சூப்பர் மார்க்கெட் வேலையில் ரியல் ஹீரோ அப்பாஸ்! ஒரே இரவில் உச்சம் தொட்டவரின் முதுகில் குத்திய நடிகர்
சென்னை: தன்னுடைய ஒரே ஒரு படத்துக்கு பிறகு, அப்பாஸ்க்கு அடுத்தடுத்து 23 படங்கள் புக் ஆகிவிட்டன. ஆனால், அந்த 23 படத்துக்கும் கதை கேட்கல, யார் டைரக்டர் என்று கேக்கல, யார் ப்ரொடியூசர் என்றும் கேக்கல. இதுக்கெல்லாம் காரணம் அனுபவம் இல்லாமைதான்.. அதனால், அப்பாஸை சம்பாதிப்பதிலேயே அப்பாஸின் மேனேஜர் குறியாக இருந்தார் என்று பிரபல தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். மேலும் சினிமாவில் அப்பாஸுக்கு கிடைத்த வீழ்ச்சி குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி, "அப்பாஸை யாராலும் மறக்க முடியாது.. மிகப்பெரிய அறிமுகம் காதல் தேசம் படத்துல வந்து அப்பாஸ்க்கு கிடைத்தது.. பெங்களூரில் படித்து வளர்ந்தவர்தான்..

ஆடிஷனில் அப்பாஸ்
மாடலிங் நிறைய செய்தபோது, காதல் தேசம் படத்தின் ஆடிஷனில் அப்பாஸ் கலந்து கொண்டார்.. அப்பாஸ் அதில் செலக்ட் ஆகிவிட்டார். காதல் தேசம் படத்தில் மகாபலிபுரத்தில்தான் அதுக்கு காலேஜ் போல செட் போட்டிருந்தார்கள்.. முஸ்தபா என்ற பிரெண்ட்ஷிப்புக்கான பாடல், நேஷனல் கீதமாகிவிட்டது.. அநத்வகையில், ஒரே நைட்டில் ஸ்டார் ஆன ஒரு ஹீரோ அப்பாஸ்தான்.
பெண்கள் எல்லாருமே அப்பாஸ் அப்பாஸ் என்று உயிரைவிட ஆரம்பிச்சிட்டாங்க.. உருக ஆரம்பிச்சிட்டாங்க... அந்த அளவுக்கு சாமிங்கா, குட் லுக்கிங்கா இருப்பாரு.. முதன்முதலில் பாலிவுட் ஸ்டார் போல தமிழ் ஹீரோவாக இருந்தார்..
வரிசையாக 23 படங்கள்
அந்த ஒரே ஒரு படத்துக்கு பிறகு, அப்பாஸ்க்கு அடுத்தடுத்து 23 படங்கள் புக் ஆகிவிட்டன. ஆனால், அந்த 23 படத்துக்கும் கதை கேட்கல, யார் டைரக்டர்ன்னு கேக்கல, யார் ப்ரொடியூசர்ன்னும் கேக்கல. இதுக்கெல்லாம் காரணம் அனுபவம் இல்லாமைதான்.. அதனால், அப்பாஸை சம்பாதிப்பதிலேயே அப்பாஸின் மேனேஜர் குறியாக இருந்தார்.
அதனால், ஜீன்ஸ் படத்துக்காக ஷங்கர், அப்பாஸை அணுகியிருக்கிறார்.. அதற்கு அந்த மேனேஜர், 'இல்ல சார், அவரு 23 படத்துக்கு மேல கமிட் ஆயிருக்காரு.. ஒரு நாள் கூட அவரால தேதி தர முடியாது.. நோ சான்ஸ்" என்று சங்கரிடம் சொல்லிவிட்டார்.
அதேபோல காதலுக்கு மரியாதை படத்துக்கு டைரக்டர் பாசில், அப்பாஸை அணுகியபோது, இதுபோலவே அந்த மேனேஜர் சொல்லிட்டாரு.. இப்படியே அப்பாஸுக்கு வந்த வாய்ப்புகள் கை நழுவி போயின. அத்துடன், ஏற்கனவே அப்பாஸ் நடித்த படங்களும் தோல்வி அடைந்துவிட்டன..
பாத்ரூம் விளம்பரம்
இப்படித்தான் மார்க்கெட்டை இழந்தார் அப்பாஸ்.. அப்போதுதான் தன்னுடைய தவறுகளை உணர துவங்கினார்.. வாய்ப்புகளும் தொடர்ந்து வராததால், ஹேர் பிக்னு ஒரு பாத்ரூம் கிளீனிங் விளம்பர பட வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.
அந்த விளம்பரம் நடித்ததுமே, எல்லாரும் பயங்கரமாக அப்பாஸை ட்ரோல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க... கேலியும், கிண்டலும் அதிகமாகிவிட்டது.
அப்போது அப்பாஸ் ஒரு பேட்டியில், "நான் ஹார்ட்பிக் விளம்பரத்தில நடிச்சதுல என்ன தப்பு இருக்கு? ஹார்பிக்கு வந்து பாத்ரூம் சொன்னேன்.. ஹார்பிக்கை குடிக்கவா சொன்னேன்.. எந்த தொழிலையும் ஏன் ஏளனமாக பேசுறீங்க? என்னுடைய இலையில் நான் சாப்பிட வரணும்னா, நான் வந்து இறங்கி உழைக்கணும்.. என்னுடைய வருமானத்துக்காக என் குடும்பத்தை காப்பாத்துறதுக்காக நடிச்சேன்" என்று பதிலடி தந்தார்.
முதுகில் குத்திய நடிகர்
அந்த நேரத்தில் CCL கிரிக்கெட் போட்டியை ஒருங்கிணைக்க முயற்சித்தார்.. தெலுங்கு கர்நாடகா கேரளா தமிழ்நாடு எல்லா நடிகர்களையும் ஒன்று திரட்டி, தன்னுடைய பணத்தையும் கொட்டி, விளம்பரங்களையும் பிடித்து, CCL கிரிக்கெட்டை துவங்கினார் அப்பாஸ்.. இதற்காக தன்னுடைய மூளையை பயன்படுத்தி, சிறப்பான முறையில் தென்னிந்திய நடிகர்களை ஒருங்கிணைத்தார்..
அனைத்து மொழிகளிலும் நடிகர்களை இணைப்பது சிரமமான விஷயம். ஆனால் அப்பாஸ் அதில் சக்ஸஸ் செய்தார், வருமானமும் அதில் ஓரளவு வர துவங்கியது.
ஆனால் அப்போதுதான் அப்பாஸூக்கு துரோகம் நடந்தது.. "என் முதுகில் விஷால் குத்தி துரோகம் செய்துட்டார், அந்த கிரிக்கெட் போட்டியை நடத்தியது நான்தான் என்பதை வெளியே தெரியவிடாமல் செய்துட்டார், வருமானத்தையும் கிடைக்க விடாமல் செய்துட்டாரு, என் பணத்தையும் திருப்பி எடுக்க முடியாமல் செய்துட்டாரு, என்னால அந்த போட்டியையும் தொடர முடியாமல் போய்விட்டது.
இங்கே என்னால் போராட முடியும்.. அதற்கான மனதைரியமும் என்னிடம் உள்ளது.. ஆனால், போராடுறதை விட ஒரு நிம்மதியான வாழ்க்கையே தேவை என்றுதான் நான் நியூஸ்லாந்துக்கு போயிட்டேன்" என்று கூறியிருந்தார்.
சூப்பர் மார்க்கெட், பாத்ரூம் கிளீனர்
ஆனால், நியூசிலாந்தில் அப்பாஸ், பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுருக்காரு. பாத்ரூம் கிளீன் பண்ணியிருக்காரு.. சூப்பர் மார்க்கெட்டில் வேலை பாத்துருக்காரு. கன்ஸ்ட்ரக்ஷன் வேலைகள் பண்ணியிருக்காரு. இப்படி கிடைக்கிற எல்லா வேலையையும் செய்திருக்கிறார்த.
இதை பற்றி அப்பாஸ் சொல்லும்போது, 'நியூசிலாந்தில் என்னை யாருன்னே யாருக்கும் தெரியாது, எல்லா வேலையும் பார்க்கிறேன்.. இன்னைக்கு ஒரு வெற்றியாளனாக இருக்கேன்.. எனக்கு கிடைச்சது போதும்.. நான் சந்தோஷமா இருக்கேன்.. மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமா இருக்கேன்" என்று பக்குவத்துடன் அப்பாஸ் அந்த பேட்டியில் பேசியிருந்தார்.
திரையில் ஹீரோவாக நடித்து பிறரை ஏமாற்றும் ஒருசிலருக்கு மத்தியில், நிஜத்திலேயுமே அப்பாஸ் ஹீரோவாகவே உள்ளார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications