனக்கென ஒரு இடம் உருவாகி இருக்கிறது. இந்த தாய் கிழவி படத்தின் மூலம் நான் என் அப்பாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறேன். 'எம்.ஆர். ராதா மகள்' என்று நான் நிரூபித்து விட்டேன்" என்று கண்ணீருடன் கூறினார்.
இந்த உரை நிகழ்ச்சியின் உணர்ச்சி பூர்வமான தருணமாக மாற, மேடையில் இருந்த பிரபலங்களும் ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டினர்.
படம் குறித்து
இப்படத்தின் கதைக்களம் ஒரு குடும்பத்தில் நடக்கும் சொத்து பிரச்சனையை மையமாக கொண்டதாக இருந்தாலும், அதை சொல்லும் விதம் தான் முற்றிலும் புதிதாக உள்ளது. கணவர் உயிரிழந்த பிறகு வாரிசுகள் சொத்தில் பங்கு கேட்க, "சாகுற வரைக்கும் என் சொத்தை நானே வைத்துக்கிட்டு அனுபவிப்பேன்" என்று நேராக எதிர்கொள்ளும் வயதான பெண். அதன் பிறகு திடீரென படுக்கையிலேயே ஆகிவிடும் அவர், சொல்ல முயலும் ஒரு ரகசியம்... அதை புரிந்து கொள்ள முடியாமல் சுற்றி திரியும் வாரிசுகள்... இதை முழுக்க நையாண்டி கலந்த டார்க் காமெடி பாணியில் சொல்லியிருப்பது டிரைலரிலேயே தெரிகிறது.
இந்த படத்தின் மிகப்பெரிய ஹைலைட் ராதிகா சரத்குமார் எடுத்திருக்கும் அவதாரம். ப்ரோஸ்தெடிக் மேக்கப்பில் முழுக்க வயதான பாட்டியாக, ஊர் பாஷையில் பேசும் விதம், இடைச்செருகல் கெட்ட வார்த்தைகள், புகைப்பிடிக்கும் காட்சிகள்-இவை எல்லாம் அவர் இதுவரை செய்திராத ஒரு முற்றிலும் வேறுபட்ட நடிப்பை காட்டுகிறது. ஒரு பக்கம் சிரிக்க வைக்கும், மறுபக்கம் கதையின் பின்னணியில் ஒரு வலி இருப்பதை உணர்த்தும் அந்த லேயர்டான பர்ஃபார்மன்ஸ் தான் படத்தின் முதுகெலும்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெய்லர் வெளியாகியதும் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ராதிகாவின் தோற்றம், பேச்சு, எமோஷனல் காட்சிகள் குறித்து ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒருபுறம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உயர்ந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் தனது வாழ்க்கை பயணத்தை வெளிப்படையாக பகிர்ந்த ராதிகா சரத்குமார் உரை, இந்த விழாவை சாதாரண ட்ரெய்லர் லாஞ்சாக இல்லாமல் நினைவில் நிற்கும் நிகழ்ச்சியாக மாற்றியுள்ளது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications